TVK conference:ஒரே இடத்தில் குவிந்த லட்சக்கணக்கான தொண்டர்கள்.. ஸ்தம்பித்த விக்கிரவாண்டி!

விக்கிரவாண்டி: நடிகர் விஜய் 40 ஆண்டுகளை கடந்து சினிமாவில் தன்னை மிகச்சிறந்த ஆளுமையாக வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில் தற்போது நடித்துவரும் தளபதி 69 படத்துடன் அவர் சினிமாவில் இருந்து ஓய்வு பெற உள்ளதாகவும் விலக உள்ளதாகவும் தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் குறித்த அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான நிலையில் இன்றைய தினம் அந்த கட்சியின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடத்தப்பட்டுள்ளது. விஜய்க்கு எப்போதுமே ரசிகர்கள் வட்டம் மிகப்பெரியது. அதை நிரூபிக்கும் வகையில் இந்த மாநாட்டிலும் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்று உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

vijay tvk conference vikravandi


நடிகர் விஜய்: நடிகர் விஜய் 40 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் தன்னை சிறுவனாகவும். ஹீரோவாகவும் மாஸ் ஹீரோவாகவும் தளபதியாகவும் பல பரிணாமங்களில் ரசிகர்களிடையே கொண்டு சென்றவர். ஒரு படத்திற்கு 200 கோடிகளுக்கு மேல் அவர் சம்பளமாக பெற்று வருவதாக கூறப்படுகிறது. தற்போது அவரது கடைசி படமாக உருவாகியுள்ள தளபதி 69 படத்திற்காக அவர் 275 கோடி ரூபாய்களை சம்பளமாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இத்தகைய மாஸ் ஹீரோவாக வலம் வரும் விஜய் தளபதி 69 படத்துடன் படங்களில் இருந்து விலகி தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளார்.

தவெக முதல் மாநாடு: கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக தன்னுடைய தமிழக வெற்றிக்கழகம் குறித்து விஜய் அறிவித்த நிலையில் தன்னுடைய இறுதி படம் குறித்தும் அவர் அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் இன்றைய தினம் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் அவரது தவெக கட்சியின் முதல் மாநாடு நடந்து வருகிறது. கடந்த சில வாரங்களாகவே இந்த மாநாடு குறித்து பல விஷயங்கள், தகவல்கள் வெளியான நிலையில் விஜய்யும் தன் பங்கிற்கு இந்த மாநாடு குறித்து அடுத்தடுத்த அப்டேட்களை வெளியிட்டு வந்தார். இந்நிலையில் இன்றைய தினம் மாநாடு விழுப்புரம் மாவட்டமே ஸ்தம்பிக்கும் வகையில் நடந்து வருகிறது.

லட்சக்கணக்கான தொண்டர்கள்: இந்த நிகழ்ச்சியில் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்று உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் ஐம்பதாயிரம் தொண்டர்கள் உட்காரும் வகையில் இருக்கைகள் போடப்பட்ட நிலையில், லட்சக்கணக்கான தொண்டர்கள் காலை முதலில் மாநாடு நடந்த இடத்திற்கு வந்தனர். இதனால் வழி நெடுகிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டமே ஸ்தம்பிக்கும் வகையில் இந்த மாநாடு தற்போது நடத்தப்பட்டுள்ளது. இந்த மாநாட்டை ஏழு மணிக்குள் நடத்தி முடிக்க காவல்துறையினர் தவெகத்தினருக்கு அறிவுறுத்தியுள்ளனர். வெகு தொலைவில் இருந்து எல்லாம் தொண்டர்கள் பொதுமக்கள் இந்த மாநாட்டில் பங்கேற்று உள்ளதால் அவர்கள் வீடு போய் சேரும் வகையில் 7 மணிக்குள் இந்த மாநாட்டை முடிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

கடுமையாக பாதித்த போக்குவரத்து: இதனிடையே இந்த மாநாட்டின் காரணமாக லட்சக்கணக்கான தொண்டர்கள் ஒரே இடத்தில் குவிந்ததால் சென்னை -விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் தொடர்ந்து பல மணிநேரங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாநாடு 4 மணிக்கு துவங்கவிருந்த நிலையில் ஒரு மணிநேரத்திற்கு முன்னதாகவே துவங்கப்பட்டது. ரசிகர்களிடையே ராம்ப் வாக் நடை பயின்ற விஜய், அவர்கள் கொடுத்த கட்சியின் துண்டுகளையும் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து குட்டிக் கதையுடன் அவர் பேசிய பேச்சு அனைவரையும் வசீகரிக்கும்வகையில் அமைந்திருந்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X