கடவுள் விஜய்சேதுபதிக்கே இப்படியொரு கவலையா.. அதுக்கு தடுப்பூசி கண்டுபிடிச்சா நல்லாதான் இருக்கும்!

சென்னை: கொரொனா வைரஸ் உலகம் முழுவதும் பல லட்ச மக்களின் உயிர்களை பலி வாங்கி வருகிறது. அதற்கு தடுப்பூசி கண்டு பிடிக்க உலகளவில் மருத்துவர்கள் போராடி வருகின்றனர்.

Recommended Video

எதிர் காலத்தை கனித்த உலகநாயகன் | Kamal Hassan, Vijay Sethupathi | Marudhanayagam

இந்நிலையில், கொரோனாவை விட கொடிய நோயான பசிக்கு ஒரு தடுப்பூசி கண்டுபுடிச்சா எவ்ளோ நல்லா இருக்கும் என நடிகர் விஜய்சேதுபதி பதிவிட்டுள்ள ட்வீட், தமிழக மக்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

நாடு முழுவதும் போடப்பட்டுள்ள லாக்டவுனால், பல கோடி மக்கள் வேலையிழக்கும் அபாயமும், உணவு இன்றி வாடும் நிலையும் ஏற்பட்டு இருக்கிறது.

பசிக்கு தடுப்பூசி

பசிக்கு தடுப்பூசி

மற்ற நடிகர்களை போல இல்லாமல், மக்களின் துயரங்களை அறிந்து, உடனுக்குடன் மக்களுடனே கலந்துரையாடி வருவதால் தான் விஜய்சேதுபதியை மக்கள் செல்வன் என அனைவரும் அழைக்கின்றனர். இந்நிலையில், தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில், "பசி என்றொரு நோய் இருக்கு... அதுக்கு ஒரு தடுப்பூசி கண்டுபிடிச்சா எவ்ளோ நல்லா இருக்கும்... ஓ மை கடவுளே!!!" என பதிவிட்டுள்ளார்.

கமலுடன் உரையாடல்

கமலுடன் உரையாடல்

சமீபத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் உடன் இன்ஸ்டாகிராமில் லைவ்வாக கலந்துரையாடிய நடிகர் விஜய்சேதுபதி, மிகவும் சுவாரஸ்யமான பல கேள்விகளை கமல்ஹாசனிடம் கேட்டு, பல ரகசியங்களை வெளிக் கொண்டு வந்தார். மனம் விட்டு இருவரும் பேசிக் கொண்டதை பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் நேரலையில் கண்டு ரசித்தனர். அந்த நிகழ்ச்சியிலும் பசியால் வாடும் ஏழைகள் குறித்து விஜய்சேதுபதி பேசியிருந்தார்.

வாய்ப்பே இல்லை

வாய்ப்பே இல்லை

இந்நிலையில், நடிகர் விஜய்சேதுபதி பதிவிட்ட இந்த ட்வீட் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பலரும், அப்படியொரு மருந்து கண்டுபிடித்தால் உண்மையிலேயே நன்றாகத் தான் இருக்கும் என்றும், அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்றும் வேற லெவல் கேள்வி தலைவா என்றும் பதிவிட்டு வருகின்றனர்.

கடவுளாக வாங்க

கடவுளாக வாங்க

ஓ மை கடவுளே என கடைசியில் நடிகர் விஜய்சேதுபதி பதிவிட்டு இருந்ததை பார்த்த இந்த நெட்டிசன், அந்த படத்தில் வருவதை போல, நீங்களே கடவுளாக வந்து பசிக்கான மருந்தை கொடுத்துடுங்க என்றும் கலாய்த்து வருகின்றனர். சரக்கு பிளாக்ல வாங்கி குடிச்சுட்டு பேசுறீங்களா என்றும் சிலர் குசும்பாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

அதிக விலை

அதிக விலை

பசி வராமல் தடுக்கும் தடுப்பூசி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டால், அது அரிசி விலையை விட அதிகமாக இருக்கும் நண்பா பரவாயில்லையா என ஒரு நெட்டிசன் விஜய்சேதுபதியின் கேள்விக்கு மறு கேள்வி கேட்டுள்ளார். ஆனால், இந்த லாக்டவுன் நேரத்தில் மனிதர்கள் பசியால் வாடுவதை மனம் நொந்து விஜய்சேதுபதி இப்படி பதிவிட்டு இருப்பதை பலரும் பாராட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X