Vijay: GOAT படத்தின் 50% டப்பிங் பணிகள் நிறைவு.. அடுத்தடுத்த மாஸ் பிளானில் டீம்!
சென்னை: நடிகர் விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் ஷூட்டிங் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ள சூழலில் வரும் 15ம் தேதிக்குள் இந்த படத்தின் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளை நிறைவு செய்ய இயக்குனர் வெங்கட் பிரபு திட்டமிட்டு அதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளார். இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரபுதேவா, பிரஷாந்த் என லீடிங் ஹீரோக்களும் நடித்துவரும் சூழலில் அவர்களை இந்த படத்தில் வெங்கட் பிரபு எப்படி பயன்படுத்திருப்பார் என்று அறிந்து கொள்ள ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதனிடையே 90களில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து சூப்பர் ஹிட் ஹீரோவாக வலம்வந்த நடிகர் மோகன், இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாகியுள்ளார். அவரது கேரக்டர் எப்படி அமைந்திருக்கும் என்று தெரிந்து கொள்ளவும் ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். படம் சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் எடுக்கப்பட்டுள்ள சூழலில், அப்பா -மகன் என இருவேறு கேரக்டர்களில் விஜய் மாஸ் காட்டியுள்ளார்.

நடிகர் விஜய்: நடிகர் விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் ஷூட்டிங், தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்தப் படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வரும் சூழலில் படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை எதிர்பார்க்க செய்துள்ளது. படத்தில் நடிகர் விஜய் அப்பா மற்றும் மகன் என இருவேறு கேரக்டர்கள் நடித்து வரும் சூழலில் மகன் விஜய்க்காக டீ ஏஜிங் டெக்னாலஜியை இந்த படத்தில் பயன்படுத்தியுள்ளார் வெங்கட் பிரபு. படம் சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் டைம் டிராவலிங்கை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
விஜய்யுடன் இணைந்த சிவகார்த்திகேயன்: இந்தப் படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மோகன் நடித்து வருகின்றனர். இது மட்டுமில்லாமல் தன்னுடைய கேங்கை சேர்ந்த பிரேம்ஜி, வைபவ் உள்ளிட்டவர்களையும் படத்தில் இணைத்துள்ளார் வெங்கட் பிரபு. இதனிடையே இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து த்ரிஷா ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். இந்த பாடல் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனும் நடித்துள்ளதாகவும் இதற்கான சூட்டிங் கடந்த சில தினங்களாக சென்னையில் நடைபெற்றதாகவும் கூறப்பட்டுள்ளது.
50% டப்பிங் பணிகள் நிறைவு: இதனிடையே, இந்த படத்தின் டப்பிங் பணிகளையும் ஒருபுறம் கவனம் செலுத்தி நடத்தி வருகிறார் வெங்கட் பிரபு. இந்தப் படத்தின் 50 சதவிகித டப்பிங் பணிகள் நிறைவடைந்துள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் வரும் 15ம் தேதிக்குள் விஜய் சம்பந்தப்பட்ட படத்தின் காட்சிகளை நிறைவு செய்ய வெங்கட் பிரபு திட்டமிட்டு அதற்கு ஏற்ப ஷூட்டிங்கை நடத்தி வருவதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் ரிலீஸ் செப்டம்பர் 5ம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ள சூழலில் போஸ்ட் புரொடக்ஷனையும் துரிதப்படுத்தி குறிப்பிட்ட நேரத்தில் ரிலீஸ் செய்ய வெங்கட் பிரபு திட்டமிட்டுள்ளார்.
மாஸ் & கிளாஸ்: அவரது படங்களில் எப்போதுமே மாஸ் மற்றும் கிளாஸ் இரண்டுமே இருக்கும். அந்த வகையில் விஜய்யின் இறுதி படங்களில் ஒன்றாக உருவாகி வரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படம் ரசிகர்களை என்றென்றும் நினைவில் வைக்க செய்யும் என்று எதிர்பார்க்கலாம். இந்தப் படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா படத்திற்காக மிகப்பெரிய அளவில் மெனக்கெட்டுள்ள சூழலில், படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியானது. ஆனால் அவரது இசை ரசிகர்களை அதிகளவில் கவரவில்லை. இதனிடையே வரும் ஜூன் மாதத்தில் விஜய் பிறந்தநாளையொட்டி படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











