விஜய்யின் பரந்தூர் நாடகம் ஹிட்.. சினிமாவுல டப்பிங் பேசுறதுனு நினைச்சிட்டாரு போல.. விளாசிய பிரபலம்

சென்னை: அரசியல் கட்சி ஆரம்பித்திருக்கும் விஜய் சமீபத்தில் பரந்தூருக்கு சென்று அங்கு விமான நிலையம் அமைப்பதற்கு எதிராக போராடும் மக்களை சந்தித்தார். அதன் பிறகு சில நிமிடங்கள்வரை பிரசார வாகனத்தில் நின்றபடி பேசினார். அவரது பேச்சு பலரிடம் கடும் கண்டனத்தை பெற்றுவருகிறது. இந்தச் சூழலில் பிரபல பத்திரிகையாளரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன் விஜய்யின் பரந்தூர் பயணம் குறித்து கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார்.

தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கியிருக்கும் விஜய் முழு நேர அரசியல்வாதியாக மாறியிருக்கிறார். அவர் சமீபத்தில்கூட பரந்தூருக்கு தன்னுடைய பிரசார வாகனத்தில் சென்றார். அங்கு போராடும் 13 கிராம மக்களை சந்தித்த அவர் பேசவும் செய்தார். அவரது பேச்சு தவெக தொண்டர்களிடம் வரவேற்பை பெற்றாலும் பொது மக்களிடம் போதிய வரவேற்பை பெறவில்லை. பரந்தூர் விசிட்டை முடித்திருக்கும் அவர் அடுத்ததாக புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலுக்கு செல்லவிருப்பதாக கூறப்படுகிறது.

vijay bayilvan ranganathan tamizhaga vetri kazhagam

பயில்வான் ரங்கநாதன் விமர்சனம்: இந்நிலையில் விஜய்யை கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார் பயில்வான் ரங்கநாதன். இதுகுறித்து அவர் ஒரு வீடியோவில், "விஜய் போட்ட பரந்தூர் நாடகம் சூப்பர் ஹிட். ஒரு நிமிடம்தான் பேசினார். ஆனல் ஐந்து முறை பேப்பரை பார்க்கிறார். சினிமாவில் டப்பிங் பேசுவது போல் அவர் நினைத்துவிட்டார். அவரெல்லாம் இன்னும் பேசக்கூட தயாராக இல்லை. அவ்வளவு பெரிய கூட்டத்தை கூட்டிவிட்டு ஐந்து நிமிடங்கள்கூடவா பேசக்கூடாது. இவர் மீட்டிங்கிற்கும் பெரிதாக எந்த செலவும் செய்யவில்லை.

எம்ஜிஆர்னு நினைப்பு: அவரின் பிரசார வாகனத்திலேயே சென்றார். எம்ஜிஆர் ஸ்டைலில் தனது கைகளை மட்டும் ஆட்டிவிட்டு வந்துவிட்டார். இருந்தாலும் விஜய்யின் ரசிகர்களையும், தொண்டர்களையும் பாராட்டத்தான் வேண்டும். ஏனெனில் அவர்கள் எந்தவித பிரச்னையும் செய்யாமல் சட்டம் ஒழுங்கு சீர் கெடாமல் பார்த்து நடந்துகொண்டார்கள். எம்ஜிஆர் எல்லாம் தனது ரசிகர்களுக்கு முன் எதுவுமே முக்கியம் இல்லை என்கிற எண்ணத்தில்தான் இருந்தார். ஆனால் விஜய்யோ மீட்டிங் செல்லாமல் கீர்த்தி சுரேஷின் தல பொங்கலை கொண்டாடிக்கொண்டு இருந்தார்.

ரத்தத்தின் ரத்தமே: எம்ஜிஆர் எப்போதும் தான் பேசும் மீட்டிங்கில் ரத்தத்தின் ரத்தமே என்று சொல்வார். அதுப்போல் விஜய்யும் ஒரு வார்த்தையை மீட்டிங்கில் பயன்படுத்த வேண்டும். அவர் பேசி முடித்துவிட்டாரா இல்லையா என்றே பலருக்கு தெரியவில்லை. ரொம்பவே எளிமையாகவும், தெளிவாகவும் பேசுவதற்கு விஜய் கற்றுக்கொள்ள வேண்டும். சட்டம் ஒழுங்கு பிரச்னையை கிளப்பாமல் பேசுகிறார். ஏதாவது பேசி உள்ளே தூக்கி வைத்துவிட்டார்கள் என்றால் சிறைக்குத்தானே போக வேண்டும். சொகுசாக வாழ்ந்தவர் இதையெல்லாம் தாங்கிக்கொள்வாரா.

அரசியல்வாதி இல்லை: விக்கிரவாண்டி மாநாட்டுக்காக விவசாய நிலத்தையும், கிணறையும் இவர் அழித்துவிட்டார். அதெல்லாம் தவறு இல்லைபோல. இப்போது இன்னொரு விவசாய நிலத்தை காப்பாற்றுகிறேன் என்று அவர் சொல்வதெல்லம் எந்தவிதத்திலும் நியாயம் இல்லை. முதிர்ந்த அரசியல்வாதியாக விஜய் இன்னமும் மாறவில்லை. புஸ்ஸி ஆனந்த் மாதிரியான ஆட்கள் விஜய்யுடன் இன்னும் அதிகம் பேர் இருக்க வேண்டும். மூன்று வருடங்களாக பரந்தூர் மக்கள் போராடுகிறார்கள். அப்போ கண்களுக்கு தெரியவில்லை.

அட்வைஸ் செய்கிறோம்: இப்போது அவரது கண்களுக்கு தெரிகிறார்கள். தனது மேல் பலரது கவனம் இருக்கிறது என்பதை புரிந்துகொண்டு நாடகம் போடுகிறார் விஜய். தமிழ்நாட்டில் நடக்கும் எல்லா விஷயங்களுக்கும் ரொம்ப பொறுமையாக விஜய் அறிக்கை விடுகிறார். சம்பவ இடத்துக்கும் செல்கிறார். அப்படி வீட்டை விட்டு வெளியே வந்தால் பத்திரிகையாளர்களை சந்திக்க மறுக்கிறார். வாகனத்தில் இருந்தபடி கைகளை காட்டிவிட்டு சென்றுவிடுகிறார். அதனால்தான் அவர் என்ன செய்ய வேண்டும் என்று நாங்கள் அட்வைஸ் செய்கிறோம்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X