கோலிவுட்டின் வெற்றி முகம் விஜய் தான்.. உலகளவில் டிரெண்டான #VijayTheFaceOfKollywood
சென்னை: மே 1ம் தேதி தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு, நடிகர் விஜய் ரசிகர்கள், கோலிவுட்டின் வெற்றி முகம் விஜய் தான் #VijayTheFaceOfKollywood என்ற ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.
கொரோனா பாதிப்பு பல துறைகளை பாதித்து இருப்பது போல சினிமா துறையையும் மிக மோசமாகவே பாதித்து இருக்கிறது.
மாஸ்டர் திரைப்படம் இந்த லாக் டவுன் முடிந்த பிறகு தியேட்டர்களில் வந்தால் தான் கோலிவுட் சினிமா மீளும் என பல தியேட்டர் ஓனர்கள் கருத்து கூறியுள்ளனர்.

சினிமா தொழிலாளர்கள்
சினிமாக்காரனுக்கு என்னப்பா பிரச்சனை என பலரும் நினைக்கலாம், சினிமா என்பது உச்ச நட்சத்திரங்கள் மட்டுமே இருக்குமே ஒரு துறை அல்ல, அது லைட் மேன், டீ பாய், கிரேன் ஆப்பரேட்டர், மேக்கப் மேன், ஹேர் ஸ்டைலிஸ்ட், துணை நடிகர்கள் என லட்சக் கணக்கான உழைப்பாளிகள் உழைக்கும் ஒரு குட்டி உலகமாகும்.

இக்னோர் நெகட்டிவிட்டி
தல அஜித்தின் பிறந்தநாளான மே 1ம் தேதி நடிகர் அஜித்தை இழிவுப்படுத்தும் வகையில், எந்தவொரு ஹாஷ்டேக்கையும் விஜய் ரசிகர்கள் இந்த முறை போடாமல் கண்ணியம் காத்து வருகின்றனர். அதற்கு பதிலாக, தளபதி விஜய்யின் பாசிட்டிவ் ஆன பக்கங்களை கொண்டு இந்த நிரம்பி இருக்கும் இந்த ஹாஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

உலகளவில் டிரெண்டிங்
மே தினத்தை முன்னிட்டு நடிகர் விஜய்யின் #VijayTheFaceOfKollywood என்ற ஹாஷ்டேக்கை விஜய் ரசிகர்கள் உலகளவில் டிரெண்ட் செய்து வருகின்றனர். இதுவரை 2 மில்லியன் ட்வீட்டுகளுக்கு மேல் பதிவிட்டு விஜய் ரசிகர்கள் ட்விட்டரை தெறிக்கவிட்டு வருகின்றனர். லாக்டவுன் காரணத்தால் ரசிகர்கள் வீட்டில் இருப்பதால், அடிக்கடி இதுபோன்ற டிரெண்டிங் சாத்தியமாகிறது.

வசூல் மன்னன்
சமீபத்தில் அமேசான் பிரைம் நேரடியாக மாஸ்டர் திரைப்படத்தை OTT தளத்தில் வெளியிட பேச்சுவார்த்தைகள் நடத்தியதாகவும், சுமார் 140 கோடி வரை தர முன் வந்ததாகவும் செய்திகள் வந்தன. ஆனால், நடிகர் விஜய் தியேட்டர் ஓனர்களையும், ரசிகர்களின் கொண்டாட்டங்களையும் மனதில் வைத்துக் கொண்டு, நேரடி ரிலீசுக்கு சம்மதிக்கவில்லை என்ற தகவலும் வெளியானது குறிப்பிடத்தக்கது.

வேற லெவல் வெறித்தனம்
வரும் ஜூன் 22ம் தேதி நடிகர் விஜய்யின் பிறந்தநாள் வருகிறது. அன்றைய தினத்தை இதை விட வேற லெவலில் கொண்டாட விஜய் ரசிகர்கள் வெறித்தனமாக வெயிட்டிங் செய்து வருகின்றனர். அதற்குள் கொரோனா பாதிப்பு குறைந்து தியேட்டர்கள் திறக்கப்பட்டால், மாஸ்டரும் திரையரங்கில் மாஸாக வெளிவரும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.


Click it and Unblock the Notifications











