விஜய்யின் 'வாள்' பட்ஜெட்டை கேட்டாலே கிறுகிறுக்கிறது: படம் சன் டிவி வசம்
சென்னை: விஜய் ஏ.ஆர். முருகதாதஸ் இயக்கத்தில் நடிக்கும் வாள் படத்தின் பட்ஜெட் தான் அவர் இதுவரை நடித்துள்ள படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் எடுக்கப்படும் படமாம்.
விஜய்யை வைத்து ஏ.ஆர். முருகதாஸ் எடுத்த படம் துப்பாக்கி. துப்பாக்கி படம் ஹிட்டானதை அடுத்து அவர்கள் இருவரும் மீண்டும் சேர்ந்து படம் பண்ண ஆசைப்பட்டனர்.
இதையடுத்து விஜய்யை வைத்து தான் மீண்டும் ஒரு படம் எடுக்கவிருப்பதாக முருகதாஸ் கடந்த நவம்பர் மாதமே அறிவித்தார்.

பிசி
முருகதாஸ் துப்பாக்கி இந்தி ரீமேக்கில் பிசியாக இருந்தார். அதே போல் விஜய் நேசன் இயக்கத்தில் ஜில்லா படத்தில் நடித்து வந்தார். இதனால் அவர்கள் இருவரும் புதுப் பட வேலைகளை உடனே துவங்க முடியாமல் இருந்தது.

பிப்ரவரி
துப்பாக்கி ரீமேக்கை முருகதாஸ் முடித்துவிட்டார். விஜய்யின் ஜில்லாவும் ரிலீஸாகிவிட்டது. இதையடுத்து அவர்கள் இருவரும் சேர்ந்து பணியாற்றும் படத்தின் படப்பிடிப்பு வரும் பிப்ரவரி மாதம் 3ம் தேதி துவங்குகிறது.

சமந்தா
வாள் படத்தின் மூலம் விஜய்யுடன் முதன்முறையாக சமந்தா ஜோடி சேர்கிறார். படத்தை ஐங்கரன் நிறுவனம் தயாரிக்கிறது.

சம்பளம்
படத்தில் ஹீரோ, ஹீரோயின், பிற நடிகர், நடிகைகள், இயக்குனர், இசையமைப்பாளர், தொழில்நுட்ப கலைஞர்களின் சம்பளத்தை கணக்கு போட்டாலே பல கோடிகள் வருகிறதாம்.

கொல்கத்தா
வாள் படத்தின் கதை கொல்கத்தாவில் நடக்கிறதாம். அதனால் படப்பிடிப்பு அங்கு தான் நடக்கவிருக்கிறது. இதற்கு பல கோடிகளை செலவு செய்யவிருக்கிறார்களாம்.

பெரிய பட்ஜெட்
சம்பளம், படப்பிடிப்பு செலவு ஆகியவற்றை கணக்கு போட்டால் விஜய் படங்களிலேயே வாள் தான் அதிக பட்ஜெட்டில் உருவாகும் படமாகும்.

6 மாதம்
முருகதாஸ் படத்தை 6 மாதத்திற்குள் எடுத்து முடிக்க திட்டமிட்டுள்ளார். இடையே மே மாதம் மட்டும் கொஞ்சம் லீவு எடுத்துக் கொண்டு துப்பாக்கி இந்தி ரீமேக்கின் இறுதிகட்ட வேலைகளை பார்க்கச் செல்கிறாராம். வாள் படத்தை ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் செய்ய திட்டுமிட்டுள்ளார்களாம்.

சன் டிவி
படத்தின் தலைப்பு நடிகர், நடிகைகள் தான் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அடுத்த மாதம் தான் படப்பிடிப்பே துவங்க உள்ளது. ஆனால் அதற்குள் வாள் படம் சன் டிவியின் வசம் சென்றுவிட்டது.


Click it and Unblock the Notifications











