விஜய்சேதுபதியின் மாமனிதன் சென்சார் அப்டேட்... இளையராஜா மற்றும் யுவன் இசையில் எதிர்பார்ப்பு

சென்னை: நடிகர் விஜய் சேதுபதி இயக்குனர்களுக்கு மிகவும் பிடித்த ஃபேவரட் நடிகராக உள்ளார்.பல திரைப்படங்கள்,வித்யாசமான இயக்குனர்கள் என்று ஒவ்வொரு முறையும் புதிய முயற்சி செய்து வருகிறார் .

குறிப்பாக தன்னை ஹீரோவாக அறிமுகப்படுத்திய சீனு ராமசாமியுடன் இணைந்து அடுத்தடுத்த படங்களில் பணியாற்றி வருகிறார்.

தென்மேற்கு பருவக்காற்று, இடம் பொருள் ஏவல், தர்மதுரை ஆகிய படங்களை தொடர்ந்து சீனுராமசாமி விஜய்சேதுபதி கூட்டணியில் உருவாகியுள்ளது மாமனிதன்.

கதாநாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகம்

கதாநாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகம்

விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் தமிழில் மட்டுமல்லாமல் மற்ற மொழி ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழைத் தொடர்ந்து தெலுங்கு மற்றும் இந்திப் படங்களிலும் விஜய் சேதுபதி நடிக்க தொடங்கியுள்ளார். தென்மேற்கு பருவக்காற்று மூலம் கதாநாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமான விஜய் சேதுபதிக்கு ஹீரோ அந்தஸ்தை கொடுத்தவர் இயக்குனர் சீனு ராமசாமி. அதனாலேயே இயக்குனர் சீனு ராமசாமி மீது மிகப்பெரிய பற்று கொண்ட விஜய் சேதுபதி அவரது இயக்கத்தில் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்

மாமனிதன்

மாமனிதன்

சீனு ராமசாமி, விஜய் சேதுபதி கூட்டணி முதல் முறையாக இணைந்த தென்மேற்கு பருவக்காற்று தேசிய விருது பெற்ற நிலையில் அதைத் தொடர்ந்து இடம் பொருள் ஏவல் மற்றும் தர்மதுரை உள்ளிட்ட படங்கள் இவர்களது கூட்டணியில் உருவாகின. இந்த நிலையில் விஜய் சேதுபதி, சீனு ராமசாமி கூட்டணி நான்காவது முறையாக இணைந்துள்ள திரைப்படம் மாமனிதன் . முற்றிலும் கிராமத்து கதை களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி ஆட்டோ டிரைவர் ஆக நடித்துள்ளார். மிகவும் எளிமையான குடும்பத்தை பற்றி கூறும் குடும்ப படமாக உருவாகியுள்ள மாமனிதனில் நடிகை காயத்ரி கதாநாயகியாக நடித்துள்ளார். பேபி மானஷ்வி மகளாக நடித்துள்ளார். இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர்

நேரடியாக ஓடிடி தளத்தில்

நேரடியாக ஓடிடி தளத்தில்

இளையராஜாவின் ஒய் எஸ் ஆர் நிறுவனம் இப்படத்தை தயாரித்து இருக்க கடந்த ஆண்டே ரிலீஸுக்கு தயாராக இருந்தது. பின் பல்வேறு காரணங்களால் வெளியாகாமல் போனது. இதற்கிடையில் அந்த படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் தகவல்கள் வெளியானது.

யு சான்றிதழ் வழங்கியுள்ளது

யு சான்றிதழ் வழங்கியுள்ளது

மிக விரைவிலேயே திரையரங்குகளில் வெளியாக உள்ள மாமனிதன் சென்சார் தகவல் வெளியாகியுள்ளது. மாமனிதன் படத்தை சென்சார் செய்த சென்சார் குழு இப்படத்திற்கு யு சான்றிதழ் வழங்கியுள்ளது. குடும்பத்துடன் கண்டுகளிக்க கூடிய மிகச் சிறந்த குடும்பப் படமாக உருவாகியுள்ள மாமனிதன் சென்சார் தகவல் வெளியாகி உள்ளது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X