எல்லாம் முடிஞ்சுப்போச்சு என 800 படத்தில் இருந்து விலகிய விஜய் சேதுபதி.. ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!
சென்னை: விஜய் சேதுபதி 800 படத்தில் இருந்து விலகியதை தொடர்ந்து #VijaySethupathi என்ற ஹேஷ்டேக் ட்ரென்ட்டாகி வருகிறது.
Recommended Video
இலங்கை கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்தது.
800 என பெயரிடப்பட்ட இப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த வாரம் வெளியானது.

எதிர்ப்பும் ஆதரவும்
முத்தையா முரளிதரன் ஈழத் தமிழர்களுக்கு எதிரானவர் என்பதால் அவரது படத்தில் விஜய் சேதுபதி நடிக்க வேண்டாம் என எதிர்ப்புகள் எழுந்தன. அதேநேரத்தில் விஜய் சேதுபதி ஒரு நடிகன் என்பதால் அவர் யாருடைய படத்தில் வேண்டுமானாலும் நடிக்கலாம் என ஆதரவு குரலும் எழுந்தது.

முத்தையா முரளிதரன் கோரிக்கை
இதனால் 800 படத்தில் விஜய் சேதுபதி நடிப்பாரா மாட்டாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்நிலையில் முத்தையா முரளிதரன், தன்னுடைய படத்தில் விஜய் சேதுபதி நடிக்க வேண்டாம் என கோரிக்கை விடுத்து அறிக்ககை வெளியிட்டிருந்தார்.

முதல்வருடன் சந்திப்பு
அதனை தனது டிவிட்டர் பக்கத்தில் டேக் செய்திருந்த நடிகர் விஜய் சேதுபதி நன்றி வணக்கம் என பதிவிட்டிருந்தார். அவரது இந்த பதிவு குழப்பத்தை ஏற்படுத்திய நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தாயார் மறைவு குறித்து விசாரிக்க அவரது வீட்டிற்கு சென்றார் விஜய்சேதுபதி.

எல்லாம் முடிந்துவிட்டது
அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த விஜய் சேதுபதி நன்றி வணக்கம் என்றாலே எல்லாம் முடிந்துவிட்டது என்றுதான் அர்த்தம். எல்லாம் முடிந்துவிட்டது இனிமேல் அதைப்பற்றி பேச வேண்டாம் என்றார்.

ஹேஷ்டேக்
இதனை தொடர்ந்து #VijaySethupathi என்ற ஹேஷ்டேக் டிவிட்டரில் ட்ரென்ட்டாகி வருகிறது. சமூக வலைதளங்களில் பலரும் விஜய் சேதுபதி கூறியதை குறிப்பிட்டு டிவிட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











