Actor Vijay: விஜய் இல்லாத கோட் பட சூட்டிங்.. இலங்கையில் முகாமிட்ட டீம்!

சென்னை: நடிகர் விஜய் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் சூட்டிங்கில் தன்னுடைய போர்ஷன்களை நிறைவு செய்துள்ளார். இதையடுத்து லாஸ் ஏஞ்சல்ஸில் மகன் விஜய் கேரக்டருக்காக டீ ஏஜிங் வேலைகளுக்காக சென்றிருந்த விஜய், அதை சிறப்பாக நிறைவு செய்துவிட்டு நாடு திரும்பியுள்ளார். இந்நிலையில் கோட் படத்தின் சூட்டிங் இன்னும் 7 நாட்கள் தொடர்ந்து நடக்கவுள்ளதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன் இந்த படத்தின் ஒட்டுமொத்த ஷூட்டிங்கும் நிறைவடைய உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ள சூழலில் முன்னதாக படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் வரும் 22ம் தேதி விஜய் பிறந்தநாளை ஒட்டி படத்தின் இரண்டாவது சிங்கிள் ரிலீஸ் ஆகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vijay The greatest of all time movie Sri lanka tamil cinema

நடிகர் விஜய்: நடிகர் விஜய் தற்போது தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் தன்னுடைய போர்ஷன்களின் சூட்டிங்கை நிறைவு செய்துள்ளார். இந்த படத்தின் டப்பிங் பணிகளையும் 50 சதவிகிதத்தை அவர் பூர்த்தி செய்த நிலையில் இன்னும் சில தினங்களில் மீதமுள்ள டப்பிங் வேலைகளையும் அவர் நிறைவு செய்ய உள்ளதாக கூறப்பட்டுள்ளது. முன்னதாக மகன் விஜய் கேரக்டரின் டீ ஏஜிங் வேலைகளை செய்வதற்காக விஜய் மற்றும் வெங்கட் பிரபு உள்ளிட்ட படக்குழுவினர் லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றிருந்தனர். அந்த வேலைகளையும் சிறப்பாக நிறைவு செய்துவிட்டு விஜய் உள்ளிட்டோர் நாடு திரும்பிய சூழலில் அடுத்தடுத்த போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளை படக்குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் சூட்டிங்: தற்போது கோட் படக்குழுவினர் இலங்கையில் அடுத்த கட்ட சூட்டிங்கில் உள்ளனர். ஆனால் இந்த சூட்டிங்கில் விஜய் பங்கேற்கவில்லை. இலங்கை ஹார்பரில் ஆக்ஷன் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது. முன்னதாக போகம்பரா சிறைச்சாலையில் இந்தப் படத்தின் சூட்டிங் நடத்தப்பட்டுள்ளது. இலங்கையின் அடுத்தடுத்த பகுதிகளில் இன்னும் ஏழு நாட்கள் கோட் படத்தின் ஷூட்டிங் தொடர்ந்து நடத்தப்பட உள்ளதாகவும் அத்துடன் இந்த படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங்கும் நிறைவடையவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் விஜய்யுடன் பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல், மீனாட்சி சவுத்ரி, சினேகா உள்ளிட்ட நடிகர்கள் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸ்: மேலும் கேமியோ கேரக்டர்களில் மட்டுமே சிவகார்த்திகேயன் திரிஷா, மறைந்த நடிகர் விஜயகாந்த் உள்ளிட்டவர்கள் இணைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. 90களில் வெள்ளிவிழா நாயகனாக வலம் வந்த நடிகர் மோகன் இந்தப் படத்தில் வில்லனாக நடித்துள்ளார். முன்னதாக உருவம் படத்தில் அவர் நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருந்த சூழலில் இந்த படம் அவருக்கு எப்படி அமையும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர். கோட் படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஒருபுறம் விறுவிறுப்பாக நடத்தப்பட்டு வருகிறது.

விஜய் பிறந்தநாளில் அப்டேட்: இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் முன்னதாக வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள சூழலில் படத்தின் இரண்டாவது சிங்கிள் வரும் 22ம் தேதி விஜய்யின் பிறந்த நாளையொட்டி வெளியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. விஜய்யின் பிறந்தநாளில் அவரது அடுத்த படமான தளபதி 69 படம் குறித்த அறிவிப்பும் வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ஹெச் வினோத் இயக்க உள்ளதாகவும் படம் அரசியல் கதைகளத்தில் உருவாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X