கோட் படம் மாதிரி தளபதி 69 இருக்காது.. ஹெச் வினோத் வேற மாதிரி.. அந்தணன் சொன்ன விஷயம்!
சென்னை: நடிகர் விஜய்யின் கோட் படம் வெளியாகி சர்வதேச அளவில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. சில கலவையான விமர்சனங்களை பெற்றுள்ள போதிலும் படம் ரசிகர்களை கொண்டாடவே செய்துள்ளது. சர்வதேச அளவில் இரு தினங்களிலேயே 200 கோடி ரூபாய் வசூலை அள்ளியுள்ளது.
கோட் மற்றும் தளபதி 69 படங்களை தொடர்ந்து சினிமாவில் இருந்து விலகி தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாக விஜய் அறிவித்துள்ள நிலையில், இந்தப் படங்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளன. இதில் கோட் படம் ஓரளவிற்கு ரசிகர்களை கவர்ந்துள்ளது. படத்தில் என்டர்டெயின்மெண்ட்டிற்கு மிகப்பெரிய அளவில் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.

கோட் படம்: நடிகர் விஜய், பிரஷாந்த், பிரபுதேவா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த 5ம் தேதி திரையரங்குகளை ஆக்கிரமிப்பு செய்தது கோட் படம். இந்தப் படம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய நிலையில், ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வசூலை அள்ளி வருகிறது. சில கலவையான விமர்சனங்களை பெற்றுள்ள போதிலும் வெங்கட்பிரபு இந்தப் படத்தில் விஜய்யை மாஸாக காட்டியுள்ளார். அப்பா மற்றும் மகன் என இருவேறு கேரக்டர்களில் விஜய் நடித்துள்ள நிலையில், படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படம் மிகவும் பிரம்மாண்டமாக டீ ஏஜிங் தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றுடன் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.
மாஸ் காட்டும் கோட்: கோட் மற்றும் தளபதி 69 படங்களை தொடர்ந்து சினிமாவில் இருந்து விலகவுள்ளதாக விஜய் அறிவித்துள்ள நிலையில், கோட் படம் மிகப்பெரிய ஹைப்புடன்தான் காணப்பட்டது. ரசிகர்களும் போட்டிப் போட்டுக் கொண்டு, முதல் ஒரு வாரத்திற்கு ஆன்லைன் புக்கிங்கை செய்தனர். இனிவரும் வீக் -எண்டில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையும் சேர்ந்துள்ள நிலையில், படத்தை ரசிகர்கள் மிக விருப்பத்துடன் திரையரங்குகளில் கண்டு ரசிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தின் சோலோ ரிலீசும் படத்தின் வெற்றிக்கு மற்றுமொரு காரணமாக அமைந்துள்ளது. இவையனைத்தையும்விட விஜய் என்ற மாஸ் ஒன்றே போதும் ரசிகர்களை திரையரங்குகளை நோக்கி பயணம் செய்ய என்றே விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
தளபதி 69 குறித்து அந்தணன்: இந்தப் படம் பக்கா கமர்ஷியல் அம்சங்களுடன் ஆக்ஷன், காமெடி, சென்டிமெண்ட் என அனைத்தும் கலந்த கலவையாக வெளியாகியுள்ளது. ஆனால் அடுத்ததாக ஹெச் வினோத் இயக்கத்தில் விஜய் இணையவுள்ள தளபதி 69 படத்தில் இவற்றை எதிர்பார்க்க முடியாது என்று வலைபேச்சு அந்தணன் தெரிவித்துள்ளார். கோட் படத்தின் கலகலப்பு தளபதி 69 படத்தில் இருக்காது என்றும் ஹெச் வினோத் இந்தப் படத்தை சீரியசாகத்தான் எடுப்பார் என்றும் அவர் கூறியுள்ளார். இதில் கண்டிப்பாக அரசியல் கலந்து இருக்கும் என்றும் அந்தணன் தெரிவித்துள்ளார். விஜய்யின் கேரியரில் இந்தப் படம் தரமாக அமையும் என்றும் கூறியுள்ளார்.
அரசியல் படமாக தளபதி 69 அமையும்: பிரசாரப் படமாக கண்டிப்பாக தளபதி 69 படம் இருக்காது என்றும் போராட்டக் குழு தலைவராக விஜய் இந்தப் படத்தில் காண்பிக்கப்படுவார் என்றும் தனக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அந்தணன் தெரிவித்துள்ளார். இதனிடையே, இன்டஸ்ட்ரியில் அனைவரையும் கோட் படம் கவர்ந்துள்ளதாகவும் அந்தணன் தெரிவித்துள்ளார். விஜய்யின் கேரக்டர்களுக்கு தொழில்நுட்பம் மூலமாக மிகப்பெரிய வித்தியாசத்தை படம் கொடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஹேட்டர்கள் எப்போதுமே இருப்பார்கள் என்றும் அதை கவனத்தில் கொள்ள வேண்டியதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











