ராட்சசன் ஸ்டைலில் இருக்கு.. ஐஸ்வர்யா ராஜேஷின் திட்டம் இரண்டு டிரைலரை வெளியிட்ட விஜய்சேதுபதி!

சென்னை: ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் மிரட்டலாக உருவாகி உள்ள திட்டம் இரண்டு படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

நடிகர் விஜய்சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது இந்த டிரைலரை வெளியிட்டுள்ளார்.

இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படம் விரைவில் சோனி லைவ் ஒடிடி தளத்தில் ரிலீசாகிறது.

திட்டம் இரண்டு டிரைலர்

திட்டம் இரண்டு டிரைலர்

இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள கிரைம் த்ரில்லர் படமான திட்டம் இரண்டு படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. ராட்சசன் பட பாணியில் இந்த படத்தின் டிரைலர் இருப்பதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

விஜய்சேதுபதி வெளியீடு

விஜய்சேதுபதி வெளியீடு

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் ஆன் ஸ்க்ரீன் ஹீரோவும் நல்ல நண்பருமான விஜய்சேதுபதி இந்த படத்தின் டிரைலரை தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் படக்குழுவை வாழ்த்தி உள்ளார்.

கிரைம் த்ரில்லர்

கிரைம் த்ரில்லர்

ஐஸ்வர்யா ராஜேஷ், பாவல் நவகீதன், கோகுல் ஆனந்த், ஜீவா ரவி, சுபாஷ் செல்வம், அனன்யா ராம் பிரசாத் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள இந்த கிரைம் த்ரில்லர் படத்தை இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் எழுதி இயக்கி உள்ளார். காணாமல் போகும் குழந்தை பருவ தோழியை போலீஸ் அதிகாரியான ஆதிரா (ஐஸ்வர்யா ராஜேஷ்) கண்டுபிடிப்பாரா மாட்டாரா என்கிற கதைக் களத்தில் இந்த படம் உருவாகி இருக்கிறது.

ஒடிடி ரிலீஸ்

தியேட்டர்கள் திறப்புக்கு இன்னமும் அனுமதி கிடைக்காத நிலையில், சோனி லைவ் ஒடிடி தளத்தில் இம்மாதம் 30ம் தேதி ஐஸ்வர்யா ராஜேஷின் திட்டம் இரண்டு திரைப்படம் வெளியாகும் என டிரைலர் வெளியீட்டுடன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X