ஐபிஎல்லுக்கும் ஆப்படித்த விஜய் அரசியல் குழப்பங்கள்.. தூங்க முடியாமல் தவிக்கும் மக்கள்.. Bloody Politics

சென்னை: இந்த வாரம் வெளியான ரத்னகுமாரின் 29 படத்துக்கு மட்டுமின்றி ஐபிஎல் மேட்சுகளுக்கும் விஜய் ஆப்பு அடித்துள்ளதாக ஏகப்பட்ட ரசிகர்கள் மீம்களையே போட ஆரம்பித்து விட்டனர். அந்த அளவுக்கு விஜய்யின் அரசியல் களம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதல் முறையாக தமிழ்நாட்டு மக்களை நம்பி களத்தில் இறங்கிய மக்களுக்கு 108 தொகுதிகளில் அதிகப்படியான வெற்றி கிடைத்தும் திங்கட்கிழமை ரிசல்ட் வந்த பின்னரும் சனிக்கிழமையான இன்று வரை விஜய்யால் முதலமைச்சர் நாற்காலியில் அமர முடியாத அளவுக்கு ப்ளடி பாலிடிக்ஸ் தமிழ்நாட்டில் நடந்து வருவதாக பொதுமக்கள் கொந்தளித்து வருகின்றனர்.

Vijay s political drama affects even IPL too among Tamil Nadu Fans

மெஜாரிட்டிக்கு தேவையான 118 இடங்களுக்காக விஜய்க்கு ஆதரவாக காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டு கட்சிகள் ஆதரவு அளிக்க 116 இடங்கள் கிடைத்துள்ளன. மீதமுள்ள 2 இடத்துக்காக நள்ளிரவில் அமமுக டிடிடிவி தினகரன் விஜய் குதிரை பேரம் செய்ததாக குற்றம்சாட்டியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாட்டிக்கினாரு ஒருத்தரு: 275 கோடி சம்பளத்தை விட்டு விட்டு மக்களுக்கு நல்லது பண்றேன்னு விஜய் அரசியலில் களம் கண்டு திமுகவை முந்தி மிகப்பெரிய சக்திவாய்ந்த தனிக்கட்சியாக உருவெடுத்துள்ள நிலையிலும், விஜய்யை முதலமைச்சர் நாற்காலியில் அமர விடாமல் மறைமுக சதி வலை பின்னப்பட்டு வருகிறது தெளிவாக தெரிவதாக தவெகவினரும் தமிழ்நாட்டு மக்களும் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

முதலமைச்சர் ஆகக் கூடாது: விஜய் முதலமைச்சராக ஆகவே கூடாது என சில அரசியல் தலைவர்கள் கங்கணம் கட்டிக் கொண்டு வேலை பார்த்து வருவதாகவும் விஜய்யை பெரிதாக சிக்க வைக்கும் முயற்சிகள் தான் நடைபெற்று வருகிறது என்றும் ஜனாதிபதி ஆட்சி அமையட்டும், தமிழ்நாடு நிரந்தரமாக மத்திய அரசு கைக்குள் செல்லட்டும் என்று கூட முடிவெடுத்து விஜய்க்கு எதிரான சூழ்ச்சிகள் நடைபெறுவதாக கூறுகின்றனர். விஜய்க்கு பதிலாக முதல்வராக வேண்டும் என 2 சீட் வைத்திருக்கும் திருமாவளவன் நினைக்கிறார் என்றும் துணை முதல்வர் பதவி கேட்கிறார் என்றும் சர்ச்சைகள் வெடித்து வருகின்றன. இந்திய முஸ்லீம் லீக் கட்சியும் விஜய்க்கு ஆதரவு தந்துவிட்டது என ஊடகங்கள் விஜய்யிடம் 120 வந்துடுச்சு அவர் தான் முதலமைச்சர் என அறிவித்த நிலையிலும், அவர்களும் ஆதரவு தரவில்லை என மறுத்து விட்டனர்.

ஐபிஎல் போட்டிக்கே ஆப்பு: ஏப்ரல், மே மாதங்களில் படங்கள் வெளியானால் கூட மக்கள் ஐபிஎல் பக்கம் தான் செல்வார்கள். ஆனால், விஜய்யை சுற்றி நடக்கும் இந்த பிளடி பாலிடிக்ஸ் படம் பலரை எக்ஸ்போஸ் செய்து வருகிறது என்றும் ஐபிஎல் போட்டியை விட இது என்டர்டெயினாகவும் சீட் எட்ஜ் த்ரில்லராகவும் உள்ளது என பலர் இரவு நேரங்களில் கூட தூக்கத்தை தொலைத்து விட்டு விஜய்க்கு 118 ரன் வந்துச்சா இல்லையா என புலம்ப ஆரம்பித்துள்ளனர் என மீம்களும் வைரலாகி வருகின்றன. இன்று விஜய்க்கு தேவையான அந்த 2 சீட்கள் கிடைக்குமா? அல்லது விஜய் மீது வழக்குப் போட்டு அவரை முதலமைச்சராக்க விடாமல் செய்வார்களா என்பதை பார்க்க பலரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X