என்னம்மா துடிக்குது கண்ணு.. விஜய்சேதுபதியின் மிரட்டல் நடிப்பில் வெளியானது துக்ளக் தர்பார் டிரைலர்!

சென்னை: மக்கள் செல்வன் விஜய்சேதுபதியின் துக்ளக் தர்பார் டிரைலர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

Recommended Video

விஜய் சேதுபதியுடன் இணைந்த சம்யுக்தா | Tughlaq Durbar

லலித் குமார் தயாரிப்பில், டெல்லி பிரசாத் தீனதயாள் இயக்கத்தில் விஜய்சேதுபதி, பார்த்திபன், சத்யராஜ், ராஷி கன்னா மற்றும் மஞ்சிமா மோகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் துக்ளக் தர்பார் படம் உருவாகி உள்ளது.

வரும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்த படம் சன் டிவி மற்றும் நெட்பிளிக்ஸில் வெளியாகிறது.

துக்ளக் தர்பார் டிரைலர்

துக்ளக் தர்பார் டிரைலர்

இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாள் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் அரசியல் கதைக் கருவை கொண்டு உருவாகி உள்ள படம் தான் துக்ளக் தர்பார். அந்த படத்தின் டிரைலர் தற்போது சன் டிவி யூடியூப் தளத்தில் வெளியாகி உள்ளது. நடிகர் விஜய்சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் டிரைலரை ரிலீஸ் செய்துள்ளார்.

வடசென்னை அரசியல்

வடசென்னை அரசியல்

"இங்க எதுவுமே மாறாது" என்கிற வசனம் மற்றும் ஹவுஸிங் போர்டு குடியிருப்புகளை காட்டி இதுவும் ஒரு வடசென்னையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அரசியல் திரைப்படம் என்பதை தெள்ளத் தெளிவாக உணர்த்துகிறது. ஏற்கனவே ஏகப்பட்ட அரசியல் படங்கள் வெளியான நிலையில், விஜய்சேதுபதியின் துக்ளக் தர்பார் அதில் இருந்து எப்படி வேறுபட்டு நிற்கப் போகிறது என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.

இரு ஹீரோயின்கள்

இரு ஹீரோயின்கள்

இந்த படத்தில் ராஷி கன்னா மற்றும் மஞ்சிமா மோகன் என இரு ஹீரோயின்கள் உள்ளனர். முன்னதாக காற்று வெளியிடை, சைக்கோ படங்களில் நடித்திருந்த அதிதி ராவ் இந்த படத்தில் நடித்திருந்த நிலையில், திடீரென அவர் விலகியதும் நடிகை ராஷி கன்னா இணைந்தது குறிப்பிடத்தக்கது.

விநாயகர் சதுர்த்தி ரிலீஸ்

விநாயகர் சதுர்த்தி ரிலீஸ்

நடிகர் விஜய்சேதுபதியின் இந்த துக்ளக் தர்பார் திரைப்படம் கடந்த ஆண்டு தியேட்டரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், கொரோனா பரவல் காரணமாக தியேட்டர் ரிலீஸ் தாமதமானது. வரும் செப்டம்பர் 10ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டமாக நெட்பிளிக்ஸ் ஒடிடி மற்றும் சன் டிவியில் இந்த படம் ஒரே நாளில் வெளியாகிறது.

4 படங்கள்

4 படங்கள்

ஒரே மாதத்தில் 4 படத்தை ரிலீஸ் செய்யும் தைரியம் எல்லாம் விஜய்சேதுபதிக்கு மட்டும் தான் இருக்கும் என்றே சொல்லலாம். செப்டம்பர் 9ம் தேதி திரையரங்குகளில் லாபம் ரிலீசாகிறது. அடுத்த நாளே துக்ளக் தர்பார் வெளியாகிறது. சோனி லைவ் ஒடிடி தளத்தில் கடைசி விவசாயி மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் அனபெல் சேதுபதி என மொத்தம் 4 படங்கள் வெளியாக உள்ளது.

மீண்டும் பார்த்திபன்

மீண்டும் பார்த்திபன்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்த நானும் ரவுடி தான் படத்தில் வில்லனாக நடித்து அசத்திய நடிகர் பார்த்திபன், துக்ளக் தர்பார் படத்திலும் நெகட்டிவ் ரோலில் நடித்து அசத்தி உள்ளார். டிரைலரில் அவர் வரும் காட்சிகள் எல்லாமே ரசிக்கும் படியாக உள்ளது.

சத்யராஜ் நக்கல்

அமைதிப்படை எனும் எபிக் அரசியல் படத்தில் நடித்து அசத்திய சத்யராஜும் இந்த படத்தில் இருக்கிறார். டிரைலரின் கடைசியில் உனக்கு இந்தி தெரியுமா? என கேட்க விஜய்சேதுபதி பேசும் வசனம் வேற லெவல். லோக்கல் பாலிடிக்ஸ் மட்டுமின்றி தேசிய அரசியலையும் படம் பேசப் போகிறதா என்கிற எதிர்பார்ப்பையும் இந்த டிரைலர் கூட்டியிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X