GOAT release date: பக்ரீத்துக்கு பிரியாணி போட ரெடியாகிட்டாராம் வெங்கட் பிரபு.. ரிலீஸ் அப்டேட் இதோ!

சென்னை: வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் 68வது படத்துக்கு The Greatest of All Time என தலைப்பு வைக்கப்பட்டுள்ள நிலையில், அந்த படத்தின் படப்பிடிப்பை விறுவிறுப்பாக நடத்தி வருகிறாராம் வெங்கட் பிரபு. புரொடக்‌ஷனை விட போஸ்ட் புரொடக்‌ஷனில் தான் இந்த படத்துக்கு அதிக நேரம் செலவிட வேண்டியுள்ளதால் வரும் மார்ச் மாதத்துக்குள்ளே படப்பிடிப்பை முடித்து விடவும் வெங்கட் பிரபு திட்டமிட்டு இருப்பதாகவும் கூறுகின்றனர். இந்நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல்கள் தற்போது கசிந்துள்ளன.

ஏஜிஎஸ் தயாரிப்பில் விஜய் நடித்த பிகில் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் பெற்ற நிலையில், அந்த படத்தை இயக்கிய அட்லீ அடுத்து பாலிவுட்டில் ஷாருக்கானின் ஜவான் படத்தை இயக்கி இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்தார். இந்நிலையில், அடுத்து ஏஜிஎஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தை இயக்கி வருகிறார் வெங்கட் பிரபு.

Vijays The Greatest of All Time release is planned for Bakrid 2024?

சிஜி வேலைகள் நிறைய இருக்கு: தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் தாறுமாறாக இருந்தாலும், அதனை ஜூம் செய்து பார்த்தால் யங் விஜய் அனிமேஷன் பொம்மை போலவே இருப்பார். அதற்கு காரணம் அதற்கான முறையான டீஏஜிங் வேலைகள் இன்னமும் நடைபெறவில்லை என்கின்றனர். ஆனால், அதற்கான நேரத்தை ஒதுக்கி ஹாலிவுட் நிறுவனத்துடன் லாஸ் வீகாஸில் பணிகள் நடைபெற்று வருவதாகவும் எவ்வளவு சீக்கிரம் ஷூட்டிங்கை முடித்து விட்டு வெங்கட் பிரபு கொடுக்கிறாரோ அதன் பிறகு தாறுமாறாக டீஏஜிங் பணிகள் நடைபெறும் எனக் கூறுகின்றனர்.

பக்ரீத் பிரியாணி: லியோ படத்தை ஆயுத பூஜை ரிலீஸாக வெளியிட்ட தளபதி விஜய் இந்த முறையாவது தீபாவளிக்கு படத்தை வெளியிடுவார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு மார்ச் மாதமே ஷூட்டிங் முடியப் போகிறது என்கிற தகவலால் கங்குவா படத்துக்கு போட்டியாக ஏப்ரல் மாதமே வெளியாகுமா? என எதிர்பார்க்க ஆரம்பித்தனர். ஆனால், இந்த படம் அதிகமாக போஸ்ட் புரொடக்‌ஷனில் தான் மெருகேற்றப்பட வேண்டி உள்ள நிலையில், பக்ரீத் பிரியாணியாக GOAT வெளியாகப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

எந்த தேதியில் ரிலீஸ்?: இந்த ஆண்டு பக்ரீத் பண்டிகை ஜூன் 16 அல்லது 17ல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அந்த வாரம் ஜூன் 13ம் தேதி வியாழக்கிழமையே தி கோட் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. ஏப்ரல் முதல் ஜூன் வரை தொடர்ந்து இந்த ஆண்டு அடுத்தடுத்து பெரிய படங்கள் வரிசை கட்டி வெளியாக காத்திருக்கின்றன.

போட்டியில்லா ரிலீஸ்: தொடர்ந்து 5 நாட்கள் லியோ படத்தை போலவே எந்தவொரு போட்டியும் இல்லாமல் தி கோட் படத்தை வெளியிடவும் பக்காவாக பிளான் செய்து ஏஜிஎஸ் நிறுவனம் பக்ரீத் பண்டிகையை டார்கெட் செய்திருப்பதாக கூறுகின்றனர். சம்மர் விடுமுறைக்கு இந்தியன் 2, கங்குவா, வேட்டையன் மற்றும் விடாமுயற்சி உள்ளிட்ட படங்கள் போட்டிப் போட்டு வெளியாகி முடித்து விட்டால் விஜய் படம் வசூலில் பெரிய வேட்டை ஆடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X