ஆப் ஆனதுலாம் என்னடா கிராஷ்.. 2026ல வோட்டிங் மெஷினை ஆக்குறோம் பாரு.. டிரெண்டாகும் தவெக மீம்!
சென்னை: தளபதி விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியில் இணைய தனது ரசிகர்களுக்கு நேற்று அழைப்பு விடுத்திருந்தார். தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைவதற்கான உறுப்பினர் சேர்க்கை செயலியை அறிமுகம் செய்து வைத்த நடிகர் விஜய் முதல் உறுப்பினராக தன்னைத்தானே ஆக்கிக் கொண்டார்.
தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த வீடியோவை நேற்று மாலை நடிகர் விஜய் ஷேர் செய்த நிலையில் ஏகப்பட்ட ரசிகர்கள் விஜய் கட்சியில் இணைய ஆர்வமுடன் அந்த செயலியை ஓபன் செய்துள்ளனர். சில நிமிடங்களிலேயே அதிக கூட்ட நெரிசல் காரணமாக அந்த செயலி ஸ்தம்பித்துப் போய் விட்டது.

அதை வைத்து தற்போது நெட்டிசன்கள் ஏகப்பட்ட மீம்களைப் போட்டு பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.
முதல் உறுப்பினர் விஜய்: வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் படத்தில் நடித்து வருகிறார் விஜய். அந்த படத்தில் நடித்துக்கொண்டு தனது அரசியல் ஆர்வத்தையும் முழுதாக வெளிக்காட்டி தமிழ்நாடு வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கி உள்ளார். நேற்று அதற்கான ஆப் ஒன்றை அறிமுகப்படுத்திய விஜய் அதில், எப்படி இணைவது என முதல் ஆளாக தன்னைத்தானே இணைத்துக் கொண்டு டெமோ காட்டிய வீடியோ ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியது.
முடங்கிப்போன செயலி: லியோ படத்தின் முதல் நாள் ஷோவுக்கான டிக்கெட் புக்கிங் எப்படி புக் மை ஷோவில் ஆரம்பித்த அடுத்த நிமிடமே ஸ்தம்பித்து ஹவுஸ்ஃபுல் ஆனதோ அதே போல லட்சக் கணக்கான விஜய்யின் ரசிகர்கள் விஜய் கட்சியில் இணைய முயற்சி செய்ய அந்த செயலி முடங்கி விட்டதாக தகவல்கள் வெளியாகின.

பறக்கும் மீம்ஸ்: ”ஆப் ஆனதுலாம் என்னடா கிராஷ், 2026ல வோட்டிங் மெஷினை ஆக்குறோம் பாரு கிராஷ்” என பரிதாபங்கள் கோபி, சுதாகரை வைத்து போடப்பட்டுள்ள தவெக மீம் டிரெண்டாகி வருகிறது. நடிகர் விஜய்யின் அரசியல் வருகைக்கு ஆதரவு கிடைத்து வரும் அதே சூழலில் அஜித், ரஜினி மற்றும் சூர்யா ரசிகர்கள் தொடர்ந்து ட்ரோல் செய்து வருகின்றனர்.
20 லட்சம் பேர்: 15 மணி நேரத்தில் அதிகபட்சமாக 20 லட்சம் பேர் நடிகர் விஜய்யின் தவெக கட்சியில் உறுப்பினர்களாக இணைந்திருப்பதை பார்த்து பல அரசியல் கட்சிகள் மட்டுமின்றி நடிகர் விஜய்யின் ஹேட்டர்களும் அரண்டு போயுள்ளனர். என்னடா இது விஜய் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் போல கட்சிக்கும் ரசிகர்கள் இப்படி ஒரே நாளில் 2 மில்லியன் வந்துட்டாங்களே என வாயடைத்துப் போயுள்ளனர். 20 மில்லியன் தான் விஜய்யின் டார்கெட்டாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
ரசிகர்கள் அட்ராசிட்டி: நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தாலும் வந்தார் வீட்ல என் புருஷன் தொல்லை தாங்க முடியல என தளபதி வாழ்கன்னு சொல்லு என விஜய் ரசிகர் அட்ராசிட்டி பண்ணும் வீடியோக்களை எல்லாம் நெட்டிசன்கள் வெளியிட்டு வருகின்றனர். கோட் மற்றும் தளபதி 69 படத்துக்குப் பிறகு விஜய் நடிக்கவில்லை என்றாலும், சோஷியல் மீடியாவிலும் பொது தளத்திலும் அடிக்கடி விஜய்யை பார்ப்பதே ரசிகர்களுக்கு பெரிய சந்தோஷம் தான்.


Click it and Unblock the Notifications











