Just In
- 52 min ago
ஆரியின் வாக்குகள் குறைத்து காண்பிக்கப்பட உள்ளதா? வாய்ப்புகள் உண்டு.. பிரபல இசையமைப்பாளர் பரபர!
- 1 hr ago
நெக்ஸ்ட் சிஎம்.. நெக்ஸ்ட் கர்ணன்.. ரம்யாவே பரவாயில்லை போல.. அவங்க அக்கா வேற லெவல்.. முத்திப்போச்சு !
- 1 hr ago
மக்கள் தீர்ப்பு.. வின்னர் யார்.. பேழைக்குள் வரும் ரிசல்ட் கார்டு.. கண்ணடித்து கதறவிடும் கமல்!
- 2 hrs ago
யோகேஸ்வரன் நினைவாக.. ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு தங்கக் காசு பரிசு.. நடிகர் ராகவா லாரன்ஸ் அறிவிப்பு!
Don't Miss!
- News
என்னதான் குட்டிக்கரணம் போட்டாலும்... எதிர்க்கட்சியாக கூட அதிமுக வரமுடியாது -மு.க.ஸ்டாலின் பேச்சு
- Sports
வலிமையான அணிகள் மோதும் 62வது போட்டி... பரபர அனுபவத்திற்கு தயாராகும் ரசிகர்கள்!
- Finance
இனி பணம் உங்களைத் தேடி வரும்.. வீடு தேடி வரும் வங்கி சேவை.. சூப்பர் சேவை தான்..!
- Automobiles
ஒருபக்கம் விலை அதிகரிப்பு, மறுபக்கம் சலுகை!! மோட்டார்சைக்கிள் விற்பனையில் கவாஸாகியின் அடுத்தடுத்த அறிவிப்புகள்
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Lifestyle
வார ராசிபலன் 17.01.2021 முதல் 23.01.2021 வரை – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
போயி வேற வேலை இருந்தா பாருங்கடா.. விஜய் ஹேட்டர்களுக்கு.. இப்படியொரு பதிலடி கொடுத்த விஜய்சேதுபதி!
சென்னை: நடிகர் விஜய் வீட்டில் நடந்த ஐடி ரெய்டுக்கான காரணம் இதுதான் என வதந்தி செய்தி ஒன்றை பரப்பி வரும் ஹேட்டர்களுக்கு, நடிகர் விஜய்சேதுபதி தனது ஸ்டைலில் பதிலடி கொடுத்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாஸ்டர் படத்தில் விஜயுடன் நடித்து வருகிறார் விஜய்சேதுபதி.
நடிகர்களை மதம் மாற்றம் பண்ணுகிறார் விஜய் என்பதால் தான் அவர் வீட்டில் ரெய்டு நடந்தது என தவறான தகவலை பரப்பி வரும் ஹேட்டர்களுக்கு எதிராக நடிகர் விஜய்சேதுபதி ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
வருமான வரித்துறை சம்மன்.. அர்ச்சனா கல்பாத்தி நேரில் ஆஜர்.. விஜய் & அன்புச்செழியன் ஆடிட்டர்கள் ஆஜர்!
|
வேற வேலை இருந்தா பாருங்கடா
விஜய்சேதுபதி, ஆர்யா, ரமேஷ் கண்ணா, ஆர்த்தி என நடிகர்கள் பலரையும் நடிகர் விஜய் மதமாற்றம் செய்வதாக ஒரு மோசமான பொய் தகவல் ஒன்றை சமூக வலைதளத்தில் விஜய்யின் ஹேட்டர்கள் பரப்பி வருகின்றனர். தற்போது, அதன் ஸ்க்ரீன் ஷாட்டை பதிவிட்டு, "போயி வேற வேல இருந்தா பாருங்கடா" என பதிலடி கொடுத்துள்ளார்.
|
தளபதி ரசிகர்கள்
நடிகர் விஜய்சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட அந்த பதிலடி ட்வீட்டை பார்த்த தளபதி ரசிகர்கள், விஜய்சேதுபதியை கொண்டாடி வருகின்றனர். இப்படி ஒரு போஸ்ட்ட எதிர்பார்க்கலை என்றும், அப்படி போடுங்க பாஸ் என்றும் செம்ம செருப்படி என்றும் ரசிகர்கள் கமெண்ட்டுகளை தெறிக்க விட்டு வருகின்றனர்.
|
இதுக்குத்தான் உங்களை
பொய்யான தகவலை பரப்பி வரும் ஹேட்டர்களுக்கு, சரியான பதிலடி கொடுத்தீங்க பார்த்தீங்களா, இதுக்குத்தான் உங்களை புடிச்சிருக்கு அண்ணா என விஜய் மற்றும் விஜய்சேதுபதி ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். மாஸ்டர் படம் குறித்த ட்வீட்களை இதுவரை போடாமல் இருந்த நடிகர் விஜய்சேதுபதி, இப்படி ஒரு கமெண்ட் போட்டு இருப்பது வைரலாகி வருகிறது.

ஒரு குட்டி கதை
மாஸ்டர் படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ள நிலையில், வரும் பிப்ரவரி 14ம் தேதி அனிருத் இசையில் "ஒரு குட்டி கதை" என்ற ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாக காத்திருக்கிறது. அடுத்த மாதம் 10ம் தேதி மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில், நடிகர் விஜய் என்ன குட்டி கதை சொல்லப் போகிறார் என்பதை கேட்கவும் ரசிகர்கள் வெறித்தனமாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.
|
மெண்டல் ஹாஸ்பிட்டல்
அவிங்க வேலையே அதான் பாஸ். நீங்க போய் மெண்டல் ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆகுங்கடானு சொல்லியிருக்கனும் என ஜாய் பிரின்ஸ் எனும் இந்த தளபதி ரசிகர் கமெண்ட் செய்துள்ளார். மேலும், தளபதி ரசிகர்கள் தரமான சம்பவம்னா அது இது தான்னா என்றும், சூப்பரா சொன்னீங்க அண்னா எனவும் கமெண்ட்டுகளை தெறிக்க விட்டு வருகின்றனர்.
|
வெறித்தனம்
தளபதி விஜய்க்கு எதிரான போலி செய்திகளை பரப்பும் நபர்களுக்கு நடிகர் விஜய்சேதுபதி சொன்ன, "போயி வேற வேலை இருந்தா பாருங்கடா" என்ற ட்வீட் செம்ம செருப்படியாக இருந்தது என்றும், இதுதான் வெறித்தனம் என்றும் விஜய் மற்றும் விஜய்சேதுபதி ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
|
எங்க இருந்துடா
டேய்.. நீங்க எல்லாம் எங்க இருந்துடா வறீங்க என காதலும் கடந்து போகும் படத்தில் நடிகர் விஜய்சேதுபதி கூறும் வீடியோ க்ளிப்பை போட்டு இந்த ரசிகர் கமெண்ட் செய்துள்ளார். இப்படி ஒரு படு மோசமான வதந்தியை பரப்பும் போஸ்டரை பார்த்து நடிகர் விஜய்சேதுபதியின் தற்போதைய ரியாக்ஷன் இப்படித் தான் இருந்திருக்கும் என தெரிவித்துள்ளார்.
|
நன்றிகள்
தளபதி விஜய் அண்ணா மீது மதத்தினை கொண்டு தொடுக்கப்படும் அவமரியாதைகளுக்கு அதிரடியாக பதிலடி கொடுத்த அண்ணன் விஜய்சேதுபதிக்கு வட சென்னை மாவட்ட இளைஞரணி மக்கள் இயக்கம் சார்பில் நன்றிகள் என ராயபுரம் வினோத் கமெண்ட் செய்துள்ளார். மேலும், விஜய் ரசிகர்கள் பலரும் விஜய்சேதுபதியின் ட்வீட்டுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.