முத்தையா முரளிதரனாக விஜய்சேதுபதி.. தெறிக்கும் ’800’ பட மோஷன் போஸ்டர்.. வேற ஒரு கதை இருக்கு!

சென்னை: ஏகப்பட்ட எதிர்ப்புகளை மீறி முத்தையா முரளிதரன் பயோபிக்கில் நடித்து வருகிறார் விஜய்சேதுபதி.

'800' என்ற டைட்டிலில் உருவாகி வரும் இந்த படத்தின் அசத்தலான மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

#MuthiahMuralidaran என்ற ஹாஷ்டேக்கையும் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

முத்தையா முரளிதரன்

முத்தையா முரளிதரன்

இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து ஜாம்பவானாக விளங்கியவர் முத்தையா முரளிதரன். 1972ம் ஆண்டு, ஏப்ரல் 17ம் தேதி பிறந்த இவருக்கு இப்போ 48 வயதாகிறது. எம்.எஸ். தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்பட்டு வெற்றி பெற்ற நிலையில், ஏகப்பட்ட விளையாட்டு வீரர்களின் வாழ்க்கையும் திரைப்படமாக உருவாகி வருகிறது.

முத்தையா முரளிதரனாக விஜய்சேதுபதி

முத்தையா முரளிதரனாக விஜய்சேதுபதி

இயக்குநர் எம்.எஸ். ஸ்ரீபதி இயக்கத்தில் உருவாக உள்ள இந்த படத்தில் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடித்து வருகிறார். முதல் முறையாக பயோபிக் படம் ஒன்றில் விஜய்சேதுபதி நடிப்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு இப்பவே எதிர்பார்ப்புகளும் எதிர்ப்புகளும் அதிகரித்துள்ளன.

ஏகப்பட்ட எதிர்ப்பு

ஏகப்பட்ட எதிர்ப்பு

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், இலங்கை தமிழர்கள் என முத்தையா முரளிதரன் பயோபிக்கில் விஜய்சேதுபதி நடிக்கக் கூடாது என ஏகப்பட்ட எதிர்ப்புகள் கிளம்பின. சிங்கள அரசின் கைக்கூலியாக முத்தையா முரளிதரன் செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டுகள் தான் எதிர்ப்புகளுக்கு காரணம், விஜய்சேதுபதியின் ஃபேவரைட் இயக்குநர் சீனு ராமசாமியும் தனது கண்டனத்தை தெரிவித்திருந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

800 டைட்டில் ஏன்?

800 டைட்டில் ஏன்?

டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி மிகப்பெரிய சாதனையை செய்துள்ளார் இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன். அதனை போற்றும் விதமாக படத்திற்கு ‘800' என்ற டைட்டிலையே வைத்துள்ளனர். நம்பரில் டைட்டில் வைக்கப்பட்டால், அது அனைத்து மொழிகளுக்கும் யூனிக் டைட்டிலாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மோஷன் போஸ்டர்

எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும், ‘கனிமொழி' படத்தை இயக்கிய இயக்குநர் ஸ்ரீபதி இயக்கி வரும் இந்த படத்தில் நடிப்பதில் குறியாக இருக்கிறார் விஜய்சேதுபதி. தற்போது முத்தையா முரளிதரன் வாழ்க்கை பதிவுகளோடு விஜய்சேதுபதியின் முத்தையா முரளிதரன் லுக் இடம்பெற்றுள்ள அசத்தலான மோஷன் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது.

அச்சு அசல்

அச்சு அசல்

அச்சு அசல் முத்தையா முரளிதரனாகவே மாறியுள்ள விஜய்சேதுபதியின் இந்த மோஷன் போஸ்டர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை பார்த்த சினிமா ரசிகர்கள் ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளனர். திட்டமிட்டபடி இந்த படம் உருவாக்கப்பட்டு திரைக்கு வரும் என்றே பலரும் எதிர்பார்க்கின்றனர். தமிழ் மொழியில், கிரிக்கெட் வீரர் ஒருவரின் பயோபிக் படமாக்கப்படுவது இதுவே முதல் முறை.

வேற ஒரு கதை இருக்கு

வேற ஒரு கதை இருக்கு

மோஷன் போஸ்டரை பார்க்கும் போதே, இலங்கையில் நடந்த போர் குறித்த சம்பவங்கள் இருப்பதை இயக்குநர் அதிக அளவில் பதிவு செய்யப் போகிறார் என்பது உறுதியாகி உள்ளது. விஜய்சேதுபதி முன்னதாக பேட்டி ஒன்றில் பேசும் போதும், இந்த படத்தில் கிரிக்கெட்டை தாண்டி, அவருடைய வலி நிறைந்த வாழ்க்கை இருக்கு எனக் கூறியிருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X