ஆடு தானா வந்து சிக்கியிருக்கு.. வெங்கட் பிரபு வேலையை காட்டப் போறாரு.. GOAT டைட்டில் செம ட்ரோல்!

சென்னை: தளபதி 68 படத்தின் டைட்டிலை படக்குழு இன்னமும் அறிவிக்காத நிலையில், தொடர்ந்து இதுதான் டைட்டில் என ஒவ்வொரு டைட்டிலாக சோஷியல் மீடியாவில் வெளியாகி அது ட்ரோல் மெட்டீரியலாகவும் மாறி வருகிறது. இந்நிலையில், லேட்டஸ்டாக வந்துள்ள GOAT டைட்டிலையும் ரசிகர்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

முதலில் Boss என்றும் Puzzle என்றும் தளபதி 68 படத்துக்கு டைட்டில் வைக்கப்பட்டதாக தகவல்கள் தீயாக பரவிய நிலையில், அந்த இரண்டு தலைப்பும் இல்லை என அர்ச்சனா கல்பாத்தி அமைதியாக இல்லாமல் வாலன்டியராக வந்து விளக்கம் கொடுத்திருந்தார். இந்நிலையில், தற்போது GOAT தலைப்புக்கு அவர் எதுவும் மறுப்பு தெரிவிக்காத நிலையில், ஏகப்பட்ட ட்ரோல்கள் குவிந்து வருகின்றன.

Vijays Thalapathy 68 guessing Title GOAT gets trolled by Rajinikanth and Ajith fans

GOAT என்றால் என்ன?: GOAT என்றவுடனே ஆடு தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும் ஆனால், G.O.A.T என்பது Greatest of All Time என்பதன் சுருக்கம் தான் GOAT. கால்பந்தாட்டக்காரர் மெஸ்ஸியை ரசிகர்கள் கோட் என அழைப்பார்கள். மேலும், பிரபல இயக்குநர்களையும் நடிகர்களையும் விளையாட்டு வீரர்களையும் உலகில் சிறந்தவர்களையும் கோட் என அழைத்து வருகின்றனர். அப்படியொரு டைட்டிலை தான் விஜய் படத்துக்கு வெங்கட் பிரபு வைத்திருப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆனால், இது எந்தளவுக்கு உண்மை என்பது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானால் தான் தெரியவரும்.

ஆடு சிக்கிடுச்சு: பாஸ் என்பது தான் டைட்டில் என்றதுமே மனோபாலா விஜயபாலன் லாஸ் என ரைமிங்காக கலாய்க்க ஆரம்பித்தார். ரஜினிகாந்த் மற்றும் அஜித் ரசிகர்கள் என்ன டைட்டில் வைத்தாலும் வச்சு செய்வார்கள். இதில் கோட் என டைட்டில் வைத்தால் ஆடு சிக்கிடுச்சுடோய் என ஏகப்பட்ட ட்ரோல்களையும் மீம்களையும் போட்டு விஜய் ரசிகர்களை வெறுப்பேற்றி வருகின்றனர்.

தெறிக்கும் ஃபேன் மேட் போஸ்டர்கள்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான பிறகு ஃபேன் மேட் போஸ்டர்கள் உருவாக்கியது எல்லாம் அந்த காலம். தகவல் வெளியானாலே பாஸ் டைட்டிலுக்கு டபுள் ஆக்‌ஷன் விஜய்யை வைத்து எடிட் செய்தது போல தற்போது மிஷன் இம்பாசிபிள் டாம் க்ரூஸ் போட்டோவை வைத்து GOAT படத்திற்கும் வெறித்தனமான ஃபேன் மேட் போஸ்டர்கள் உருவாகி உள்ளன.

GOA - GOAT: ஏற்கனவே ஜெய், பிரேம்ஜியை வைத்து கோவா எனும் படத்தை வெங்கட் பிரபு இயக்கிய நிலையில், அதற்கு பக்கத்தில் Thalapathy - T-ஐ போட்டு GOAT ஆக்கிட்டாரே என கலாய்த்து வருகின்றனர். லியோ படத்தில் விஜய்யை பலி கொடுக்க லோகேஷ் கனகராஜ் ஸ்கெட்ச் போடுறாரு, வெங்கட் பிரபு ஆடுன்னே டைட்டில் வைக்கிறாரு, விஜய்யை பரிசோதனை எலியாகவே ஏன் இயக்குநர்கள் எல்லாம் பார்க்கின்றனர் என அஜித் ரசிகர்களும், ரஜினி ரசிகர்களும் விதவிதமாக மீம் போட்டு ரோஸ்ட் செய்து வருகின்றனர்.

ஃபுல் கோட் பார்பிக்யூ: மேலும், முழுசா ஒரு ஆட்டை அறுத்து மசாலா தடவி ஃபுல் கோட் பார்பிக்யூ செய்யும் போட்டோக்களை எல்லாம் ஷேர் செய்து தளபதி விஜய்யின் 68வது படத்தின் டைட்டில் இதுதான் என வேறமாறி சம்பவங்களை எல்லாம் ரசிகர்கள் செய்து தெறிக்கவிட்டு வருகின்றனர். வரும் டிசம்பர் 31ம் தேதி இதே டைட்டில் தான் வரப்போகிறதா? அல்லது வித்தியாசமான புதிய டைட்டில் அறிவிக்கப்படுமா? என்பதை வெயிட் பண்ணிப் பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X