Thalaivan Thalaivi Collection: தலைவன் தலைவி படத்தின் மூன்று நாள் வசூல்.. தாறுமாறான கலெக்ஷன்!

சென்னை: மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடிப்பில் வெளியான தலைவன் தலைவி படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். படத்தை பார்த்த பலரும் இப்படி ஒரு படத்தை பார்த்து, வாய் விட்டு சிரிந்து ரொம்ப நாள் ஆகிவிட்டது என கூறிவரும் நிலையில், தலைவன் தலைவி படத்தின் மூன்றாம் நாள் எவ்வளவு என்பதை பார்க்கலாம்.

மதுரையை சுற்றி தலைவன் தலைவி படத்தின் கதை நகர்கிறது. குல தெய்வம் கருப்பண்ண சாமி கோயிலில் நித்யா மேனன் தனது குழந்தைக்கு முடி எடுப்பதற்காக அவருடைய குடும்பத்தினருடன் வருகிறார். அப்பாவான விஜய் சேதுபதியை அழைக்காமல் எப்படி இதை செய்யலாம் என்றும் என் மகளை என்னோட அனுப்புங்க என குழந்தைக்கு பாதி மொட்டை அடித்த நிலையில், ரகளை செய்கிறார் விஜய் சேதுபதி. அதன் பின்பு தான் கணவன் மனைவியான விஜய்சேதுபதியும், நித்யா மேனனும் எப்படி பிரிகின்றனர் என்பதை நோக்கி கதை நகர்கிறது.

Thalaivan Thalaivii Vijaysethupathi box office
Photo Credit:

தலைவன் தலைவி கதை: விஜய்சேதுபதி மதுரையில் பரோட்டா கடை நடத்தி வருகிறார். இவருக்கும் பக்கத்து ஊரைச் சேர்ந்த நித்யா மேனனுக்கும் பெரியோர்களால் பார்த்து நிச்சயம் செய்யப்படுகிறது. நிச்சயத்திற்கு பின், இருவரும் காதலிக்கத் தொடங்குகின்றனர். பின், விஜய்சேதுபதியின் குடும்ப பின்னணி தெரிந்து கொண்ட, நித்யா மேனனின் குடும்பம், இந்த சம்மந்தம் நமக்கு ஒத்து வராது என முடிவு செய்து திருமணம் வேண்டாம் என முடிவு செய்கின்றனர். அதே போல, விஜய்சேதுபதி வீட்டிலும், நித்யா மேனனை திருமணம் செய்து கொண்டால், எதிர்காலத்தில் மருமகளால் குடும்பத்தில் பிரச்சனை ஏற்படும், மகனை பிரிந்துவிடுவாள் என்று ஜோசியக்காரர் சொல்வதை கேட்டு இந்த திருமணத்தை நிறுத்த நினைக்கிறது ஹீரோவின் குடும்பம். இரு வீட்டாரின் எதிர்ப்பையும் மீறி, விஜய்சேதுபதி, நித்யா மேனனை வீட்டுக்கு அழைத்து வந்து திருமணம் செய்து கொள்கிறார். கொஞ்ச நாள் வாழ்க்கை நன்றாக செல்ல, பின் குடும்பத்தில் வரும் சின்ன சின்ன சண்டையால், விஜய் சேதுபதி, நித்யா மேனன் இருவரும் பிரிந்து விடுகின்றனர். பின், இருவரும் சேர்ந்தார்களா? இல்லையா? என்பது தான் 'தலைவன் தலைவி' படத்தின் கதை.

மூன்றாம் நாள் வசூல்: தியேட்டரில் வெள்ளிகிழமைவெளியான இந்த படத்தில்,யோகி பாபு, தீபா, செம்பன் வினோத், ரோஷினி ஹரிப்ரியன், சரவணன், மைனா நந்தினி, காளி வெங்கட், ஆர்.கே. சுரேஷ், வினோத் சாகர், அருள்தாஸ், ஜானகி சுரேஷ், சென்றாயன் ஆகியோர் நடித்துள்ளனர். கணவன் மனைவி உறவை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி அட்டகாசமாக நடித்துள்ளார். அவரையே ஓவர் டேக் செய்யும் அளவிற்கு நித்யா மேனின் நடிப்பு சூப்பர் என படம் பார்த்தவர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். படம் வெளியான முதல் நாளே 4.50 கோடி வசூலித்து, சனிக்கிழமை 6.80 கோடியை வசூல் செய்து இரண்டே நாட்களில் கிட்டத்தட்ட 10 கோடியை தாண்டிய நிலையில், விடுமுறை தினமான நேற்று படத்தின் வசூல்,8.25 கோடியாக மொத்தத்தில் படம் வெளியான மூன்றே நாளில் படம் ரூ.20 கோடியை வசூலித்துள்ளது. தலைவன் தலைவி படத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு இருப்பதால் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X