நீங்க உள்ளே வராதீங்க.. நிருபரை பார்த்து டென்ஷனான விஜய்யின் அம்மா.. திடீர்னு என்ன ஆச்சு!

சென்னை: நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தனது மனைவி ஷோபாவுடன் காஞ்சிபுரம் காமாட்சியம்மன் திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்தார். அப்போது, விஜய்யின் அம்மா, பத்திரிக்கையாளர்கள் தொடர்ந்து வந்ததால், உள்ளே வரக்கூடாது என்று திடீரென அவர்களை பார்த்து கத்தினார். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

தமிழ் சினிமாவில் அனைவரும் விரும்பும் நடிகராக இருக்கும் நடிகர் விஜய், தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இரண்டு விதமான கதாபாத்திரத்தில் விஜய் நடிப்பதால், இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்திலிருந்து முதல் சிங்கிள் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இத்திரைப்படம் செப்டம்பர் 5ந் தேதி வெளியாக உள்ளது.

Vijay SA Chandrasekar Shoba Kanchipuram temple

தளபதி விஜய்: நடிகர் விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி ஒன்றை துவங்கினார். ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களை முடித்து விட்டு, சினிமாவில் இருந்து முழுவதுமாக விலகி முழுநேர அரசியலில் ஈடுபட போவதாகவும் அறிவித்துள்ளார். அதன்படி தற்போது நடித்து வரும் கோட் படத்தை முடித்து விட்டு அடுத்ததாக தளபதி 69 படத்திற்கு பின் விஜய், முழுவதுமாக அரசியலில் கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

திடீர்னு என்ன ஆச்சு: நடிகர் விஜய், அரசியல் கட்சி அறிவிப்பிற்கு பின் முதன்முறையாக தன்னுடைய பெற்றோரை சந்தித்து எடுத்துக்கொண்ட போட்டோக்கள் இணையத்தில் டிரெண்டான நிலையில், விஜய் பெற்றோர் உலக புகழ்பெற்ற காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். அப்போது, பத்திரிக்கையாளர்கள் இவர்களை தொடர்ந்து வந்து கொண்டே இருந்ததால், கடுப்பான ஷோபா, நீங்க வரக்கூடாது…வரக்கூடாது என்று ஆக்ரோஷமாக கத்தினார். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மகனுக்கு வாழ்த்துக்கள்: இதையடுத்து, எஸ்.ஏ.சந்திரசேகரை சூழ்ந்து கொண்ட பத்திரிக்கையாளர்கள், விஜய்யின் அரசியல் வருகை குறித்து கேள்வி எழுப்பினர். அப்போது பேசிய அவர், மகன் கட்சி ஆரம்பித்ததற்கு எனது வாழ்த்துக்களும்,ஆசிர்வாதங்களும் எனது பிள்ளைக்கு எப்போதும் இருக்கும் என்றும் கட்சியில் தற்போது தலையீடு இல்லையென்ற செய்தியாளர் கேள்விக்கு எப்போது இருக்கும் என எஸ்.ஏ.சந்திரசேகர் பதில் அளித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X