விஜய்யின் மெர்சல் படம் ஃபிளாப்பா?.. தயாரிப்பாளர் என்ன சொன்னார் தெரியுமா?.. ஆடி வெள்ளி ஹீரோயின் யாரு?
சென்னை: அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த மெர்சல் திரைப்படம் கடந்த 2017ம் ஆண்டு வெளியானது. பக்தி படங்களை எடுத்து வந்த தேனாண்டாள் பிலிம்ஸ் அந்த படத்தை பிரமாண்டமாக தயாரித்து வெளியிட்டது. அதன் பின்னர், பெரிதாக எந்தவொரு படத்தையும் அந்த நிறுவனம் தயாரிக்காத நிலையில், மெர்சல் படம் மிகப்பெரிய தோல்விப் படம் என்றும் தயாரிப்பாளருக்கு நஷ்டத்தை கொடுத்துவிட்டதாகவும் ஹேட்டர்கள் தொடர்ந்து ட்ரோல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த தேனாண்டாள் பட நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஹேமா ருக்மணி மெர்சல் படம் குறித்தும் அதன் விமர்சனங்கள் குறித்தும் வெளிப்படையாக பேசியுள்ளார். மேலும், அடுத்ததாக தங்கள் நிறுவனத்தில் உருவாகவுள்ள பிரமாண்ட படம் குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார் ஹேமா ருக்மணி.

ராஜா ராணி படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமான ஷங்கரின் உதவி இயக்குநரான அட்லீ விஜய்யை வைத்து எடுத்து தெறி படம் வெற்றிப் பெற்றதை தொடர்ந்து மீண்டும் விஜய்யுடன் இணைந்து உருவாக்கிய படம் தான் மெர்சல்.
விஜய்யின் மெர்சல்: கடந்த 2017ம் ஆண்டு வெளியான மெர்சல் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக விஜய்க்கு மாறியது. அப்பா மற்றும் ட்வின்ஸ் மகன்கள் என மொத்தம் 3 வேடங்களில் விஜய் நடித்து மிரட்டியிருப்பார். பாஜகவுக்கு எதிரான வசனங்கள், மருத்துவத்துறையில் நடைபெறும் மோசடி என பல அரசியல் விஷயங்களை அந்த படத்தில் அட்லீ அடுக்கியதை பார்த்து அசந்துப் போய் தான் ஷாருக்கான் மெர்சல் மாதிரி ஒரு படம் பண்ண வேண்டும் என ஜவான் படத்தை இயக்கும் வாய்ப்பை அட்லீக்கு கொடுத்தார்.
மெர்சல் லாபமா? நஷ்டமா?: நாகம், ஆடிவெள்ளி, துர்கா, செந்தூர தேவி, பாளையத்து அம்மன், கோட்டை மாரியம்மன், கண்ணா லட்டு தின்ன ஆசையா, மெர்சல் உள்ளிட்ட பல படங்களை தயாரித்த தேனாண்டாள் நிறுவனம் இந்த ஆண்டு வெளியான மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங் படத்தை தயாரித்து வெளியிட்டனர். யூடியூபர் ஹரி பாஸ்கர் மற்றும் லாஸ்லியா நடித்த அந்த படம் பெரிதாக ஓடவில்லை. இந்நிலையில், யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் மெர்சல் படம் நஷ்டம் என சிலர் பேசுகிறார்களே என்கிற கேள்விக்கு பதிலளித்த ஹேமா, தங்கள் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட படங்களிலேயே மெர்சல் தான் பெருமைக்குரிய படம். மெர்சல் 2 படத்தை தயாரிக்கவும் நாங்க ரெடியா இருந்தோம். ஆனால், தளபதியின் டேட் தான் கிடைக்கவில்லை. சமூக வலைதளங்களில் பரப்பப்படும் போலி விமர்சனங்களை எல்லாம் கண்டுக் கொள்ளத் தேவையில்லை என்றார்.
ஆடி வெள்ளி 2 படத்துல ஹீரோயின் யாரு?: மூக்குத்தி அம்மன் 2 படத்திலும் நயன்தாரா நடித்து வரும் நிலையில், தேனாண்டாள் பிரமாண்டமாக தயாரிக்கவுள்ள ஆடி வெள்ளி 2 படத்தில் முன்னணி நடிகையை புக் செய்ய முயற்சிகள் செய்து வருவதாகவும் அனைத்து ரசிகர்களையும் கவரக்கூடிய நடிகையை ஆடி வெள்ளி படத்தில் நடிக்க வைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக கூறுகின்றனர். த்ரிஷா, சமந்தா உள்ளிட்ட நடிகைகள் நடிக்க வாய்ப்பு இருக்கா என்றும் ரசிகர்கள் இப்பவே எதிர்பார்ப்புகளை எகிற விட்டு வருகின்றனர். மெர்சல் படத்தில் சமந்தா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











