விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு மனு.. தவெக அதிரடி அறிக்கை!
சென்னை: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருக்கும் நிலையில் தமிழக வெற்றிக்கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
நடிகர் விஜய், சங்கீதாவிற்கு1999 ஆம் ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன், இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு சஞ்சய் என்கிற மகனும், திவ்யா சாஷா என்கிற மகளும் உள்ளனர். மகன் சஞ்சய் 'சிக்மா' என்ற படத்தை இயக்கி வருகிறார். மகள் அமெரிக்காவில் உயர்கல்வி பயின்று வருகிறார்.

நடிகையுடன் உறவு: இந்நிலையில் இன்று சங்கீதா, விஜய்யிடம் இருந்து விவாகரத்து கோரி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் விஜய் இருந்தார். அந்த நடிகையுடனான உறவை முறித்துக்கொள்ளும் படி பலமுறை எடுத்து சொல்லியும் அவர், என்னை ஏமாற்றி தொடர்ந்து அந்த நடிகையுடன் உறவில் இருந்தார். இதனால், நான் மனதளவில் பாதிக்கப்பட்டேன். இதற்கு மேல் இந்த உறவை என்னால் தொடரமுடியாது. இந்த திருமணத்தை சட்டரீதியாக முறித்துவிடுமாறு மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை ஏப்ரல் 20ந் தேதி விசாரணைக்கு வர உள்ளது.
அதிரடி அறிக்கை: விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து மனு தாக்கல் செய்திருக்கும் நிலையில், தமிழக வெற்றிக்கழகம் அதிரடியான ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், கழக தோழர்களே, நம் கழக தலைவர் பற்றி வந்த செய்திகள் பற்றி விவாதிப்பது தேவையற்றது. அது அவர்களின் தனிப்பட்ட விருப்பம். அவர்களின் தனிப்பட்ட விருப்பங்களுக்கு மதிப்பளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். நமது நோக்கமும் செயலும் மக்களுக்கானது மக்களை பற்றி சிந்திப்போம். தேர்தல் எனும் பேரும் போர் நெருங்குகிறது மக்களுக்கான அரசியலில் கவனம் செலுத்துவோம்.


Click it and Unblock the Notifications