Thalapathy 68: தளபதி 68 படத்தின் ஆடியோ உரிமையை வாங்கிய பிரபல நிறுவனம்.. என்னது அப்படியா?

சென்னை: நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார். வரும் அக்டோபர் 19ம் தேதி இந்தப் படம் ரிலீசாகவுள்ளது.

இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் நடிக்கவுள்ளார் விஜய். இந்தப் படத்தின் சூட்டிங் விரைவில் துவங்கவுள்ளது.

படத்தின் சூட்டிங் துவங்குவதற்கு முன்னதாகவே வழக்கம்போல மற்ற ரைட்களுக்கான வியாபாரம் தற்போதே துவங்கியுள்ளது.

Vijays Thalapathy 68 movie audio rights bagged by T-Series

பெரிய தொகைக்கு தளபதி 68 பட ஆடியோ உரிமையை கைப்பற்றிய நிறுவனம்: நடிகர் விஜய், த்ரிஷா, கௌதம் மேனன், மிஷ்கின், அர்ஜூன், அனுராக் காஷ்யப் உள்ளிட்ட நட்சத்திரப்பட்டாங்களை குறிப்பாக ஏராளமான இயக்குநர்களை கூட்டணி சேர்த்து லியோ படத்தை உருவாக்கி வருகிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். அவரது முந்தைய படங்கள் அவருக்கான எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளன. முன்னதாக வெளியான மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் படங்கள் கொடுத்துள்ள அளவுக்கதிகமான வரவேற்பால் லியோ படமும் சிறப்பான வெற்றியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக கமல் நடிப்பில் லோகேஷ் எடுத்திருந்த விக்ரம் படம் இன்டஸ்ட்ரியல் ஹிட்டடித்துள்ளது. இதனால் விஜய்யின் லியோ படமும் அதிகமான வசூலை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய்க்கு தனிப்பட்ட முறையில் உள்ள மாஸிற்காகவே படம் அதிகமான வசூலை எட்டும். இதற்கு கலவையான விமர்சனங்களை பெற்று வசூல் மழை பொழிந்துள்ள அவரது முந்தைய படங்களே சாட்சி. இந்நிலையில் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ள லியோ படம் கண்டிப்பாக சர்வதேச அளவில் வசூல்சாதனை செய்யும் என்பதே ரசிகர்களின் மற்றும் தயாரிப்பு தரப்பின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைவதற்கு முன்னதாகவே தளபதி 68 படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கவுள்ளார். இதற்கான ஸ்டோரி டிஸ்கஷனில் அவர் கடந்த சில மாதங்களாக கோவாவில் ஈடுபட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தற்போது இந்தப் படத்தின் கதை இறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் படத்தின் சூட்டிங், பூஜை குறித்த அப்டேட்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

வழக்கமாக விஜய் படங்களுக்கு அனிருத்தான் மியூசிக் டைரக்டராக அமைவார். இந்தக் கூட்டணி அடுத்தடுத்த படங்களில் சிறர்பபாக அமைந்து வருகின்றன. ஆனால் வெங்கட் பிரபு தன்னுடைய படங்களில் யுவன் சங்கர் ராஜாவைத்தான் இசையமைப்பாளராக பிக்ஸ் செய்வார். இந்நிலையில் தளபதி 68 படத்தில் விஜய் -வெங்கட்பிரபு -யுவன் சங்கர் ராஜா கூட்டணி தான் அமையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தக் கூட்டணி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து இந்தப் படத்தின் ஆடியோ உரிமையை பிரபல நிறுவனம் மிகப்பெரிய அளவில் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரபல டி -சீரிஸ் நிறுவனம் இந்தப் படத்தின் ஆடியோ உரிமையை கைப்பற்றியுள்ளதாகவும் இதுவரை விஜய் படங்களில் இல்லாதவகையில் இந்த ஆடியோ உரிமை மிகப்பெரிய விலைக்கு கைமாறியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X