சிக்கலில் விஜய்யின் மகன் சஞ்சய்.. 3 நாளில் பேக்கப் ஆன சூட்டிங்.. படம் வருமா? வராதா?
சென்னை: லைக்கா நிறுவனம் தயாரித்த பெரிய திரைப்படங்கள் அடுத்தடுத்த தோல்வி அடைந்ததால், லைக்கா நிறுவனத்திற்கு 150 கோடி ரூபாய் நஷ்டம் அடைந்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், லைகா நிறுவனம் அறிவித்தபடி விஜய்யின் மகன் இயக்கும் படத்தை தயாரிக்குமா என்பதே சந்தேகமாக இருந்த நிலையில், தற்போது படப்பிடிப்பு தொடங்கிய மூன்றே நாட்களில் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
நடிகர் விஜய், தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கி அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் களமிறங்க உள்ளார். இதனால், சினிமாவில் இருந்து விலகும் முடிவை எடுத்தள்ள விஜய், தன்னுடைய கடைசி படமான ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இருந்து இரண்டு போஸ்டர்கள் வெளியாகி படத்தின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. தந்தை சினிமாவை விட்டு விலக
முடிவு செய்து இருக்கும் நிலையில் அவரது மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமாக இருக்கிறார்.

சிக்கலில் படப்பிடிப்பு: லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில், ஹீரோவாக சந்தீப் கிஷன் கமிட்டானார். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை லைகா நிறுவனம் வீடியோவாக வெளியிட்டது. அதன் பிறகு படம் குறித்த எந்தவிதமான அறிவிப்பும் வெளியாகாமல் இருந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் தொடங்கப்படும் என தகவல் வெளியானது. இந்நிலையில் படப்பிடிப்பது தொடங்கியதில் இருந்து சிக்கலுக்கு மேல் வந்து கொண்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
விஜய்யின் மகன் குறும்படங்களை இயக்கி இருந்தாலும், பெரிய திரைப்படத்தை இயக்கி அவருக்கு அனுபவம் இல்லாததால், ஜோசப் சஞ்சயின் பெரியப்பா சஞ்சீவ் என்பவரை அதாவது விக்ராந்தின் அண்ணனை லைகா நிறுவனம் நியமித்து உடன் இருந்து பணிகளை கவனித்து கொள்ளும்படி அறிவுறுத்தி இருந்தது. இதையடுத்து படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. ஆனால், படப்பிடிப்பு தொடங்கிய மூன்று நாட்கள் கூட படப்பிடிப்பு முழுமையாக நடக்கவில்லை என கூறப்படுகிறது. படகுழு ஒரு திட்டம் போட்டு படப்பிடிப்பு தளத்திற்கு சென்றால், அங்கு வெவ்வேறு விதமான அழுத்தம் வருவதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக படப்பிடிப்புக்கு முன்பே அனுமதி வாங்கிவிட்டு சென்றாலும், பாதியிலேயே நிறுத்த சொல்லி இடையூறு வருவதாகவும், இப்படியே மூன்று நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றும் பாதியிலேயே இடையூறு வந்ததால் படப்பிடிப்பை படக்குழு தற்காலிகமாக நிறுத்திவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதற்கு காரணம் விஜய்யின் அரசியல் வருகை தான் என சொல்லப்படுகிறது.
லால் சலாம், இந்தியன் 2, கேம் சேஞ்சர் என அடுத்தடுத்த படத்தின் தோல்வியால் பெரும் நஷ்டத்தில் இருக்கும் லைகா, இந்த படத்தை பெரிதும் நம்பி இருக்கும் நிலையில், படப்பிடிப்பு நடைபெறாமல் இருப்பதால், லைகா நிறுவனம் சோர்வடைந்து உள்ளதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











