விஜய்யின் மகன் சஞ்சய் இயக்குனராக யார் காரணம் தெரியுமா? பிரபலம் சொன்ன சீக்ரெட்!

சென்னை: விஜய்யின் மகன் சஞ்சய் இயக்குநராக மாற முக்கிய காரணம் இவர் தான் என்று பிரபலம் ஒருவர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

விஜய் நடிப்பில் போக்கிரி படத்தில் வசந்த முல்லை பாடலில், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் விஜய்யின் மகன் சஞ்சய்.

Vijays wife Sangeetha is the reason why jason Sanjay is the director

இதையடுத்து 2009ஆம் ஆண்டு வெளியான வேட்டைக்காரன் படத்தில் நான் அடிச்சா தாங்க மாட்ட பாடலில் அப்பாவுடன் நடனமாடி கலக்கினார் சஞ்சய்.

விஜய், சங்கீதா: தளபதி என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் நடிகர் விஜய் மற்றும் சங்கீதா தம்பதிகளின் மகனான ஜேசன் சஞ்சய் ஹீரோவாக சினிமாவில் அறிமுகமாவார் என்று, தமிழ் சினிமா வட்டாரமே ஆவலுடன் எதிர்பார்த்த நிலையில், இவர் இயக்குநராக அறிமுகமாவது பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.

வசூலை அள்ளும் லியோ: ஆக்ஷன் ஹீரோவாக நடித்து வரும் விஜய், குழந்தைகளின் மனங்களில் இடம் பிடிக்கும் வகையிலும் மக்களை கவரும் வகையிலான கதாப்பாத்திரத்தை தேர்வு செய்து நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் மகத்தான வசூலை அள்ளி மாஸ் காட்டி வருகிறது. படம் வெளியான நான்கு நாட்களில் 400 கோடியை வசூலித்து, விஜய் வசூல் மன்னன் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்.

Vijays wife Sangeetha is the reason why jason Sanjay is the director

சூப்பர் குறும்படம்: இந்நிலையில், விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய் கனடாவில் திரைப்பட கல்லூரியில் படித்து வந்த நிலையில், அண்மையில் இவர் "Pull The Trigger" என்ற டைட்டில் கொண்ட குறும்படத்தை இயக்கி உள்ளார். இந்த குறும்படத்தில் உள்ள காட்சிகளை பார்க்கும்போது தரமாக உள்ளது என்றும் ஒரு கைதேர்ந்த இயக்குனரின் வடிவத்தில் உருவானது போல் இருக்கிறது என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்.

லைக்கா நிறுவனத்துடன்: மேலும், லைக்கா நிறுவனம் தயாரிப்பில் பிரம்மாண்ட படத்தினை இயக்க உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. லண்டனில் சங்கீதாவின் அப்பா தொழிலதிபராக உள்ள நிலையில், லண்டனில் உள்ள சுபாஸ்கரனை சந்தித்து நடத்திய பேச்சுவார்த்தையால் தான் ஜேசன் சஞ்சய் லைகா தயாரிப்பில் படம் இயக்கப் போவதாகவும் செய்திகள் வெளியாகின. அது மட்டுமில்லாமல் தாத்தா எஸ் ஏ சியின் ஆசையால் சஞ்சய் இயக்குநராவதாக கூறப்பட்டது.

Vijays wife Sangeetha is the reason why jason Sanjay is the director

காரணமே இவர் தான்: ஆனால்,இயக்குநராக மாறுவதற்கு இவர்கள் யாரும் காரணம் இல்லையாம். மகனை இயக்குனராக்க ஆசைப்பட்டதே விஜய்யின் மனைவி சங்கீதா தானாம். அவர் தான் தன் மகனை இயக்குநராக பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார். அதனால், பல கட்ட முயற்சிகளை எடுத்து சிபாரிசு செய்து லைக்கா நிறுவனத்திடம் பேசினார் என்று, மூத்த நடிகர் சித்ரா லட்சுமணன் தனது யூடியூப் சேனலில் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X