விஜய் த்ரிஷா பஞ்சாயத்து ஒரு பக்கம்.. அஜித் ரசிகர்கள் செலிபிரேஷனைப் பாருங்க

சென்னை: நடிகர் விஜய் - நடிகை த்ரிஷா இணைந்து தயாரிப்பாளர் கல்பாத்தி சுரேஷ் இல்லத் திருமண விழாவில் ஜோடியாக கலந்து கொண்டனர். விஜய் மனைவி சங்கீதா தனது கணவர் விஜய் நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருக்கிறார் என்று குறிப்பிட்டு, விவாகரத்து கோரி உள்ளார். இப்படி இருக்கையில் நடிகர் விஜய் த்ரிஷாவுடன் இணைந்து திருமண விழாவில் பங்கேற்றது பெரும் பேசு பொருளாக மாறி உள்ளது.

பிரபலங்கள் தொடங்கி நெட்டிசன்கள், விஜய் ரசிகர்கள் என பலரும் விஜய்யை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். இன்னும் சொல்லப்போனால் விஜய்யை நம்பி இனிமேல் அரசியலில் ஈடுபட்டால், அரசியலில் எதிர்காலம் நமக்கு இருக்காது. விஜய் தனது குடும்பத்தை பற்றியே நினைக்கவில்லை, இவர் எப்படி நாட்டை பற்றியும் மக்களைப் பற்றியும் கவலைப் படுவார் என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். விஜய் ரசிகர்களே விஜய்யை போட்டு கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், அஜித் ரசிகர்கள் ஒருபுறம் செம்மையாக செலிபிரேஷன் செய்து வருகிறார்கள்.

Vijay Trisha Krishnan Wedding Event Appearance Sparks Controversy Ajith Kumar Fans Celebrate Videos with Shalini Ajith Kumar

அஜித் - ஷாலினி: அதாவது அஜித் ரசிகர்கள், அஜித் மற்றும் ஷாலினி பொது வெளியில் எந்த அளவுக்கு அன்பாகவும் ஒருவர் மீது ஒருவர் அக்கறையாவும் இருந்தார்கள் என்பது தொடர்பான வீடியோக்களையும், அஜித் ஷாலினிக்கு முத்தம் கொடுக்கும் வீடியோ, ஷாலினி கையைப் பிடித்துக் கொண்டு சுற்றுவது, ஷாலினிக்கு நெற்றியில் பொட்டு வைத்துவிடுவது போன்ற வீடியோக்களையும், அஜித் கார் ரேஸில் கலந்து கொள்ளச் சென்றபோது அஜித்தை கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்து வாழ்த்தும் ஷாலினியின் வீடியோ என எல்லாவற்றையும் இணைத்த வீடியோவைப் பகிர்ந்து வருகிறார்கள்.

ரசிகர்கள் செலிபிரேஷன்: திரையில் போட்டியாளர்களாக இருந்த அஜித் மற்றும் விஜய், அவரது ரசிகர்களுக்கு இடையிலான சண்டை குறித்து சொல்லவே வேண்டாம். அப்படி இருக்கையில் விஜய் , த்ரிஷா இணைந்து திருமண விழாவிற்கு ஒன்றாக சென்றது பெரும் பேசு பொருளாக மாறி உள்ள நிலையில் அஜித் ரசிகர்கள் அஜித் - ஷாலினி வீடியோவைப் பகிர்ந்து செலிபிரேட் செய்து வருகிறார்கள்.

Vijay Trisha Krishnan Wedding Event Appearance Sparks Controversy Ajith Kumar Fans Celebrate Videos with Shalini Ajith Kumar

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X