விஜய்சேதுபதி ரசிகர்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்.. கடைசி விவசாயி டிரைலர் இன்று ரிலீஸ்!
சென்னை: சங்கத்தமிழன் படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள கடைசி விவசாயி படத்தின் டிரைலர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது.
காக்கா முட்டை, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை படங்களை இயக்கிய மணிகண்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள கடைசி விவசாயி படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியாகும் என்ற அறிவிப்பை தற்போது படக்குழு அறிவித்துள்ளது.
அதனை தொடர்ந்து கடைசி விவசாயி ஹாஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது.
இளையராஜா இசை
காக்காமுட்டை மணிகண்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள கடைசி விவசாயி படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டிரைலர்கள் இன்று வெளியாகவுள்ள நிலையில், விரைவில் கடைசி விவசாயி படத்தின் பாடல்களும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய்சேதுபதி தயாரிப்பு
மணிகண்டன் இயக்கத்தில் உருவாகி வரும் கடைசி விவசாயி படத்தை ட்ரைபல் ஆர்ட்ஸ் சமீர் பரத் ராமுடன் இணைந்து நடிகர் விஜய்சேதுபதியும் தயாரித்துள்ளார். ஆரஞ்சு மிட்டாய், மேற்கு தொடச்சி மலை போன்ற படங்களும் விஜய்சேதுபதி தயாரிப்பில் ஏற்கனவே வெளியாகியுள்ளன.

யோகி பாபு
ஆண்டவன் கட்டளை படத்தில் விஜய்சேதுபதியுடன் இணைந்து காமெடி நடிகர் யோகி பாபுவும் சிறப்பாக நடித்திருப்பார். இந்நிலையில், கடைசி விவசாயி படத்திலும் யோகி பாபு, விஜய்சேதுபதி கூட்டணி இணைந்துள்ளது.
வித்தியாசமான கெட்டப்
ஆண்டவன் கட்டளை படத்தில் ஸ்மார்ட் பாயாக நடித்திருந்த விஜய்சேதுபதி, கடைசி விவசாயி படத்தில் வித்தியாசமான கெட்டப்பில் மனநலம் பாதித்தவராக நடித்துள்ளார். அவருடைய புகைப்படங்கள் இணையத்தில் வெளியானபோது, என்ன விஜய்சேதுபதி இப்படி மாறிட்டாரே என பலரும் வியந்து பாராட்டினர். இந்நிலையில், படத்தின் டிரைலர் இன்று வெளியாகவுள்ளதால், விஜய்சேதுபதி எப்படி நடித்துள்ளார் என்பதை காண பலரும் ஆவலோடு காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











