ஜூலை 6 ஆம் தேதி முதல் 10 நாள்.. ஆன்லைனில் அதிரடியாக நடிப்புப் பயிற்சி அளிக்கிறார் பிரபல நடிகை!
சென்னை: ஆன்லைனில் நடிப்புப் பயிற்சி அளிக்க இருக்கிறார் பிரபல நடிகை விஜி சந்திரசேகர்.
கொரோனா லாக்டவுன் மொத்தமாக மாற்றிப் போட்டிருக்கிறது உலகை. இந்தியாவில் இதன் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
படப்பிடிப்புகள், ரிலீஸ்கள் ஏதும் இல்லை என்பதால் சினிமா தொழிலாளர்கள் கடும் பொருளாதாரச் சிக்கலில் உள்ளனர்.

நடிகை மஞ்சு வாரியர்
நடிகர், நடிகைகளும் தங்கள் வீட்டை விட்டு வெளியேறாமல் இருக்கின்றனர். சில நடிகர், நடிகைகள் ஆன்லைனில் சில விஷயங்களை கற்று வருகின்றனர். நடிகை சமந்தா, ஹாலிவுட் நடிகை ஒருவரிடம் ஆன்லைனில் நடிப்பு பயிற்சிப் பெற்றார். நடிகை மஞ்சு வாரியர் வீணை வாசிக்கக் கற்றுக்கொண்டார். நடிகை நித்தி அகர்வால், ராஷி கண்ணா போன்றோர் தமிழ் கற்றனர்.

விஜி சந்திரசேகர்
இந்நிலையில், நடிகை விஜி சந்திரசேகர், ஆன்லைனில் நடிப்பு பயிற்சி அளிக்க இருக்கிறார். இவர் தில்லு முல்லு படத்தில் ரஜினிகாந்தின் தங்கையாக நடித்து சினிமாவில் அறிமுகமானவர். பிரபல நடிகை சரிதாவின் தங்கையான இவர், பாரதிராஜாவின் கிழக்கு சீமையிலே, கே.பாலசந்தரின் பார்த்தாலே பரவசம், சுஹாசினி இயக்கிய இந்திரா உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.
மதயானைக் கூட்டம்
விக்ரம் சுகுமாரன் இயக்கிய மதயானைக் கூட்டம் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்து மிரட்டியிருந்தார். லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கிய ஆரோகணம், நெருங்கிவா முத்தமிடாதே, பாண்டிராஜ் இயக்கிய கடைகுட்டி சிங்கம் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். மலையாளம், தெலுங்கு, கன்னடப் படங்களிலும் நடித்துள்ளார். சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார்.

பயிற்சி வகுப்புகள்
இவரது நடிப்புப் பயிற்சி வகுப்புகள், ஜூம் வீடியோவில் நடக்க இருக்கிறது. ஜூலை 6 ஆம் தேதியில் இருந்து 16 ஆம் தேதி வரை, மாலை 3 மணி டு 5 மணி வரை இந்தப் பயிற்சி வகுப்பு நடக்கும். இதில் பயிற்சி பெற விரும்புகிறவர்கள், [email protected] என்ற மெயில் ஐடியில் தங்களைப் பற்றிய முழு விவரங்களுடன் முன் பதிவு செய்ய வேண்டும் என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











