அண்ணனுக்கு ஏற்கனவே மிருக தோசம் இருக்கு.. இதுல இரண்டு யானை வேற.. குவியும் தவெக மீம்கள்!
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுக விழா இன்று காலை குறைவான நேரத்திலேயே நடத்தி முடிக்கப்பட்டாலும் அதன் தாக்கம் சோஷியல் மீடியாவில் இன்னும் ஒரு மாதம் நீடிக்கும் என்றே தெரிகிறது. காலை முதலே விஜய்யின் ஹேட்டர்கள் ஒன்று திரண்டு கொடியை டீகோட் செய்கிறோம் என்கிற பெயரில் ஏகப்பட்ட மீம்களை குவித்து வருகின்றனர்.
கொடியின் வரலாறு என விஜய் ரசிகர்கள் கொடிக்கான தவெகவின் ஆந்தம் பாடலில் இடம்பெற்ற வரிகளை டிரெண்ட் செய்து வருகின்றனர். கோட் படத்தின் 3 பாடல்களை விட இந்த பாடல் நன்றாக உள்ளது என்றும் வேட்டைக்காரன் பாடல் போலவே இருப்பதாகவும் ஏகப்பட்ட ட்ரோல்கள் குவிகின்றன.

கொடியில் இடம்பெற்றுள்ள யானைக்கு பகுஜன் சமாஜ் கட்சியினர் பஞ்சாயத்தை கிளப்பியுள்ள நிலையில், அண்ணனுக்கு மிருக தோசம் என்கிற மீம் வேறலெவலில் டிரெண்டாகி வருகிறது.
44 மில்லியன் வியூஸ்: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, மீனாட்சி சவுத்ரி, லைலா, அஜ்மல், மோகன், ஜெயராம், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள கோட் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் பெரிய பட்ஜெட்டில் படத்தை தயாரித்துள்ளது. விஜயகாந்த், சிவகார்த்திகேயன், த்ரிஷாவுக்கு கேமியோ இருக்கும் எனக் கூறப்படுகிறது. அந்த படத்தின் தமிழ் டிரெய்லர் 44 மில்லியன் வியூஸை தாண்டியுள்ளது. மற்ற மொழிகளில் வெளியிடப்பட்ட டிரெய்லர் வியூஸை மொத்தமாக சேர்த்தால் 50 மில்லியன் வியூஸை கடந்து டிரெண்டாகி வருகிறது. அடுத்த மாதம் செப்டம்பர் 5ம் தேதி கோட் திரைப்படம் திரைக்கு வருகிறது.
தவெக கொடி ட்ரோல்: வாகை மலர் பிங்க் நிறத்தில் இருக்கிறது. இது வாகை மலரே கிடையாது என்றும் தூங்கு மூஞ்சி மலர் என்று ஒரு ட்ரோல் ஓடிக் கொண்டிருக்கிறது. ஃபெவிக்கால் விளம்பர டப்பாவில் வரும் ரெண்டு யானையை எடுத்து கொடியில் ஒட்டி வச்சிருக்காரு விஜய் என்றும் கிண்டல் செய்து வருகின்றனர்.

எழுத்துப் பிழை போல: தமிழக வெற்றி கழகம் என முதலில் விஜய் தனது கட்சியின் பெயரை அறிவித்த நிலையில், அனைவரும் அது தவறு என்றும் தமிழக வெற்றிக் கழகம் என்று தான் வரவேண்டும் எனக் கூற கட்சியின் பெயரில் உள்ள பிழையை நீக்கினார். அதே போல தற்போது பகுஜன் சமாஜ் கட்சியின் யானை கொடியில் இடம்பெற்றுள்ள நிலையில், அதற்கான எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. கட்சிக் கொடியில் இருந்து யானைகள் அகற்றப்படுமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
மிருக தோசம்: இந்நிலையில், சுறா, புலி, பீஸ்ட், லியோ என ஏற்கனவே அண்ணனுக்கு மிருக தோசம் இருக்கு, இதுல கட்சி கொடியில ஒன்னுக்கு ரெண்டு யானை வேறையா விளங்கிடும் என கிண்டல் செய்து போடப்பட்டுள்ள மீம் டிரெண்டாகி வருகிறது.

தவெக கொடியுடன் அஜித்: அஜர்பைஜானில் நடிகர் அஜித் நடந்து வருவது போல ஃபர்ஸ்ட் லுக்கை வைத்து ஏஐ மூலம் எடிட் செய்த ரசிகர்கள் தற்போது, அஜித்தின் கையில் தவெக கொடியையும் கொடுத்து அலப்பறை செய்து வருகின்றனர். சமூக வலைதளங்கள் முழுவதும் விஜய் பற்றிய பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் பேச்சுகள் தான் அதிகம் உலா வருகின்றன. அந்த வகையில் ஃப்ரீ புரமோஷன் தான் என விஜய் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











