Baby John: விஜய்யின் தெறி இந்தி ரீமேக் பேபி ஜான்.. எப்போ ரிலீஸ் தெரியுமா?
சென்னை: விஜய் நடிப்பில் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட்டடித்த தெறி திரைப்படம் இந்தியில் பேபி ஜான் என்கிற பெயரில் ரீ மேக்காகி உள்ளது. பிரியா அட்லீ தயாரிக்கும் இப்படத்தில் நாயகிகளாக கீர்த்தி சுரேஷ், வாமிகா கேபி நடித்துள்ளனர். இப்படத்தின் ரிலீஸ் தேதி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், சில காரணங்களால் படம் வெளியாகவில்லை. இதையடுத்து படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு மீண்டும் அறிவித்துள்ளது.
கோலிவுட்டின் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக இருந்த அட்லீ, ராஜா ராணி, மெர்சல், தெறி, பிகில் தளபதி விஜய்யை வைத்து பல வெற்றிப்படத்தை கொடுத்து தமிழ் ரசிகர்களை கட்டிப்போட்டார். கோலிவுட்டில் தனது திறமையை நிரூபித்த அட்லீ பாலிவுட்டில் ஸ்டார் ஷாருக்கானை வைத்து இயக்கிய ஜவான் கடந்த ஆண்டு வெளியாகி கலெக்ஷனை அள்ளியது.

தெறி ரீமேக்: ஜவான் படத்தின் மகத்தான வெற்றியால் பாலிவுட்டில் கடைவிரித்து இருக்கும் அட்லீ தற்போது தெறி படத்தை இந்தியில் ரீமேக் பணியை தொடங்கினார். இந்தியில் ரீமேக்காகி உள்ள தெறி ரீமேக்கிற்கு அட்லீ தான் தயாரிப்பாளர் இவரது தயாரிப்பில் ஏற்கனவே சங்கிலி புங்கிலி கதவத் தொற, அந்தகாரம் போன்ற படங்கள் வெளியாகி ஓரளவுக்கு நல்ல வரவேற்பை பெற்றன.
ரிலீஸ் தேதி: பிரம்மாண்ட பொருட் செலவில் உருவான இப்படத்திற்கு பேபி ஜான் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. காளீஸ் இயக்கும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் , வாமிகா கபி , ஜாக்கி ஷெராப், ராஜ்பால் யாதவ், மணிகண்டன், பி. எஸ். அவினாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த நிலையில், படம் மே 31ந் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வரவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. ஆனால் படத்தின் சில பணிகள் முடியாததால், படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிரடியாக, அதன் படி பேபி ஜான் படம் கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு டிசம்பர் 25ந் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சூப்பர் ஹிட்படம்: விஜய் நடிப்பில் 2016ம் ஆண்டு வெளியான தெறி படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த படத்தில் சமந்தா, எமி ஜாக்சன், மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிகை மீனாவின் மகள் நைனிகா நடித்திருந்தார். போலீஸ் அதிகாரியாக நடித்திருந்த விஜய்யின் நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. விஜய்யின் திரைப்பயணத்தில் தெறி திரைப்படம் ஒரு மறக்க முடியாத படமாகும்.


Click it and Unblock the Notifications











