தளபதி 69 லுக் இதுதான்.. பெரியார் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய விஜய்.. திமுக ரூட்டில் தவெக!
சென்னை: தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா வழியில் தான் விஜய்யின் அரசியல் பயணம் இருக்கும் என்பதை விஜய் தெளிவாக தெரிவித்து வருகிறார். விநாயகர் சதுர்த்திக்கு விஜய் வாழ்த்து தெரிவிக்கவில்லை என குற்றச்சாட்டுகள் கிளம்பின. ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து சொன்ன விஜய் பெரியாரின் 146வது பிறந்தநாளையொட்டி பெரியார் திடலுக்கு சென்று மரியாதை செலுத்தியுள்ளார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம் கடந்த செப்டம்பர் 5ம் தேதி வெளியானது. சுமார் 400 கோடி வரை படம் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆனால், அதுதொடர்பாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி எந்தவொரு அதிகாரப்பூர்வ வசூல் அறிவிப்பையும் வெளியிடவில்லை. கடைசியாக 288 கோடி ரூபாய் வசூலை கோட் திரைப்படம் 4 நாட்களில் பெற்றதாக மட்டுமே அறிவித்திருந்தார்.
மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து: பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 74வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், நடிகரும் தவெக தலைவருமான விஜய் இன்று காலையிலேயே பிறந்தநாள் வாழ்த்தை சமூக வலைதளம் வாயிலாக தெரிவித்தார். கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபலங்களும் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
பெரியார் சிலைக்கு மரியாதை: தந்தை பெரியார் என அழைக்கப்படும் ஈ.வெ. ராமசாமியின் 146வது பிறந்தநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. பெரியாரின் பிறந்தநாளில் அவரை போற்றும் விதமாக பெரியார் திடலுக்கு சென்ற தவெக தலைவர் விஜய் மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். திமுகவை போல தவெகவும் அண்ணா மற்றும் பெரியார் வழியில் தான் கட்சியை கொண்டு செல்லும் என்பதை விஜய் தெளிவாக உணர்த்தி வருவதாக கூறுகின்றனர்.
தளபதி 69 லுக்: எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கப்போகும் தளபதி 69 படத்துக்காக பெரிதாக லுக்கில் எந்தவொரு மாற்றத்தையும் கொண்டு வந்து ரிஸ்க் எடுக்கப் போவதில்லை விஜய் எனக் கூறுகின்றனர். தளபதி 69 மற்றும் அரசியல் என இரண்டையுமே அடுத்த ஆண்டு விஜய் அதிகம் கவனம் செலுத்த வேண்டி உள்ள நிலையில், இதே லுக்கில் தான் நடிப்பார் என நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.


Click it and Unblock the Notifications











