வீட்டுக்கே போக மாட்டியாண்ணா.. விடுதலை பட அப்டேட் கொடுத்த விஜய்சேதுபதி.. உருகும் ரசிகர்கள்!

சென்னை: வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய்சேதுபதி நடித்து வரும் விடுதலை படம் எப்போதான் ஷூட்டிங் முடியும் என எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு விஜய்சேதுபதி தற்போது மாஸ் அப்டேட் கொடுத்துள்ளார்.

கோலிவுட், டோலிவுட் மற்றும் பாலிவுட் என ஓய்வின்றி சுழன்று சுழன்று நடித்து வருகிறார் விஜய்சேதுபதி.

வெற்றி, தோல்விகளை எல்லாம் தாண்டி நல்ல நடிப்பை ஒவ்வொரு படத்திலும் கொடுத்து தன்னுடைய பெயரை நிலைநாட்டி வருகிறார்.

ஒண்ணும் ஓடல

ஒண்ணும் ஓடல

கடந்த ஆண்டு விஜய்சேதுபதி நடிப்பில் அடுத்தடுத்து ஓடிடி மற்றும் தியேட்டரில் வெளியான லாபம், துக்ளக் தர்பார், அனபெல் சேதுபதி என 3 படங்களில் ஒரு படம் கூட ஓடவில்லை. ஆனால், அங்கேயே துவண்டு விடாமல் அடுத்தடுத்து ரசிகர்களுக்கு புதிய படைப்புகளை கொடுக்க வேண்டும் என கடுமையாக உழைத்து வருகிறார் விஜய்சேதுபதி.

வெற்றிக் கூட்டணி

வெற்றிக் கூட்டணி

இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா கூட்டணியில் உருவான நானும் ரவுடிதான் விஜய்சேதுபதிக்கு மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. மீண்டும் அதே கூட்டணியில் கூடவே சமந்தாவும் இணைந்த காத்துவாக்குல ரெண்டு காதல் படம் சமீபத்தில் வெளியாகி விஜய்சேதுபதியின் தொடர் தோல்விக்கு எண்ட் கார்டு போட்டு ரசிகர்களை வெகுவாக என்டர்டெயின் செய்தது.

அடுத்து விக்ரம்

அடுத்து விக்ரம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்த விஜய்சேதுபதி மீண்டும் லோகேஷ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் மிரட்டல் நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். கமல்ஹாசன், பகத் ஃபாசில், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் விஜய்சேதுபதி இணைந்து நடித்து தனது மாஸை காட்டி இருக்கிறார்.

விடுதலை என்னாச்சு

விடுதலை என்னாச்சு

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி ஹீரோவாக நடித்து வரும் விடுதலை படத்தில் விஜய்சேதுபதி முக்கிய ரோலில் நடித்து வருகிறார். அந்த படத்தின் படப்பிடிப்புக்கு விஜய்சேதுபதி கால்ஷீட்டே கொடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார் என புகார்கள் கிளம்பிய நிலையில் தற்போது விடுதலை படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருவதாக பிரத்யேக புகைப்படங்களை வெளியிட்டு விஜய்சேதுபதி போட்டுள்ள ட்வீட் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.

சூப்பர் சூரி

சூப்பர் சூரி

காக்கிச் சட்டையில் செம கெத்தாக சூரி ஒரு பக்கம் அசால்ட்டு காட்டுகிறார். மறுபக்கம் திருடனாக விஜய்சேதுபதி கெத்துக்காட்டுகிறார். அசுரன் படத்திற்கு பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் விடுதலை திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்ததாக வாடிவாசல் படத்தை ஆரம்பிக்கவும் வெற்றிமாறன் ரெடியாகி வருகிறார்.

வீட்டுக்கு போகமாட்டியாண்ணா

வீட்டுக்கு போகமாட்டியாண்ணா

விஜய்சேதுபதி ரவுண்டு கட்டி ஏகப்பட்ட படங்களில் நடித்து வரும் நிலையில், வீட்டுக்கே போகமாட்டியாண்ணா என அவரது ரசிகர்கள் அவருக்கு நடிப்பின் மீது இருக்கும் ஆர்வத்தை பாராட்டி கமெண்ட் போட்டிருப்பது அனைவரது கவனத்தையும் கவர்ந்து லைக்குகளை அள்ளி வருகின்றன. விடுதலை திரைப்படம் சரியான சம்பவம் பண்ணும் என்றும் ஏகப்பட்ட விஜய்சேதுபதி ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X