Thalapathy 68 movie: அடுத்தது என்ன.. தளபதி 68 தான்.. உற்சாகமான படக்குழு!

சென்னை: நடிகர் விஜய்யின் லியோ படம் நேற்றைய தினம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ள போதிலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

படம் பிளாக்பஸ்டர் என்று லியோ படத்தின் தயாரிப்பு நிறுவனமான 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் அறிவித்துள்ளது.

Vijays Thalapathy 68 movie team speaks about the movie in twitter

விஜய்யின் தளபதி 68 படம் குறித்து பேசிய தயாரிப்பாளர்: நடிகர் விஜய்யின் லியோ படம் நேற்றைய தினம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ள போதிலும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். உலகளவில் இந்தப் படத்தை பார்க்க ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனிடையே இந்தப் படம் பிளாக்பஸ்டர் என்று படத்தின் தயாரிப்பு நிறுவனமான 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ அறிவித்துள்ளது.

படத்தின் இசை வெளியீடு நடக்காத நிலையில், படத்தின் ஆல்பத்தை தயாரிப்பு தரப்பும் இசையமைப்பாளர் அனிருத்தும் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். இந்தப் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வரும் சூழலில் திரைத்துறை பிரபலங்களும் படத்தை பார்த்துவிட்டு பாராட்டுக்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்தும் படத்தை திரையரங்கில் சென்று பார்த்ததாக புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது.

நடிகர் சாந்தனு, ஜனன உள்ளிட்டவர்களும் படத்திற்கான பாசிட்டிவ் ரிசல்ட்டை வெளியிட்டு ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளனர். இதனிடையே இந்தப் படம் குறித்து இயக்குநர் வெங்கட்பிரபுவும் நேற்றைய தினம் லியோ படத்தின் போஸ்டரை வெளியிட்டு நெருப்பு எமோஜியுடன் உற்சாகத்தை வெளிப்படுத்தியிருந்தார். இதையடுத்து இந்த பதிவிற்கு தளபதி 68 படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியும் தனது கமெண்ட்டை வெளிப்படுத்தியிருந்தார்.

இனி நாம் ஆரம்பிக்க வேண்டும் என்று அர்ச்சனா வெங்கட் பிரபுவிற்கு தன்னுடைய ரிப்ளையை கொடுத்துள்ளார். முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு தளபதி 68 படத்தின் சூட்டிங் சென்னையில் பூஜையுடன் துவங்கியுள்ளது. சென்னையில் சில தினங்கள் இந்தப் படத்தின் சூட்டிங்கை தொடரும் படக்குழுவினர் வெளிநாட்டில் அடுத்தக்கட்ட சூட்டிங்கை நடத்த திட்டமிட்டுள்ளனர். படத்தின் சூட்டிங் அதிகபட்சமாக வெளிநாட்டில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Vijays Thalapathy 68 movie team speaks about the movie in twitter

விஜய்யின் தளபதி 68 படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கவுள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்தப் படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ள நிலையில், இதற்கான லுக் டெஸ்ட்டிற்காக கடந்த மாதத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றிருந்தார். முன்னதாக அஜித்துடன் இணைந்து வெங்கட்பிரபு மங்காத்தா என்ற பிளாக்பஸ்படர் ஹிட் படத்தை கொடுத்திருந்த நிலையில், விஜய்க்கும் அதேபோல ஒரு மாஸ் ஹிட்டை கொடுப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X