Leo Box Office Prediction: முதல் நாளே 100 கோடி வசூல் ரெடி.. முதல் முறை சொல்லி அடிக்கப் போகும் விஜய்!
சென்னை: லியோ படம் வரும் அக்டோபர் 19ம் தேதி வெளியாக உள்ள நிலையில், அந்த படத்தின் முதல் நாள் வசூல் உலகம் முழுவதும் 100 கோடியை தாண்டும் என ஹாட் அப்டேட்கள் வெளியாகி உள்ளன.
விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான பீஸ்ட் மற்றும் இந்த ஆண்டு வெளியான வாரிசு திரைப்படங்கள் விமர்சன ரீதியாக சொதப்பிய நிலையிலும் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூல் சாதனையை பெற்றிருந்தது.

வசூல் மன்னன் விஜய்: பீஸ்ட் திரைப்படம் 250 கோடி ரூபாய் வசூலும், வாரிசு திரைப்படம் 300 கோடி ரூபாய் வசூலும் ஈட்டி இருந்தன. இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படத்தின் பட்ஜெட்டை 300 கோடி ரூபாய் எனக் கூறப்படும் நிலையில், ஜெயிலர் படத்தின் வசூலை எல்லாம் எளிதில் லியோ முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, வட இந்தியா என இந்தியா முழுவதும் நடிகர் விஜயின் லியோ படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. இந்த முறை நடிகர் விஜய் எந்த ஒரு புரமோஷன் செய்யாத நிலையிலும், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இதுவரை 92 பேட்டிகளுக்கும் மேல் கொடுத்து லியோ படத்தை புரமோட் செய்து வருகிறார்.

லோகேஷ் கனகராஜ் சம்பவம்: ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படம் தென்னிந்தியா மற்றும் ஓவர்சீஸில் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்திய நிலையில், அதைவிட அதிகமாக லியோ திரைப்படம் வசூல் வேட்டை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று இரவு மல்டி பிளக்ஸ் திரையரங்குகள் டிக்கெட் புக்கிங் தொடங்கிய நிலையில், தீயாக அனைத்து டிக்கெட்டுகளும் சில மணி நேரங்களில் விற்றுத் தீர்ந்துள்ளன. பல இடங்களில் சர்வர் டவுன் ஆன நிலையிலும், டிக்கெட்டுகள் பல ரசிகர்களுக்கு கிடைக்கவே இல்லை.
100 கோடி வசூல்: பாக்ஸ் ஆபிஸ் டிராக்கர் ரமேஷ் பாலா தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் முதல் நாளே உலகளவில் 100 கோடி வசூலை ஈட்டப் போகிறது என்றும் ப்ரீ புக்கிங் உலகளவில் விண்ணை தொட்டுள்ளது என்றும் பதிவிட்டுள்ளார். முதல் முறையாக நடிகர் விஜய் நடித்த படம் முதல் நாளே 100 கோடி வசூலை எட்ட உள்ள நிலையில், 5 நாட்கள் விடுமுறை என்பதால், அதிரடியாக 500 கோடி வசூலை குவிக்க வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.


Click it and Unblock the Notifications