தளபதியை பார்க்க ஏகப்பட்ட பேர் குடும்பத்துடன் வந்துருக்காங்க.. ஆனால், அவரோட குடும்பம் வரலையேப்பா?

சென்னை: விக்கிரவாண்டியில் நடைபெற்று வரும் விஜய்யின் முதல் அரசியல் மாநாட்டில் சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பங்கேற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மாநாட்டுக்கு கூட்டமே வராது என கிண்டல் செய்த பலருக்கும் நெத்தியடி கொடுக்கும் விதமாக தளபதி விஜய்யின் தொண்டர்களும் ரசிகர்களும் குடும்பத்துடன், கைக்குழந்தைகளை எல்லாம் தூக்கிக் கொண்டு நேற்று முதல் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா என பல்வேறு இடங்களில் இருந்தும் வந்துள்ளனர்.

நடிகர் விஜய்யின் சினிமா விழாக்களிலும், அரசியல் சார்ந்த விழாக்களிலும் கடந்த சில வருடங்களாகவே அவரது மனைவி சங்கீதா மற்றும் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் மற்றும் மகள் திவ்யா சாஷா உள்ளிட்டோர் தலையே காட்டாமல் இருந்து வந்தது பல்வேறு கிசுகிசுக்களை சமூக வலைதளத்தில் எழுப்பியது.

tvk maanadu vijay sangeetha vijay

தளபதி 69 படத்தின் பூஜையை தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிலும் விஜய்யின் குடும்பத்தினர் வரவில்லையே? ஏன் என நெட்டிசன்கள் சோஷியல் மீடியாவில் மோசமான ஹாஷ்டேக்குகளை டிரெண்ட் செய்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தாயும் தந்தையும் தெய்வங்களே: கடந்த சில வருடங்களுக்கு முன்னதாக தனது அம்மா மற்றும் அப்பா தனது பெயரையும் புகைப்படத்தையும் எந்த வகையிலும் பயன்படுத்தக் கூடாது என நடிகர் விஜய் புகார் அளித்திருந்தது பெரிய சர்ச்சையை கிளப்பியது. ஆனால், என்னதான் பிள்ளைகள் எட்டி உதைத்தாலும் பெற்ற வயிறும் தூக்கி வளர்த்த தந்தையின் தோளும் குழந்தைகளை கைவிட மாட்டார்கள் என்பதற்கு தொடர்ந்து விஜய்யின் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் அம்மா ஷோபா சந்திரசேகர் இருவரும் தொடர்ந்து விஜய்யின் அரசியலுக்கு ஆதரவு கொடுத்து வரும் நிலையில், இன்று நடைபெற்று வரும் மாநாட்டுக்கும் வந்து முன்னிலையில், அமர்ந்து தனது மகனை தலைவனாக கண்டு ரசித்து ஆனந்தக் கண்ணீர் விட்டு வருகின்றனர்.

விஜய் மனைவி வரவில்லை: நடிகர் விஜய்க்கும் அவரது மனைவி சங்கீதா விஜய்க்கும் இடையே பிரச்சனை என ஏகப்பட்ட கிசுகிசுக்கள் உலாவி வரும் நிலையில், அதற்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைத்து தனது கணவர் விஜய்யின் முதல் அரசியல் மாநாட்டில் சங்கீதா விஜய் கலந்துக் கொள்வார் என எதிர்பார்த்த ரசிகர்களை ஏமாற்றும் வகையில், சங்கீதா விஜய் முதல் அரசியல் மாநாட்டிலும் பங்கேற்காத நிலையில், விஜய்யின் ஹேட்டர்கள் அதுகுறித்த ட்ரோல்களை பதிவிட்டு வருகின்றனர். சமீபத்தில் முரசொலி செல்வம் மறைவுக்கு கூட சங்கீதா விஜய் வந்திருந்த நிலையில், சங்கீதா விஜய் ஏன் மாநாட்டிற்கு வரவில்லை என கேட்டு வருகின்றனர்.

குழந்தைகளும் காணோம்: நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தமிழ் சினிமாவில் இயக்குநராக உருவாக உள்ள நிலையில், அப்பாவின் முதல் அரசியல் மாநாட்டில் அவரும் பங்கேற்கவில்லை. மகள் திவ்யா சாஷாவும் கலந்துக் கொள்ளவில்லை. ஏகப்பட்ட ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் விஜய்யை காண தங்களது குடும்பத்துடன் காலை முதலே மாநாட்டுக்கு வந்த நிலையில், விஜய்யின் குடும்பம் ஏன் வரவில்லை என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.

ஹேட்டர்களுக்கு பதிலடி: அது விஜய்யின் தனிப்பட்ட பிரச்சனை என்றும் மக்களுக்காக உழைக்கவே இனி தளபதி விஜய் முடிவு செய்து விட்டார் என்று விஜய் ரசிகர்கள் ஹேட்டர்களுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். விஜய்க்கு லட்சக் கணக்கான குடும்பங்களும் சொந்தங்களும் இனிமேல் எப்போதுமே இருக்கும் என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர். பல தடைகளையும் பல ட்ரோல்களையும் பல நெகட்டிவிட்டிகளையும் தாண்டி விஜய் தனது அரசியல் மாநாட்டை நடத்தி வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X