ப்பா.. மக்கள் செல்வன் மனசிருக்கே.. கொரோனா நிவாரண நிதி.. ரூ. 25 லட்சம் கொடுத்த விஜய்சேதுபதி!
சென்னை: லேட்டா கொடுத்தாலும் லேட்டஸ்ட்டாக கொடுத்துள்ளார் நடிகர் விஜய்சேதுபதி.
கொரோனா நிவாரண நிதிக்காக ரூ. 25 லட்சத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து கொடுத்துள்ளார்.
கொரோனா பரவலை தடுக்க தொடர்ந்து போராடி வரும் தமிழ்நாடு அரசுக்கு இந்த உதவித் தொகை பெரும் உதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மக்கள் செல்வன்
துணை நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்போது கோலிவுட் முதல் பாலிவுட் வரை இவரது கால்ஷீட்டுக்காக பலரும் ஏங்கும் அளவுக்கு தனது நடிப்பால் மக்கள் செல்வனாக உயர்ந்துள்ளார் இந்த மாமனிதன் விஜய்சேதுபதி.

கொரோனா நிவாரணம்
நடிகர் சூர்யா முதல் சிவகார்த்திகேயன் வரை ஏகப்பட்ட சினிமா நட்சத்திரங்கள் ஒரு கோடி முதல் பத்து லட்சம் ரூபாய் வரை என தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினின் கொரோனா நிவாரணப் பணிக்காக நன்கொடை அளித்துள்ளனர். இந்நிலையில், நடிகர் விஜய்சேதுபதி தனது பங்கை தற்போது அளித்துள்ளார்.
Recommended Video

ரூ.25 லட்சம்
தல அஜித், சிவகார்த்திகேயனை தொடர்ந்து ரூ. 25 லட்சம் நன்கொடையை கொரோனா நிவாரண நிதிக்காக நடிகர் விஜய்சேதுபதி வழங்கி உள்ளார். கொரோனா பரவலை தடுக்கும் முயற்சியில் தீவிரமாக பணியாற்றி வரும் தமிழ்நாடு அரசுக்கு இந்த தொகை பெரிதும் உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹாஷ்டேக் டிரெண்டிங்
கொரோனா பரவல் இன்னமும் நம்மை விட்டு முழுமையாக அகலவில்லை. இந்நிலையில், விஜய்சேதுபதி கொரோனா தடுப்புப் பணிக்காக நன்கொடை அளித்ததை அறிந்த அவரது ரசிகர்கள் #VijaySethupathi ஹாஷ்டேக்கை ட்விட்டரில் டிரெண்ட் செய்து விஜய்சேதுபதியை பாராட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











