twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அநீதியின் கதவுகளை உடைத்தும்.. பேரறிவாளன் விடுதலை.. விஜய்சேதுபதி, மாரி செல்வராஜ் வலியுறுத்தல்!

    |

    சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட பேரறிவாளன் கைது செய்யப்பட்டு இன்றுடன் 30 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், #StandwithArputhamAmmal என்ற ஹாஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

    அற்புதம்மாள் பதிவை பார்த்த கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட பலரும் அவருக்கு ஆதரவாகவும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் உடனே விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், தற்போது நடிகர் விஜய்சேதுபதி மற்றும் இயக்குநர் மாரி செல்வராஜ் தங்கள் ஆதரவை தெரிவித்து உள்ளனர்.

    30 ஆண்டு கால தவறான சிறைவாசம் - பேரறிவாளனுக்கு உடனடி விடுதலை தருவதுதான் ஒரே நீதி!

    மாரி செல்வராஜ் ஆதங்கம்

    மாரி செல்வராஜ் ஆதங்கம்

    பா. ரஞ்சித் தயாரிப்பில் பரியேறும் பெருமாள் படத்தை இயக்கி இந்தியளவில் பலரையும் திரும்பி பார்க்க வைத்து, அடுத்ததாக தனுஷின் கர்ணன் படத்தை இயக்கி வரும் இயக்குநர் மாரி செல்வராஜ், தற்போது அற்புதம்மாளுக்கு ஆதரவாகவும் பேரறிவாளனை உடனே விடுதலை செய்ய இதுவே சரியான நேரம் என்றும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

    அநீதியின் கதவுகள்

    அநீதியின் கதவுகள்

    இயக்குநர் மாரி செல்வராஜ் தற்போது தனது டிவிட்டர் பக்கத்தில், "அநீதியின் கதவுகளை சட்டத்தின் வழியாக உடைத்து எறிந்தபின்னும் ஒரு தாய்க்கு முப்பது வருடங்களாக மறுக்கபடும் நீதிக்கு முற்றுபுள்ளி வையுங்கள்." என்ற கோரிக்கையை பேரறிவாளன் விடுதலையை முன்னிட்டு முன் வைத்துள்ளார். அவரது கருத்துக்கு ஆதரவு குவிந்து வருகிறது.

    மக்கள் செல்வன் ஆதரவு

    மக்கள் செல்வன் ஆதரவு

    முன்னதாக மக்கள் செல்வன் விஜய்சேதுபதி தனது டிவிட்டர் பக்கத்தில் இன்று டிரெண்டாகி வரும் #StandwithArputhamAmmal என்ற புகைப்படத்தை ஷேர் செய்து தனது ஆதரவை தெரிவித்துள்ளார். விஜய்சேதுபதியின் ஆதரவை தொடர்ந்து விஜய்சேதுபதி ரசிகர்கள் மற்றும் விஜய் ரசிகர்களும் அந்த ஹாஷ்டேக்கில் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

    வன்கொடுமை

    வன்கொடுமை

    கடந்த 2016ம் ஆண்டு தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியிலேயே நடிகர் விஜய்சேதுபதி பேரறிவாளன் சிறையில் அடைபட்டுக் கிடந்து 25 ஆண்டுகள் ஆகி விட்டது. அவர் நிரபராதி என்று அவரை கைது செய்த போலீஸ் அதிகாரியே கூறிய பின்னரும், அவருக்கு கிடைக்க வேண்டிய நீதி ஏன் தாமதமாகிறது என கேட்டுள்ளார். அந்த வீடியோவையும் தற்போது அவரது ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.

    English summary
    After Karthik Subbaraj, now Vijaysethupathi and Mari Selvaraj shows their supports in the issue of Perarivalan release.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X