வாழ்க்கை ஒரு வட்டம்.. 108 ஆம்புலன்ஸை வைத்து கூட்டங்களில் இடையூறு.. கடைசியா 108 தொகுதிகளில் வென்ற விஜய்!

சென்னை: தவெக தலைவர் விஜய் நடத்திய கூட்டங்களிலும், அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி நடத்திய கூட்டங்களிலும் திட்டமிட்டே காலி ஆம்புலன்ஸை திமுக அனுப்புவதாக குற்றச்சாட்டுகள் கிளம்பின. இந்நிலையில், விஜய்யின் தவெக கட்சி 108 தொகுதிகளில் வென்றிருப்பதை பார்த்த மக்கள் 108 கடைசியா இப்படியொரு ஆப்பை திமுகவுக்கு வைக்கும் என சொப்பனத்திலும் கண்டில்லை என கலாய்த்து வருகின்றனர்.

விஜய் தொடர்ந்து நான் 2 வருஷமா கட்சி ஆரம்பிச்சி அரசியல் செய்றவன் இல்லை. 33 வருஷம் ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் சென்றுவிட்டு கட்சி ஆரம்பிச்சிருக்கேன். கான்ஃபிடன்ட்டாக இருங்க வெற்றி நிச்சயம் என்று சொல்லிக் கொண்டே வந்தார்.

Vijay s TVK Party won 108 seats in Tamil Nadu Elections 2026 and defeats DMK

2026 தேர்தலில் கப்பு முக்கியம் பிகிலு என சொன்னது போலவே கப்பை தட்டித் தூக்கிவிட்டார் விஜய். தளபதி பட கலெக்‌ஷன் எல்லாம் வடை இல்லை போல உண்மை தான் போல என அஜித் ரசிகர்களே ட்வீட் போட ஆரம்பித்துள்ளனர்.

சொல்லி அடித்த கில்லி: ஒரு வாட்டி முடிவு பண்ணிட்டேன்னா என் பேச்சை நானே கேட்கமாட்டேன் என பஞ்ச் வசனம் பேசிய விஜய் அரசியலில் இறங்கியதும் சினிமாவை விட்டு விடுவேன் என்றார். ஜன நாயகன் படமே ரிலீஸ் ஆக முடியாமல் பல சிக்கல்களை கொடுத்தாலும் அதை கண்டுகொள்ளாமல் தேர்தல் களத்தில் கையில் வேல் ஏந்தி செல்லும் இடமெல்லாம் மக்கள் கூட்டம் அலைமோத பரப்புரை மேற்கொண்ட விஜய் 75 ஆண்டு கால திமுகவையும் 50 ஆண்டுகால அதிமுகவையும் அடியோடு சாய்த்து விட்டு சிம்மாசனத்தில் அமரப் போகிறார்.

108 இடங்களில் வெற்றி: இதுவரை இப்படியொரு கிளைமேக்ஸ் ட்விஸ்ட்டை படத்தில் கூட ரசிகர்கள் பார்த்திருக்க மாட்டார்கள். நள்ளிரவு வரை சில இடங்களில் பல சுற்றுகளாக நடந்த வாக்குப் பதிவுகளின் முடிவில் கடைசியாக 1 வாக்கு வித்தியாசத்தில் பெரிய கருப்பனை வீழ்த்தி தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி வென்றது தான் உச்சபட்ச கிளைமேக்ஸ் ஆக நேற்று மாறி அந்த 108 தொகுதிகள் வெற்றியை விஜய்க்கு பரிசாக்கி உள்ளது. 108 ஆம்புலன்ஸை விட்டு விஜய்க்கு தொல்லை கொடுத்தவர்களுக்கு தற்போது 108 நம்பர் மிகப்பெரிய தலைவலியாக மாறிவிட்டது என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X