Vijay: விற்றுத் தீர்ந்த GOAT பட வெளிநாட்டு உரிமை.. அடுத்த மாதத்தில் வெளியாகும் பர்ஸ்ட் சிங்கிள்!

சென்னை: நடிகர் விஜயின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் ஷூட்டிங் கேரளாவின் திருவனந்தபுரத்தில் நடந்து வருகிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் திருவனந்தபுரம் சூட்டிங் நாளைய தினம் நிறைவடைய உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக வரும் ஏப்ரல் முதல் வாரத்தில் படக்குழுவினர் மாஸ்கோ செல்ல திட்டமிட்டுள்ளனர். இந்தப்படம் மற்றும் தளபதி 69 படங்களுடன் சினிமாவில் இருந்து விலக உள்ளதாகவும் தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் விஜய் முன்னதாக அறிவித்துள்ள நிலையில் GOAT படத்தின் சூட்டிங் அடுத்த மாதத்துடன் நிறைவடையவுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் அடுத்த மாதம் 19ம் தேதி நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை என்றும் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும் விஜய் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதனிடையே நாடாளுமன்ற தேர்தல் நடக்கும் நேரத்தில் விஜய் வெளிநாட்டில் இருக்கும்படியாக GOAT படத்தின் ஷெட்யூல் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன, இதனிடையே அடுத்த மாதத்தில் விஜய்யின் தளபதி 69 படத்தின் அறிவிப்பு வெளியாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த படத்தினை பிரபல தெலுங்கு பட நிறுவனமான டிவிவி தயாரிக்கவுள்ள நிலையில் படத்தின் இயக்குனர் குறித்த அறிவிப்பு அடுத்த மாதத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Vijay s The greatest of all time movie overseas rights bagged by Ahimsa entertainment it seems

நடிகர் விஜய்: நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் ஷூட்டிங்கில் இணைந்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடந்து வருகிறது. படத்தின் சூட்டிங் நாளைய தினம் நிறைவடைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் தொடர்ந்து அடுத்தடுத்து கேரள ரசிகர்களை தன்னுடைய ஷூட்டிங் ஸ்பாட் மற்றும் தான் தங்கியுள்ள ஹோட்டல் வளாகத்தில் விஜய் சந்தித்து வருகிறார். இன்று மாலையும் அதிகமான ரசிகர்களை நேரடியாக அவர் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கேரள ஷுட்டிங்: கேரள ஷூட்டிங் நாளைய தினம் நிறைவடைய உள்ள நிலையில் வரும் ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்தில் படக்குழுவினர் அடுத்த கட்ட சூட்டிங்கிற்காக மாஸ்கோ செல்ல உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த ஷூட்டிங்கை தொடர்ந்து இரண்டு வாரங்கள் அங்கே நடத்த வெங்கட் பிரபு திட்டமிட்டுள்ளார். படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங் அடுத்த மாதத்திற்குள் முழுமையாக நிறைவடையுள்ளதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. படம் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் ரிலீசாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் விஜய்க்கு வெறித்தனமான ரசிகர்கள் அதிகமாக காணப்படுகின்றனர். இதை கடந்த சில தினங்களில் பார்க்க முடிந்தது.

வெறித்தனமான ரசிகர்கள்: விஜய்யின் வரவிற்காக காத்திருந்த கேரள ரசிகர்கள் முன்னதாகவே அவரை வரவேற்கும் வகையில் அவரது படத்தின் சூட்டிங் திட்டமிடப்பட்ட கிரீன் ஃபீல்ட் மைதான வளாகத்தில் ஏராளமான பேனர்களை வைத்து அவரை வெல்கம் செய்தனர். தொடர்ந்து அவர் விமானத்தில் சென்ற நிலையில் விமான நிலையத்திலும் ஏராளமான ரசிகர்கள் காத்திருந்து அவரை உற்சாகமாக வரவேற்றனர். தொடர்ந்து அவரது சூட்டிங் நடந்த இடம் வரை அவருடன் ஊர்வலமாக அவர்கள் சென்றதையும் பார்க்க முடிந்தது.

GOAT படத்தின் வெளிநாட்டு உரிமை: GOAT படத்தின் ரிலீசுக்கு முந்தைய வியாபாரம் களைகட்டிய நிலையில் வெளிநாட்டு உரிமத்தை அஹிம்சா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. மிகப்பெரிய தொகைக்கு இந்த படத்தின் வெளிநாட்டு உரிமை விற்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் இந்தப் படத்தின் முக்கியமான அப்டேட் வரும் ஏப்ரல் மாதத்தில் வெளியாக உள்ளதாக அஹிம்சா நிறுவனம் தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளது. GOAT படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாக உள்ளதாக முன்னதாக தகவல்கள் வெளியான நிலையில் அது குறித்து தான் இந்த அப்டேட் வெளியாகியுள்ளது. படத்தில் விஜய் ஒரு பாடல் பாடியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது தவிர்த்து படத்தின் டைட்டில் சாங் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில் எந்த பாடல் ரிலீசாகும் என்பது குறித்து தெரிந்து கொள்ள ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X