»   »  நடிகை விஜி தற்கொலை வழக்கில் டைரக்டர் விடுதலை நடிகை விஜி தற்கொலை வழக்கில் டைரக்டர் ரமேஷ், அவரது மனைவி மற்றும் அவரது நண்பர் சிபி ஆகியோர் விடுதலைசெய்யப்பட்டனர்.கங்கை அமரனின் கோழி கூவுது என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை விஜி. கதாநாயகியாக சுமார் 30படங்களில் இவர் நடித்துள்ளார். திடீரென இவருக்கு கதாநாயகி வாய்ப்பு மங்கியது.இதனால் சிறிது காலம் படவுலகை விட்டு ஒதுங்கியிருந்த இவர், மீண்டும் சரத்குமாரின் சூரியன் படத்தில் பிரபு தேவாவுடன்ஒத்தப் பாட்டுக்கு ஆடினார். இதன் பிறகு ரஜினியின் உழைப்பாளி, விஜய்யின் பூவே உனக்காக ஆகிய படங்களிலும் ஒரேயொருபாடலுக்கு மட்டும் ஆடிவிட்டுப் போனார்.பின்னர் திடீரென இவர் நோய்வாய்ப்பட்டார். அறுவை சிகிச்சையில் ஏற்பட்ட தவறு மூலம் விஜியின் ஒரு கால் செயல் இழந்தது.தீவிர சிகிச்சைக்குப் பிறகு குணமானார்.இதன் பிறகு டிவி தொடர்களில் நடித்து வந்த விஜி, டைரக்டர் ரமேஷ் என்பவரை காதலித்தார். ரமேஷுக்கு சுமதி என்றமனைவியும், குழந்தைகளும் உண்டு. ஆனாலும் விஜி, ரமேஷை தீவிரமாக காதலித்தார்.ஆனால் விஜியின் காதல் கைகூடவில்லை. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த விஜி, கடந்த 27.11.2000 அன்று வீட்டில்தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு ரமேஷுடன் பேசியதை விஜி ஒரு டேப்பில் பதிவு செய்து வைத்திருந்தார். இந்தடேப்பை ஆதாரமாக வைத்து ரமேஷ், அவரது மனைவி சுமதி, நண்பர் சிபி ஆகியோர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.இவர்கள் 3 பேர் மீதும் விஜியை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.இந்த வழக்கு சென்னை மகளிர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. அரசுத் தரப்பில் வழக்கறிஞர்கள் வரலட்சுமி, கெளரிஅசோகன் ஆகியோர் வாதாடினார்கள்.இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதி அருணா ஜெகதீஸன், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்தடைரக்டர் ரமேஷ், அவரது மனைவி சுமதி, நண்பர் சிபி ஆகியோரை விடுதலை செய்து உத்தரவிட்டார்.நடிகை விஜியை தற்கொலைக்கு தூண்டியதாக போலீஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனர். ஆனால் அந்தக் குற்றச்சாட்டுகள்சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்படவில்லை.போதிய ஆதாரங்களை போலீஸார் காட்டவில்லை என்று கூறி 3 பேரையும் நீதிபதிவிடுதலை செய்தார்.

நடிகை விஜி தற்கொலை வழக்கில் டைரக்டர் விடுதலை நடிகை விஜி தற்கொலை வழக்கில் டைரக்டர் ரமேஷ், அவரது மனைவி மற்றும் அவரது நண்பர் சிபி ஆகியோர் விடுதலைசெய்யப்பட்டனர்.கங்கை அமரனின் கோழி கூவுது என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை விஜி. கதாநாயகியாக சுமார் 30படங்களில் இவர் நடித்துள்ளார். திடீரென இவருக்கு கதாநாயகி வாய்ப்பு மங்கியது.இதனால் சிறிது காலம் படவுலகை விட்டு ஒதுங்கியிருந்த இவர், மீண்டும் சரத்குமாரின் சூரியன் படத்தில் பிரபு தேவாவுடன்ஒத்தப் பாட்டுக்கு ஆடினார். இதன் பிறகு ரஜினியின் உழைப்பாளி, விஜய்யின் பூவே உனக்காக ஆகிய படங்களிலும் ஒரேயொருபாடலுக்கு மட்டும் ஆடிவிட்டுப் போனார்.பின்னர் திடீரென இவர் நோய்வாய்ப்பட்டார். அறுவை சிகிச்சையில் ஏற்பட்ட தவறு மூலம் விஜியின் ஒரு கால் செயல் இழந்தது.தீவிர சிகிச்சைக்குப் பிறகு குணமானார்.இதன் பிறகு டிவி தொடர்களில் நடித்து வந்த விஜி, டைரக்டர் ரமேஷ் என்பவரை காதலித்தார். ரமேஷுக்கு சுமதி என்றமனைவியும், குழந்தைகளும் உண்டு. ஆனாலும் விஜி, ரமேஷை தீவிரமாக காதலித்தார்.ஆனால் விஜியின் காதல் கைகூடவில்லை. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த விஜி, கடந்த 27.11.2000 அன்று வீட்டில்தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு ரமேஷுடன் பேசியதை விஜி ஒரு டேப்பில் பதிவு செய்து வைத்திருந்தார். இந்தடேப்பை ஆதாரமாக வைத்து ரமேஷ், அவரது மனைவி சுமதி, நண்பர் சிபி ஆகியோர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.இவர்கள் 3 பேர் மீதும் விஜியை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.இந்த வழக்கு சென்னை மகளிர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. அரசுத் தரப்பில் வழக்கறிஞர்கள் வரலட்சுமி, கெளரிஅசோகன் ஆகியோர் வாதாடினார்கள்.இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதி அருணா ஜெகதீஸன், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்தடைரக்டர் ரமேஷ், அவரது மனைவி சுமதி, நண்பர் சிபி ஆகியோரை விடுதலை செய்து உத்தரவிட்டார்.நடிகை விஜியை தற்கொலைக்கு தூண்டியதாக போலீஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனர். ஆனால் அந்தக் குற்றச்சாட்டுகள்சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்படவில்லை.போதிய ஆதாரங்களை போலீஸார் காட்டவில்லை என்று கூறி 3 பேரையும் நீதிபதிவிடுதலை செய்தார்.

Subscribe to Oneindia Tamil

நடிகை விஜி தற்கொலை வழக்கில் டைரக்டர் ரமேஷ், அவரது மனைவி மற்றும் அவரது நண்பர் சிபி ஆகியோர் விடுதலைசெய்யப்பட்டனர்.

கங்கை அமரனின் கோழி கூவுது என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை விஜி. கதாநாயகியாக சுமார் 30படங்களில் இவர் நடித்துள்ளார். திடீரென இவருக்கு கதாநாயகி வாய்ப்பு மங்கியது.

இதனால் சிறிது காலம் படவுலகை விட்டு ஒதுங்கியிருந்த இவர், மீண்டும் சரத்குமாரின் சூரியன் படத்தில் பிரபு தேவாவுடன்ஒத்தப் பாட்டுக்கு ஆடினார். இதன் பிறகு ரஜினியின் உழைப்பாளி, விஜய்யின் பூவே உனக்காக ஆகிய படங்களிலும் ஒரேயொருபாடலுக்கு மட்டும் ஆடிவிட்டுப் போனார்.

பின்னர் திடீரென இவர் நோய்வாய்ப்பட்டார். அறுவை சிகிச்சையில் ஏற்பட்ட தவறு மூலம் விஜியின் ஒரு கால் செயல் இழந்தது.தீவிர சிகிச்சைக்குப் பிறகு குணமானார்.

இதன் பிறகு டிவி தொடர்களில் நடித்து வந்த விஜி, டைரக்டர் ரமேஷ் என்பவரை காதலித்தார். ரமேஷுக்கு சுமதி என்றமனைவியும், குழந்தைகளும் உண்டு. ஆனாலும் விஜி, ரமேஷை தீவிரமாக காதலித்தார்.

ஆனால் விஜியின் காதல் கைகூடவில்லை. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த விஜி, கடந்த 27.11.2000 அன்று வீட்டில்தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு ரமேஷுடன் பேசியதை விஜி ஒரு டேப்பில் பதிவு செய்து வைத்திருந்தார். இந்தடேப்பை ஆதாரமாக வைத்து ரமேஷ், அவரது மனைவி சுமதி, நண்பர் சிபி ஆகியோர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

இவர்கள் 3 பேர் மீதும் விஜியை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு சென்னை மகளிர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. அரசுத் தரப்பில் வழக்கறிஞர்கள் வரலட்சுமி, கெளரிஅசோகன் ஆகியோர் வாதாடினார்கள்.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதி அருணா ஜெகதீஸன், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்தடைரக்டர் ரமேஷ், அவரது மனைவி சுமதி, நண்பர் சிபி ஆகியோரை விடுதலை செய்து உத்தரவிட்டார்.

நடிகை விஜியை தற்கொலைக்கு தூண்டியதாக போலீஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனர். ஆனால் அந்தக் குற்றச்சாட்டுகள்சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்படவில்லை.போதிய ஆதாரங்களை போலீஸார் காட்டவில்லை என்று கூறி 3 பேரையும் நீதிபதிவிடுதலை செய்தார்.


Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil