Vijay: என்னை புள்ளையா பெத்ததுக்கு எங்கப்பாதான் தவம் பண்ணியிருக்கணும்.. இது விஜய்யின் சூர்யவம்சம்!

சென்னை: நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் கட்சியை அறிவித்த நிலையில் சமூக வலைதளங்களில் தொடர்ந்து ஏகப்பட்ட பாராட்டுகளும் அதை மிஞ்சும் அளவிற்கு விமர்சனங்களும் குவிந்து வருகின்றன. எங்கே எந்த பிரபலம் சென்றாலும் உடனே மைக்கை நீட்டி இந்த சீசன் பிக் பாஸ் வின்னர் யார் என கேட்பது போல தற்போது நடிகர் விஜயின் அரசியல் பிரவேசம் குறித்து உங்கள் கருத்து என்ன எனக்கேட்டு வருகின்றனர்.

மேலும், நடிகர் விஜய்யின் அரசியல் அறிவிப்பைத் தொடர்ந்து முதல்வன் படக் காட்சிகளை வைத்து ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட வீடியோவை ரசிகர்கள் வெளியிட்டு அட்டகாசம் செய்தனர். இந்நிலையில் அதே போன்ற ஒரு வீடியோ தற்போது இணையவாசிகளை சிரிப்பில் ஆழ்த்தி வருகிறது.

Vijays suryavamsam movie AI edit scene makes fans big laugh

கோட் காட்சிகள் லீக்: விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தில் காட்சிகள் அதிக அளவில் லீக் ஆனது. அதற்கு முன்னதாக பீஸ்ட் படத்தின் காட்சிகளும் இணையத்தில் கசிந்தது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ படத்தின் காட்சிகள் பெரும்பாலும் கசியவே இல்லை. இதுவரை வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வந்த கோட் படத்தின் காட்சிகளும் கசியாமல் இருந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பல காட்சிகள் லீக் ஆகி வருகின்றன. திரையில் நடைபெற்று வரும் நிலையில், இப்படி காட்சிகள் கசியத் தொடங்கி விட்டதா என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.

விஜய் பற்றிய விமர்சனங்கள்: நடிகர் விஜய் திடீர்னு அரசியல் அறிவிப்பை வெளியிட்ட நிலையில் அதை சற்றும் எதிர்பார்க்காத பல கட்சிகளும் சினிமா பிரபலங்களும் தொடர்ந்து தங்கள் எதிர்ப்பையும் ஆதரவையும் தெரிவித்து வருகின்றனர். நடிகர் விஜயை அரசியலுக்கு அழைத்து வந்தது புஸ்ஸி ஆனந்த் தான் என்றும் அவர் பேசும் வீடியோக்களை கசிய விட்டு பதவி ஆசைக்காக தான் இந்தக் கட்சியும் அரசியலில் அடியெடுத்து வைக்க உள்ளது என்றும் மக்கள் பணி எல்லாம் செய்யாது என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

சூரியவம்சம் ஏஐ எடிட்: சமீப காலமாக சினிமா பிரபலங்களை வைத்து ஏஐ மூலம் எடிட் செய்யப்பட்ட வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வருகின்றன. ஆரம்பத்தில் புகைப்படங்களாக ராஷ்மிகா மந்தனா டீப் ஃபேக் வீடியோ பெரும் சர்ச்சையை கிளப்பியது. ஆனால், காவலா பாடலுக்கு சிம்ரன் ஆடியது போன்ற வீடியோ, எம்ஜிஆரின் ஏஐ வீடியோக்கள் இணையத்தில் ரசிகர்களின் ஆதரவைப் பெற்று டிரெண்ட் ஆகின. இந்நிலையில் தற்போது சூர்யவம்சம் படத்தில் சரத்குமாருக்கு பதில் விஜய்யும் எஸ்.ஏ. சந்திரசேகரும் ராதிகாவுக்கு பதிலாக விஜயின் அம்மா ஷோபாவும் தேவயானிக்கு பதிலாக விஜயின் மனைவி சங்கீதாவின் முகத்தையும் வைத்து கச்சிதமாக உருவாக்கப்பட்ட ஏஐ வீடியோ தற்போது வெளியாகி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறது.

வசனத்தையே மாத்திட்டாங்க: மேலும், விஜய்க்கு ஏற்றவாறு சூர்ய வம்சம் படத்தின் வசனத்தையே மாற்றி, "அப்பாவால் எனக்கு பெருமை என்பதற்கு பதிலாக, என்னால் எங்கப்பாவுக்கு பெருமை" என விஜய் பேசுவது போன்ற காட்சிகள் ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்து வருகின்றன. இன்னும் ஏஐ மூலமாக எப்படியெல்லாம் ஃபேக் வீடியோக்கள் உலா வர போகுதோ தெரியவில்லை என்கிற எச்சரிக்கையையும் நெட்டிசன்கள் கிளப்பி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X