26 வயதிலேயே விஜய்க்கு ஜோடியாகும் நடிகை.. டாக்டர், நீச்சல் வீராங்கனை.. யார் இந்த மீனாட்சி சவுத்ரி!
சென்னை: தளபதி 68 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் அதில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க இருக்கும் நடிகை குறித்த சுவாரசியத் தகவல்களை பார்க்கலாம்.

ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு பான் இந்திய திரைப்படமாக வெளியான லியோ திரைப்படம் திரையரங்கில் மாஸ் காட்டி வருகிறது.
படம் வெளியாகி ஒரு வாரம் ஆன போதும், திரையரங்குக்கு படையெடுக்கும் ரசிகர்களின் கூட்டம் கொஞ்சம் கூட குறையவே இல்லை.
தளபதி 68: லியோ படத்தின் ஹைப்பே இன்னும் குறையாத நிலையில் தளபதி 68 திரைப்படம் குறித்த அறிவிப்பும் ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகி வருகிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள இந்த படத்தின் பூஜை நடந்து முடிந்துள்ளது.
முன்னணி நடிகர்கள்: இப்படத்தின் மூலம் முதல்முறையாக இயக்குநர் வெங்கட் பிரபு விஜய்யுடன் இணைகிறார்.. தளபதி 68 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். இதில், ஜெய், அபர்ணா தாஸ், பிரபுதேவா, வைபவ், லைலா, மீனாட்சி சௌத்ரி, பிரசாந்த், மைக் மோகன் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர்.
வில்லனாக மைக் மோகன்: நடிச்சா ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று பிடிவாதமாக இருந்த மைக் மோகன் இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. வில்லன் கேரக்டரில் நடிக்க அரவிந்த் சாமியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், கால்ஷீட் கிடைக்காததால், அவருக்கு பதிலாக மைக் மோகன் நடிக்க இருக்கிறார். அப்பா, மகன் என இரண்டு வேடத்தில் விஜய் நடிக்க இருக்கும் நிலையில், விஜய்யின் இளவயது நண்பர்களாக பிரபுதேவா மற்றும் பிரசாந்த் நடிக்க உள்ளனர்.
யார் இந்த மீனாட்சி சவுத்ரி: இந்நிலையில் தளபதி 68 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இப்படத்தில் இளம் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி கமிட்டாகி உள்ளார். ஹரியானாவைச் சேர்ந்த நீச்சல் வீராங்கனையான இவர், பல் மருத்துவத்தில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார். சினிமா மீது இருந்த ஆர்வத்தால், மாடலிங் பக்கம் வந்த இவர், 2017ம் ஆண்டு MISS IMA பட்டத்தையும், 2018ம் ஆண்டு FEMINA MISS INDIA பட்டங்களை வென்றுள்ளார்.

2வது படமே டாப் நடிகருடன்: இதைத் தொடர்ந்து, Out of Love என்ற வெப் சீரிஸ் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான மீனாட்சி சவுத்ரி 3 தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். தமிழில் அண்மையில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான கொலை படத்தின் லீட் ரோலில் நடித்து தமிழில் தனது அறிமுகத்தை கொடுத்துள்ளார். இரண்டாவது படமே டாப் நடிகருடன் நடிப்பதால் இவருக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











