Vijay: ஒரே நாளில் 25 மில்லியனை நெருங்கிய GOAT படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்.. ரசிகர்களை கவர்ந்ததா?
சென்னை: நடிகர் விஜய், பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துவரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். இந்தப் படத்தின் சூட்டிங் தற்போது மாஸ்கோவில் நடந்து வருகிறது. படத்தின் சூட்டிங் இன்னும் சில தினங்களில் நிறைவு செய்யப்பட்டு, படக்குழுவினர் வரும் 17ம் தேதி சென்னை திரும்பவுள்ளதாகவும் மக்களவை தேர்தலில் நடிகர் விஜய் வாக்களிப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்தப் படம் செப்டம்பர் 5ம் தேதி ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள சூழலில் அடுத்தடுத்த ப்ரமோஷன்களையும் படக்குழுவினர் திட்டமிட்டு வருகின்றனர். நேற்றைய தினம் தமிழ் புத்தாண்டையொட்டி படத்தின் பர்ஸ்ட் சிங்கிளை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். நடிகர் விஜய் வாய்சில் இந்தப் பாடலுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நடிகர் விஜய்: நடிகர் விஜய், பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்டவர்கள் இணைந்து நடித்துவரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் சூட்டிங் தற்போது மாஸ்கோவில் நடந்து வருகிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகிவரும் இந்தப் படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங்கும் இன்னும் சில தினங்களில் நடந்து முடியவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதையடுத்து வரும் 17ம் தேதி விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் சென்னை திரும்பவுள்ளனர். தொடர்ந்து தன்னுடைய கட்சிப்பணிகளிலும் தளபதி 69 படத்தின் வேலைகளிலும் விஜய் ஈடுபட திட்டமிட்டுள்ளார்.
தளபதி 69 படம்: இந்தப் படத்தின் போஸ்டர்கள் உள்ளிட்டவை முன்னதாக வெளியாகி ரசிகர்ளை வெகுவாக கவர்ந்துள்ளன. இதனிடையே, படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இன்னும் சில தினங்களில் படத்தின் சூட்டிங் நிறைவடையவுள்ள நிலையில், அடுத்தடுத்த போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளை படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதனிடையே வரும் ஜூன் மாதத்தில் விஜய்யின் தளபதி 69 படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாகவும் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் நிறைவடையவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
GOAT ஃபர்ஸ்ட் சிங்கிள்: இதனிடையே நேற்றைய தினம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். தமிழ் புத்தாண்டையொட்டி வெளியிடப்பட்டிருந்த இந்தப் பாடல், ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. பாடல் வெளியீட்டிற்காக காத்திருந்து ரசிகர்கள் லட்சக்கணக்கானோர் இந்த பாடலை பார்த்துள்ளனர். இதையொட்டி இந்தப் பாடல் 24 மணிநேரத்திலேயே 25 மில்லியன் வியூஸ்களை எட்டியுள்ளது. மேலும் யூடியூபிலும் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் காணப்படுகிறது. விஜய் வாய்சில் வெளியான இந்தப் பாடலுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
விஜய்க்கு சமமான ஆட்டம்: அதிகமான எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்தப் பாடல் அதை பூர்த்தி செய்யவில்லை என்றே கமெண்ட்கள் எழுந்துள்ளன. இதனால் ரசிகர்கள் அப்செட்டான போதிலும் தங்களின் விருப்பத்திற்குரிய விஜய்யின் பாடலை பார்ப்பதற்கு மிகுந்த ஆர்வம் காட்டியதை பார்க்க முடிந்தது. மேலும் விஜய் தனது முதல் பாடலிலேயே பிரஷாந்த், பிரபுதேவா உள்ளிட்டவர்களுக்கு சமமாக ஆடும் வாய்ப்பை கொடுத்துள்ளதும் சிறப்பாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக விஜய்யை காட்டிலும் பிரபுதேவா இந்தப் பாடலில் அதிகமாக ஸ்கோர் செய்ததை பார்க்க முடிந்தது. இதேபோல நீண்ட காலங்களுக்கு பிறகு வந்தாலும் பிரஷாந்தும் சிறப்பாக ஆடியதையும் அனைத்து தரப்பினரும் சுட்டிக் காட்டியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











