வெளியானது தங்கலான் படத்தின் புகைப்படங்கள்.. விக்ரமின் மிரட்டல் பிக்ஸ்!
சென்னை : நடிகர் விக்ரம் நடிப்பில் பா ரஞ்சித் இயக்கிவரும் தங்கலான் படம் கேஜிஎப் மக்களின் வாழ்க்கையை கூறும் வகையில் உருவாகிவருகிறது.
சென்னை உள்ளிட்ட இடங்களில் படத்தின் சூட்டிங் நடைபெற்று வரும் நிலையில் விரைவில் கேஜிஎப்பில் படத்தின் சூட்டிங் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் படத்தின் சூட்டிங் புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் விக்ரம் மிரட்டலான லுக்குடன் காணப்படுகிறார்.

நடிகர் விக்ரம்
நடிகர் விக்ரம் நடிப்பில் கடந்த ஆண்டில் கோப்ரா, பொன்னியின் செல்வன் ஆகிய படங்கள் வெளியாகி மிரட்டலான அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுத்தது. கோப்ரா படத்தில் வித்தியாசமான கெட்டப்புகளில் ரசிகர்களை கவர்ந்த விக்ரம், பொன்னியின் செல்வன் படத்தில் ராஜாவாக மிரட்டினார்.

பொன்னியின் செல்வன் 2 படம்
மணிரத்னம் இயக்கத்தில் கடந்த ஆண்டில் வெளியான பொன்னியின் செல்வன் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில் வரும் ஏப்ரல் 28ம் தேதி படத்தின் இரண்டாவது பாகம் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங் முதல் பாகத்துடனேயே முடிக்கப்பட்ட நிலையில் தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தங்கலான் படம்
இந்தப் படத்திலும் விக்ரமிற்கு சிறப்பாக கேரக்டர் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் என்ற படத்தில் நடித்து வருகிறார் விக்ரம். எப்போதுமே தான் ஏற்று நடிக்கும் படத்திற்காக வித்தியாசத்தை புகுத்திவரும் விக்ரம் இந்தப் படத்திலும் அதை தொடர்ந்துள்ளார்.

விக்ரம் கெட்டப் புகைப்படங்கள்
கோலார் தங்கவயலில் தமிழர்கள் பட்ட துயரத்தை கூறும் வகையில் தங்கலான் படம் பீரியட் படமாக எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது கேஜிஎப்பில் படத்தின் சூட்டிங் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் விக்ரமின் கெட்டப்புடன் கூடிய புகைப்படங்களை இன்றைய தினம் படக்குழு வெளியிட்டுள்ளது.

வித்தியாசமான கெட்டப்
இந்தப் புகைப்படங்களில் வித்தியாசமான தங்கலான் படத்தின் கெட்டப்புடன் விக்ரம் நீச்சல் குளத்தில் குளிப்பது போன்று காணப்படுகிறது. குடுமியுடனும் நீண்ட தாடியுடன் இந்தப் புகைப்படங்களில் விக்ரம் காணப்படுகிறார். விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கேரக்டரில் நடிக்கவிருந்து விக்ரமிற்கு அந்த சான்ஸ் கிடைக்காமல் போன நிலையில், தற்போது சூர்யாவின் ரோலக்ஸ் கேரக்டருடன் நெட்டிசன்ஸ் கம்பேர் செய்து பதிவிட்டு வருகின்றனர்.

சுட்டெரிக்கும் வெயிலில் சூட்டிங்
படத்தில் விக்ரமிற்கு மாளவிகா மோகனன் ஜோடியாகியுள்ளார். பார்வதியும் முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார். இவர்களுக்கும் படத்தில் ஸ்டண்ட் காட்சிகள் அமைந்துள்ளதாம். மேலும் படத்தில் அதிகமான சூட்டிங், சுட்டெரிக்கும் வெயிலில் நடைபெற்று வருகிறதாம். படக்குழுவினரை வறுத்தெடுத்து வருகிறாராம் பா ரஞ்சித்.


Click it and Unblock the Notifications











