கமல் எனக்கு என்ன பரிசு கொடுத்தார் தெரியுமா? மாமனிதன் பிரஸ் மீட்டில் விஜய்சேதுபதி பளிச் பேச்சு!
சென்னை: விக்ரம் படத்தின் வெற்றியை முன்னிட்டு அந்த படத்தின் நடிகரும் தயாரிப்பாளருமான கமல்ஹாசன் இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு லெக்சஸ் காரை பரிசாக அளித்தார்.
உதவி இயக்குநர்கள் 13 பேருக்கு இரு சக்கர வாகனங்களை பரிசாக வழங்கினார். நடிகர் சூர்யாவுக்கு ரோலெக்ஸ் வாட்ச் கொடுத்தார்.
இந்நிலையில், நடிகர் விஜய்சேதுபதி, பகத் ஃபாசில், நரேன், ஷிவானி நாராயணன், மைனா நந்தினி உள்ளிட்டவர்களுக்கு என்ன கொடுக்கப் போகிறார் என ஏகப்பட்ட கேள்விகளும் காமெடி மீம்களும் டிரெண்டாகின.

பகத் பாசிலுக்கு தலை
விக்ரம் படத்தில் விஜய்சேதுபதி பகத் ஃபாசிலின் மனைவியாக நடித்த காயத்ரியின் தலையை அறுத்து முண்டமாக காரில் விட்டுச் சென்றிருப்பார். பகத் ஃபாசிலுக்கு கமல்ஹாசன் அந்த தலையைத் தான் பரிசாக வழங்கப் போகிறார் என வெளியான மீமை ஷேர் செய்து காயத்ரியே லைக் போட்டு இருந்தார். விக்ரம் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர்களின் பகத் ஃபாசிலும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் பாதி முழுக்கவே அவர் தான் ஆளுமை செலுத்துவார்.

விஜய்சேதுபதிக்கு என்ன
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் பவானியாக நடித்து மிரட்டிய விஜய்சேதுபதி, விக்ரம் படத்தில் கமல்ஹாசன் உடன் நேருக்கு நேர் மல்லுக் கட்டும் படு மாஸான கிளைமேக்ஸ் சண்டைக் காட்சியில் பிரித்து மேய்ந்திருப்பார். இருவரும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல என்பதை நடிப்பால் காண்பித்து இருப்பார்கள். இந்நிலையில், சந்தனம் விஜய்சேதுபதிக்கு கமல் என்ன பரிசு வழங்கப் போகிறார் என்கிற கேள்வி எழுந்தது.

அடுத்த படத்திற்கு அட்வான்ஸா
சந்தனம் கதாபாத்திரம் முடிந்த நிலையில், அவருக்கு பரிசு தர தேவையில்லை என்றும் பல கோடி சம்பளத்தை வழங்கி உள்ளார் என்றும் கூறுகின்றனர். மேலும், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் அவரது உதவி இயக்குநர்கள், கிளைமேக்ஸ் காட்சியில் ஒரு ரூபாய் கூட வாங்காமல் நடித்துக் கொடுத்த சூர்யாவுக்கு ரோலெக்ஸ் வாட்ச் என கொடுத்ததற்கு உண்மையான காரணமே அடுத்த படத்திற்கான ஒரு அட்வான்ஸ் தான் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

விஜய்சேதுபதியிடம் கேள்வி
இந்நிலையில் இன்று நடைபெற்ற மாமனிதன் படத்தின் பிரஸ் மீட் நிகழ்ச்சியில் நடிகர் விஜய்சேதுபதியிடம் சிலர் அந்த கேள்வியையே முன் வைத்துள்ளனர். அதற்கு விஜய்சேதுபதி அளித்துள்ள செம ஸ்மார்ட்டான பதிலும் ரசிகர்கள் மத்தியில் காட்டுத் தீ போல பரவி வருகிறது. அனிருத் போலவே அசத்தலான பதிலை இவரும் கூறியுள்ளார்.

கமல் கொடுத்த பரிசு
கமல் என்ன கொடுத்தார் என கேள்வி எழுப்பிய நிலையில், நடிகர் விஜய்சேதுபதி அவருடன் நடிக்கும் வாய்ப்பை கொடுத்தார். இதெல்லாம் எனக்கு நடக்கும்னு சத்தியமா கனவுல கூட நினைக்கல. எனக்கு 43 வயசாகுது இந்த அனுபவத்தை வச்செல்லாம் இது நடக்குறதுல்ல, இங்கே கலை பல நூறு ஆண்டுகளாக இருக்கிறது. அதுவே இப்படியொரு மேஜிக் நடத்தும் போது, அதில் ஐக்கியமாகி அதனை ரசிக்க வேண்டும் என்று அந்த கேள்விக்கு விடை அளித்துள்ளார். அடுத்த வாரம் ஜூன் 24ம் தேதி மாமனிதன் திரைப்படம் ரிலீசாகிறது.


Click it and Unblock the Notifications











