The Greatest of All Time: அடுத்த பீஸ்ட் ரெடி.. தளபதி 68 டைட்டில் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’!
சென்னை: தளபதி 68 படத்தின் டைட்டில் The Greatest of All Time என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே GOAT தான் டைட்டில் என்பது ஒரு வாரத்திற்கு முன்பே லீக்கான நிலையில், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. புத்தாண்டு தினத்துக்கு ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாக இருக்கும் அளவுக்கு விஜய் தனது ட்விட்டர் பகக்த்தில் இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.
முதலில் Boss என்றும் Puzzle என்றும் தளபதி 68 படத்துக்கு டைட்டில் வைக்கப்பட்டதாக தகவல்கள் தீயாக பரவிய நிலையில், அந்த இரண்டு தலைப்பும் இல்லை என அர்ச்சனா கல்பாத்தி அமைதியாக இல்லாமல் வாலன்டியராக வந்து விளக்கம் கொடுத்திருந்தார். GOAT தலைப்புக்கு அவர் எதுவும் மறுப்பு தெரிவிக்காத நிலையில், ஏகப்பட்ட ட்ரோல்கள் குவிந்தன. அந்த தலைப்பை கடைசி நேரத்தில் மாற்ற வேண்டாம் என விஜய் அறிவித்த நிலையில், அதே டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

GOAT என்றால் என்ன?: GOAT என்றவுடனே ஆடு தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும் ஆனால், G.O.A.T என்பது Greatest of All Time என்பதன் சுருக்கம் தான் GOAT. கால்பந்தாட்டக்காரர் மெஸ்ஸியை ரசிகர்கள் கோட் என அழைப்பார்கள். மேலும், பிரபல இயக்குநர்களையும் நடிகர்களையும் விளையாட்டு வீரர்களையும் உலகில் சிறந்தவர்களையும் கோட் என அழைத்து வருகின்றனர். அப்படியொரு டைட்டிலை தான் விஜய் படத்துக்கு வெங்கட் பிரபு வைத்துள்ளார்.
கெடா விருந்து: பாஸ் என்பது தான் டைட்டில் என்றதுமே மனோபாலா விஜயபாலன் லாஸ் என ரைமிங்காக கலாய்க்க ஆரம்பித்தார். ரஜினிகாந்த் மற்றும் அஜித் ரசிகர்கள் என்ன டைட்டில் வைத்தாலும் வச்சு செய்வார்கள். இதில் கோட் என டைட்டில் வைத்தால் ஆடு சிக்கிடுச்சுடோய் என ஏகப்பட்ட ட்ரோல்களையும் மீம்களையும் போட்டு விஜய் ரசிகர்களை வெறுப்பேற்றி வருகின்றனர்.
GOA - GOAT: ஏற்கனவே ஜெய், பிரேம்ஜியை வைத்து கோவா எனும் படத்தை வெங்கட் பிரபு இயக்கிய நிலையில், அதற்கு பக்கத்தில் Thalapathy - T-ஐ போட்டு GOAT ஆக்கிட்டாரே என கலாய்த்து வருகின்றனர். லியோ படத்தில் விஜய்யை பலி கொடுக்க லோகேஷ் கனகராஜ் ஸ்கெட்ச் போடுறாரு, வெங்கட் பிரபு ஆடுன்னே டைட்டில் வைக்கிறாரு, விஜய்யை பரிசோதனை எலியாகவே ஏன் இயக்குநர்கள் எல்லாம் பார்க்கின்றனர் என அஜித் ரசிகர்களும், ரஜினி ரசிகர்களும் விதவிதமாக மீம் போட்டு ரோஸ்ட் செய்து வருகின்றனர்.
ஃபர்ஸ்ட் லுக் எப்படி இருக்கு?: இந்நிலையில், டபுள் ஆக்ஷன் ரோலில் நடிகர் விஜய் நடித்துள்ள தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் அப்பா, மகன் என விஜய் இரு தோற்றத்தில் வருகிறார். டாப் கன், ஃபைட்டர் பாதிப்பில் விஜய் மீண்டும் விமானம் ஓட்டத் தயாராகி விட்டார் என்றே தெரிகிறது. அடுத்த பீஸ்ட்டாக இல்லாமல் இருந்தால் சிறப்பாக இருக்கும். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பொறுத்தவரையில் லைவாக இல்லாமல் AI எடிட் போல உள்ளது. இதற்கு ஃபேன் மேட் போஸ்டர்களே பெட்டராக இருக்கும்.


Click it and Unblock the Notifications











