Vijay: என்னது விஜய்யின் தளபதி 69 படத்தை இரு நிறுவனங்கள் தயாரிக்கிறாங்களா? இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே
சென்னை: நடிகர் விஜய் லீட் கேரக்டரில் நடித்துவரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் ஷூட்டிங் இந்த மாதத்துடன் நிறைவடைய உள்ளது. இதற்காக ஏப்ரல் முதல் வாரத்தில் விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் மாஸ்கோ செல்ல திட்டமிட்டுள்ளனர். தொடர்ந்து அங்கு இரு வாரங்கள் இந்த படத்தின் சூட்டிங்கை நடத்த படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு திட்டமிட்டுள்ளார். இந்த மாதத்திற்குள் இந்தப் படத்தின் ஒட்டுமொத்த ஷூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு படக்குழுவினர் சென்னை திரும்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் இம்மாதம் 14ம் தேதி ரிலீசாக உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
விஜய்யின் படங்களின் பர்ஸ்ட் சிங்கிள் எப்போதுமே ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக அமையும். இந்நிலையில் பர்ஸ்ட் சிங்கிள் குறித்த இந்த அறிவிப்பு விஜய் ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை கொடுத்துள்ளன. அவர்கள் இம்மாதத்திலேயே அடுத்தடுத்து விஜய் படங்களின் உற்சாக அப்டேட்களை எதிர்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது. இம்மாதத்திலேயே விஜய்யின் கடைசி படமான தளபதி 69 படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் தயாரிப்பு டிவிவி கிரியேஷன்ஸ் என்பது உறுதியான நிலையில் படத்தின் இயக்குனர் யார் என்பதை இம்மாதத்தில் படக்குழுவினர் உறுதிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் விஜய்: நடிகர் விஜய் - வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி வரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் ஷூட்டிங் இம்மாதத்துடன் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. கேரளா, சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் இந்த படத்தின் சூட்டிங் நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்தக்கட்ட ஷூட்டிங்கிற்காக விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் மாஸ்கோ செல்ல உள்ளனர். அங்கு தொடர்ந்து இரு வாரங்கள் இந்த படத்தின் சூட்டிங் நடக்க உள்ளதாகவும் இதையடுத்து படத்தின் ஒட்டுமொத்த ஷூட்டிங் நிறைவடையுள்ளதாகவும் படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. இதனிடையே இந்த படம் ஆகஸ்ட் மாதத்தில் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மாஸ்கோ செல்லும் GOAT டீம்: இந்நிலையில் அதையொட்டி படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்து, போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகளை துரிதப்படுத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதனிடையே படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களை கேட்டு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் படத்தை ட்ரெண்டாக்கிவந்த சூழலில் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வரும் தமிழ் புத்தாண்டையொட்டி ஏப்ரல் 14ம் தேதி வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே விஜய்யின் அடுத்த மற்றும் இறுதிப்படமான தளபதி 69 படத்தின் அறிவிப்பும் இம்மாதத்தில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்தடுத்த விஜய் படங்களின் அப்டேட்கள் வெளியாகவுள்ளது அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
கவனம் பெறும் தளபதி 69 படம்: விஜய்யின் அரசியல் என்ட்ரி கவனம் பெற்றுள்ள நிலையில் அவரது இறுதிப்படமாக உருவாகவுள்ள தளபதி 69 படமும் அதே அளவிற்கு கவனத்தை பெற்றுள்ளது. இந்தப் படத்தை பிரபல தெலுங்குப்பட நிறுவனமான டிவிவி கிரியேஷன்ஸ் தயாரிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதன் இயக்குநர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தை இயக்குநர் ஹெச் வினோத் இயக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படம் அரசியல் கதைக்களத்தில் உருவாகவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே இந்தப் படத்தின் தயாரிப்பு குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளன.
இருவேறு நிறுவனங்கள் தயாரிப்பில் தளபதி 69?: தளபதி 69 படத்தை ஆர்ஆர்ஆர் உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ள டிவிவி என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தை டிவிவி என்டர்டெயின்மெண்ட்டுடன் இணைந்து முன்னதாக விஜய்யின் லியோ படத்தை தயாரித்த 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனமும் தயாரிக்கவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இவை குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











