எதிர்ல வரது எமனா இருந்தாலும் பயப்படக் கூடாது.. பவானிக்கே எமன் யாரு.. வேற யாரு நம்ம தளபதி தான்!
சென்ன்னை: மாஸ்டர் படத்தின் 5வது புரமோ தற்போது வெளியாகி உள்ளது.
2021ம் ஆண்டு ஆரம்பமே திரையரங்குகளை அதிர விட பொங்கல் பரிசாக மாஸ்டர் படம் வெளியாகிறது.
50 சதவீதம் இருக்கைகளுடன் தான் மாஸ்டர் திரைப்படம் ரிலீசாக வேண்டும் என மத்தியரசு உத்தரவிட்ட நிலையில், கூடுதல் காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பவானியை மறக்கமாட்டாங்க
மாஸ்டர் படத்தின் 5வது புரமோ தற்போது வெளியாகி உள்ளது. கைதி படத்தில் அர்ஜுன் தாஸையே அப்படியொரு மாஸ் வில்லனாக காட்டியுள்ள லோகேஷ் கைகளில் விஜய்சேதுபதி எனும் நடிப்பு அரக்கன் கிடைத்தால் சும்மாவா விடுவார். பவானி மற்றும் ஜேடி கதாபாத்திரங்களை மக்கள் பல காலம் மறக்கமாட்டார்கள் எனக் கூறியுள்ளார்.

எதிர்ல வரது எமனா இருந்தாலும்
இந்த உலகத்துல யார பார்த்து வேணாலும் பயப்படலாம்.. ஆனால், சாவு நம்மள நெருங்கிடுச்சுன்னா எதிர்ல வரது எமனா இருந்தாலும் பயப்படக் கூடாது என தற்போது வெளியாகி உள்ள மாஸ்டர் 5வது புரமோவில் விஜய்சேதுபதி பேசும் மரண மாஸ் வசனம் வைரலாகி வருகிறது.

எமன் யாரு
ஊரையே நடுங்க வைக்கும் வில்லனாக இருக்கும் பவானியை, ஒரு கல்லூரி வாத்தியார் ஜேடி எப்படி நடுங்க வைக்கிறார் என்பதே மாஸ்டர் படத்தின் கதை என தெரிகிறது. ஜேடிக்கும் பவானிக்கும் எப்படி கிளாஷ் ஆகுது, மேலும், விஜய்க்கும் விஜய்சேதுபதிக்கும் நடக்கப் போகும் அந்த கிளைமேக்ஸ் சண்டையை காண ரசிகர்கள் ஆவலோடு ஜனவரி 13ம் தேதியை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

எதிர்பார்த்த வசூல் கிடைக்குமா?
மாஸ்டர் திரைப்படம் வேற லெவலில் வந்திருப்பதாகவும், கொரோனா பரவல் பிரச்சனை இல்லாமல் படம் ரிலீசாகி இருந்தால், தியேட்டர்களில் கூட்டம் அலைமோதும் என்றும், 100 சதவீத இருக்கைக்கான அனுமதியை தமிழக அரசு வாபஸ் வாங்கி உள்ள நிலையில், மாஸ்டர் படத்தின் எதிர்பார்த்த வசூல் குறையும் என்றே கருதப்படுகிறது. ஆனால், பான் இந்திய திரைப்படமாக படம் வெளியாவ்தால், நிச்சயம் பல நூறு கோடி வசூலை ஈட்டும் என்றும் கணிக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











