விஜய் ரசிகர்களுக்கு செம குஷி.. தளபதி 69ல் யார் யார் இருக்கிறார்கள்?.. அடுத்த 3 நாட்கள் சரவெடிதான்

சென்னை: விஜய் நடிப்பில் கடைசியாக GOAT திரைப்படம் வெளியானது. வெங்கட் பிரபு இயக்கியிருந்த அந்தப் படம் ஓரளவுதான் வரவேற்பை பெற்றது. அடுத்ததாக அவர் ஹெச்.வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். படத்துக்கு தற்காலிகமாக தளபதி 69 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. கேவிஎன் புரொடக்‌ஷன்ஸ் படத்தை தயாரிக்கிறது. இந்தச் சூழலில் பட தயாரிப்பு நிறுவனம் சூப்பர் அப்டேட் ஒன்றை கொடுத்து ரசிகர்களை குஷிப்படுத்தியிருக்கிறது.

கோலிவுட்டின் மாஸ் ஹீரோவாக வலம் வந்துகொண்டிருக்கும் விஜய் கடைசியாக வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தில் நடித்தார். அதற்கு முன்னதாக அவர் நடித்த வாரிசு, பீஸ்ட் ஆகிய படங்கள் விமர்சன ரீதியாக அடி வாங்கியதால்; இந்தப் படத்தை ரொம்பவே எதிர்பார்த்திருந்தார்கள் அவரது ரசிகர்கள். ஆனால் எதிர்பார்த்தபடி படம் இல்லை. முக்கியமாக ஸ்க்ரீன் ப்ளேவை தொய்வில்லாமல் கொண்டு செல்லும் வெங்கட் பிரபு இதில் சொதப்பிவிட்டார் என்று பலர் பேசினார்கள்.

vijay thalapathy 69 tamil cinema 69

தமிழக வெற்றிக் கழகம்: இதற்கிடையே தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கிறார். மக்களவைத் தேர்தலில் போட்டியிடாவிட்டாலும் 2026ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் சட்டபேரவைத் தேர்தலில் போட்டியிடுகிறது அக்கட்சி. தவெகவின் முதல் மாநில மாநாடும் விரைவில் நடக்கவிருக்கிறது. சினிமாவில் எப்படி தனது ஆளுமையை தளபதி விஜய் நிரூபித்தாரோ அதேபோல் அரசியலிலும் நிரூபிப்பார் என்று உறுதியோடு இருக்கும் அவரது ரசிகர்கள்; முதல் மாநாட்டை ஆவலோடு எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்.

தளபதி 69: முழுக்க முழுக்க விஜய் அரசியலில் கவனம் செலுத்தவிருப்பதால் அவர் இன்னும் ஒரு படத்தில் மட்டும்தான் நடிக்கவிருக்கிறார். அந்தப் படத்தை ஹெச்.வினோத் இயக்க; கேவிஎன் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படம்தான் அவரது கடைசி படம் என்று கூறப்படுவதால்; நிச்சயம் தமிழ் சினிமா மறக்காத படமாகத்தான் இருக்கும் என்று இப்போதே பேச்சுக்கள் எழுந்திருக்கின்றன. படத்தில் மஞ்சு வாரியர் உள்ளிட்டோர் நடிக்க வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.

ஹெச்.வினோத் சம்பவம்: வினோத் இப்போதைய தலைமுறை இயக்குநர்களில் முக்கியமானவர். தனது முதல் படமான சதுரங்க வேட்டையிலேயே தன்னை நிரூபித்துவிட்டார். தொடர்ந்து அவர் இயக்கிய தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு ஆகிய படங்களில் வலிமையை தவிர்த்து மற்ற படங்கள் நல்ல வரவேற்பையே பெற்றன. எனவே விஜய்யின் கடைசி படமான தளபதி 69ஐ இயக்குவதற்கு சரியான தேர்வு வினோத்தான் என்று ரசிகர்கள் கூற ஆரம்பித்திருக்கிறார்கள்.

வெளியாகும் அப்டேட்: படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் படக்குழு ஒரு அப்டேட்டை இப்போது வெளியிட்டிருக்கிறது. அதன்படி படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்பது தொடர்பான அறிவிப்பை இன்று மாலை 5 மணியிலிருந்து அடுத்த மூன்று நாட்களுக்கு வெளியிடப்போவதாக தெரிவித்திருக்கிறது. மேலும் இந்த அறிவிப்பு வீடியோவில் 'உள்ளே வெளியே கேம்' என்று கேப்ஷனும் இருப்பதால்; இது எந்த மாதிரியான கதையாக இருக்கும் என்ற ஆர்வமும் ரசிகர்களிடையே எழுந்திருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X