Bayilvan Ranganathan - த்ரிஷாவால்தான் விஜய் மனைவி வரவில்லை.. லியோ சக்சஸ் மீட் பற்றி பயில்வான் ரங்கநாதன்

சென்னை: Bayilvan Ranganathan (பயில்வான் ரங்கநாதன்) லியோ சக்சஸ் மீட்டில் த்ரிஷா வந்ததால்தான் விஜய் மனைவி சங்கீதா வரவில்லை என்று பயில்வான் ரங்கநாதன் தெரிவித்திருக்கிறார்.

விஜய் நடிப்பில் கடந்த 19ஆம் தேதி லியோ திரைப்படம் வெளியானது. விஜய் ரசிகர்களை தவிர்த்து மற்றவர்களை பெரிதாக படம் கவரவில்லை. இருந்தாலும் வசூல் ரீதியாக மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கும் லியோ திரைப்படம் 540 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.

Vijays wife Sangeetha did not come because of Trisha Says bayilvan Ranganathan

குட்டி கதை: ஜெயிலர் படத்தின் ஆடியோ லான்ச்சில் ரஜினிகாந்த் குட்டி ஸ்டோரி சொன்னது மாதிரி விஜய்யும் கதை சொன்னார். இதற்கிடையே இந்த சக்சஸ் மீட்டில் விஜய்யின் மனைவி வருவாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்தது. ஆனால் சங்கீதா கலந்துகொள்ளவில்லை. இந்நிலையில் சங்கீதா எதற்காக லியோ சக்சஸ் மீட்டில் கலந்துகொள்ளவில்லை என பயில்வான் ரங்கநாதன் பேசியிருக்கிறார்.

பயில்வான் பேட்டி: அவர் அளித்த பேட்டியில், “லியோ படத்தின் விழாவில் விஜய்யின் மனைவி சங்கீதா பங்கேற்கவில்லை. அதற்கு த்ரிஷாதான் காரணம். அதாவது த்ரிஷா வந்ததால் சங்கீதா வரவில்லை. அந்தப் படத்தில் த்ரிஷாவுக்கு விஜய் லிப் லாக் கொடுத்தது அவரது வீட்டில் பெரிய பிரச்னையாக வெடித்திருக்க அனைத்து வாய்ப்புகளும் இருக்கின்றன.

Vijays wife Sangeetha did not come because of Trisha Says bayilvan Ranganathan

பொய்: லியோ படத்துடைய சக்சஸ் மீட் என்பது மிகப்பெரிய பொய். அங்கு நடந்தது விஜய் மக்கள் இயக்கம் ரசிகர்களின் சந்திப்பு கூட்டம்தான். வழக்கமாக புஸ்ஸி ஆனந்த் மட்டும் மக்கள் இயக்கத்தில் பேசிக்கொண்டு இருக்கிறாரே என்பதற்காக ரசிகர்களிடம் விஜய் பேசுவதற்கு தயாரிப்பாளர் லலித் குமார் செலவில் ஏற்பாடு செய்யப்பட்ட விழாதான் இது.

ஷீல்டு இல்லை: லியோ படத்தின் வெற்றி விழா என்றால் படத்தில் நடித்த நடிகர்கள், நடிகையர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், விநியோகஸ்தர்கள், தியேட்டர்கள் ஓனர்களுக்கு ஷீல்டு கொடுத்திருக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவும் செய்யவில்லை. இதில் ரஜினிகாந்த், கமல் ஹாசன் கலந்துகொள்ளும் வாய்ப்புகள் இருந்தன. ஆனால் இது விஜய் மக்கள் இயக்க கூட்டமாக நடந்ததால் அவர்கள் பங்கேற்கவில்லை.

நினைத்ததை சாதித்தார்: விஜய்யை பொறுத்தவரை ரசிகர்களை சந்தித்து பேசுவதற்கான வாய்ப்பாக இதனை பார்த்தார். அவர் நினைத்ததை நிறைவேற்றிக்கொண்டார். இது லியோ படத்தின் வெற்றி விழாவே இல்லை. விஜய் ரசிகர் மன்ற மாநாடுதான்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X